Author Archives: adminn

23.04.2023 அன்று நடைபெற்ற 394-வது கூட்டம்

23.04.2023 அன்று நடைபெற்ற 394-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் இலக்கியச்சோலை திங்களிதழ்
இணைந்து நடத்திய சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி – 23.04.2023

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் இலக்கியச் சோலை திங்களிதழ் இணைந்து
நடத்திய சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி மாதாந்திரக் கூட்டமாக 23.04.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர் த.
இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில்
நடைபெற்றது.

திருக்குறள் சொ. பதம்நாபன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, செல்வன் சீ. தனவ்ந்த்
குறட்பாக்கள் சொல்ல, அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக ‘இலக்கியச்சேலை’ ஆசிரியர் சோலை தமிழினியன் நெறிபடுத்தி நடத்திய
‘சித்திரை முதல் பங்குனி’ வரை தலைப்பில் சித்திரைத் திருநாள் சிறப்புக் கவியரங்கம்
நடைபெற்றது. இதில் கவிஞர்கள், முனைவர் கி. ஈஸ்வரி, எஸ்.வீ. இராகவன்,
செல்லப்பா, முனைவர் சத்தியவாடி கோ. இராமலிங்கம், முனைவர் இரா. பூங்கோதை,
பிரபு சுப்பிரமணியம், முனைவர் வீ. புகழேந்தி, சீ. தனலட்சுமி, முனைவர்
பெ. கௌரி, தண்ணீர்க்குளம் தாசன், நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பான முறையில் கவிதைகளை வழங்கினர்.
தொடர்ந்து, ஸ்ருதிலய வித்யாலயா நடனப் பள்ளியின் நிறுவனர் கலைமாமணி திருமதி
பார்வதி பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழும் இசையும்’ தலைப்பில் தேர்ந்தொரு
உரையினை நிகழ்த்தினார். மேலும், டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் எதிர்பாராமல்
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்து தனக்கேயுரிய
பாணியில் நகைச்சுவையும் விழிப்புணர்வும் கலந்தபடி உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கனார் அவர்கள் ‘இலக்கியச்சோலை’ அண்ணாநகர் சிறப்பிதழை
வெளியிட்டார். முதற்பிரதிகளை முறையே அரிமா த.கு. திவாகரன், கவிஞர்
ப. சொக்கலிங்கம், திரு. சஞ்சய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்பு உரையாற்றிய
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் அவர்கள்
கவியரங்கத்தில் கலந்து கொண்ட கவிஞர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார். ‘தமிழும்
இசையும்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்பிரமணியன் அவர்களின் தமிழ்த் தொண்டு, நாட்டியத்திற்கு அவர் ஆற்றி வரும்
தொண்டு இவைகளை பாராட்டி அவரை வாழ்த்தினார்.
தமிழ்ப்பணிக்காவும் சமூக செயல்பாடுகளுக்காவும், ‘சேவைச்செம்மல்’ விருது கோ.
ஞானப்பிரகாசம், ‘குறள்நெறிச்செம்மல்’ விருது திரு. ச. கலியமூர்த்தி, ‘திருக்குறன்
சீர்பரவுவார்’ விருது திரு. சி. பாலுசாமி, ‘தமிழ்ச்செல்வர்’ விருது த. வடிவேலு,
‘பதிப்புச்செம்மல்’ விருது சு. பாரததேவி, ‘சேவைச்செல்வர்’ விருது சி. ஜெயபால்,
‘சேவைச்சுடர்’ விருது க. தனபால், ‘கவில்செல்வர்’ விருது கவிஞர் கா. முருகையன்,
‘செந்தமிழ்ச்செல்வர்’ முனைவர் வீ.சி. கமலக்கண்ணன் ஆகியோருக்கு வழங்கி
சிறப்பிக்கப்பட்டது.
‘இலக்கியச்சோலை’ திங்களிதழ் சார்பில் 10 தமிழ்ச்சான்றோர்கள் புதிதாக சங்கத்தின்
உறுப்பினர்களாக இணைந்தனர். அதற்கான காசோலை ரூ.10,000 சங்கப்
பொருளாளரிடம் வழங்கப்பட்டது. சீரியமுறையில் நடைபெற்ற சித்திரைத் திருநாள் சிறப்பு
நிகழ்ச்சி திரு. ஆர். வாசுதேவன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே
நிறைவுபெற்றது.

19.03.2023 அன்று நடைபெற்ற 393-வது கூட்டம்

19.03.2023 அன்று நடைபெற்ற 393-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.03.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 19.03.2023 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா. முனைவர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள் உலக மகளிர் தினம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் உலக மகளிர் தினம் கொண்டாடுவது குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். முக்கியமாக பிரான்ஸ் நாட்டில் வேலை செய்யும் ஆடவர்களுக்கு அதிக சம்பளமும், அதே வேலையை செய்யும் மகளிருக்கு குறைந்த சம்பளமும் கொடுத்து வந்ததாகவும், அதை எதிர்த்து மகளிர் சரி சமமான சம்மளத்தை கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து போராட்டம் நடத்தினார்கள். யுனெஸ்கோ மன்றம் வரையில் இது எடுத்து செல்லப்பட்டு, யுனெஸ்கோ மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரே மாதிரியான வேலையை செய்யும் ஆடர்வகளுக்கும், மகளிருக்கும் எந்த
வேறுபாடுமின்றி ஒரே சம்பளம் கொடுக்க வேண்டுமென்று அறிவித்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பாடுபட்ட உலகத்தில் உள்ள சிறந்த பெண்மணிகளை குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் கூறினார். தலைவர் பேசுகையில் பாரதியார், பாரதிதாசன் பாடிய பெண்ணுரிமை பாடல்களையும், பெண் அடிமை தனத்தை எதிர்த்து புலவர்கள் பாடிய பாடல்களையும் மேற்கோள் காட்டினார். முன்னதாக செயலாளர் வரவேற்றுப் பேசி அவையில் இருந்த மகளிரை சால்வை அணிவித்துப் பாராட்டினார். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் கண்டு சொல், வென்று செல் நிகழ்ச்சியை நடத்தி பரிசு வழங்கினார். துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

26.02.2023 அன்று நடைபெற்ற 392-வது கூட்டம்

26.02.2023 அன்று நடைபெற்ற 392-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.02.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 26.02.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்ததினராக தமிழறிஞர் திரு. துருவன் அவர்கள் கலந்து
கொண்டு, உலகத் தாய்மொழி நாள் குறித்து விரிவாகப் பேசினார். உலகத்
தாய்மொழி நாள் வருவதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் பிரிவினை.
மேற்கு பாகிஸ்தானுடைய தாய்மொழி வங்க மொழியாகும், அவர்கள் வங்க
மொழியை உருது மொழியோடு இணைத்து அரசு பயன்படுத்துவதற்கு
அங்கீகாரம் கேட்டனர். ஆனால், பாகிஸ்தான் அரசு அதை ஏற்க
மறுத்ததால் போராட்டம் வெடித்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. யுனெஸ்கோ
நிறுவனம் தலையிட்டு சமரசம் செய்து தீர்த்து வைத்தநாள் பிப்ரிவரி 21.
இந்த நாள் உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாளாக
கொண்டாடப்படுகிறது என்று பேசினார்.
தலைவர் தலைமை உரையில் பேசும் உலகத் தாய்மொழி நாள் குறித்தும்,
தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தெளிவாக உரையாற்றினார்.
திரு. சோலை தமிழினியன் அவர்கள் திரு. துருவன் அவர்களை
அறிமுகப்படுத்தியதோடு, புதிதாக இணைந்த கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்ரமணியன் அவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு சில வார்த்தைகள்
பேசுமாறு அழைத்தார்.
சுருதிலயா நாட்டிய வித்யாலயா நிறுவனர் கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு சிறிது
நேரம் உரையாற்றினார்.
முன்னதாக செயலாளர் அவையோர் அனைவரையும் வரவேற்றார்.
துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.

22.01.2023 அன்று நடைபெற்ற 391-வது கூட்டம்

22.01.2023 அன்று நடைபெற்ற 391-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.01.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 391-ஆவது மாதாந்திரக் கூட்டம்
22.01.2023 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமை ஏற்க, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
செயலாளர் அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் தொடக்க
உரை ஆற்றி வரவேற்புரையும் ஆற்றினார். இதனைத் தொடர்ந்து,
செயற்குழு உறுப்பினர் திரு. அ. சீனிவாசன் அவர்களும் வரவேற்புரை
ஆற்றினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு. தணிகாசலம், கந்தசாமி
நாயுடு கல்லூரி பணியாளர் திரு. ராகவலு ஆகியோருக்கு அவர்கள்
இயற்கை எய்தியதாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் திரு. த. இராமலிங்கனார் தம் தலைமை உரையில் சிறப்புச்
சொற்பொழிவார் பேரா. முனைவர் மு. முத்துவேலு, (பதிவாளர், மதிதிய
செம்மொழி ஆய்வு மன்றம்) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பேரா. முத்துவேலு அவர்கள் திருவள்ளுவர் திருநாள் குறித்து சிறப்புரை
ஆற்றினார்.
பேரா. மு.முத்துவேலு அவர்களது சிறப்புரையை பாராட்டியும், வாழ்த்தியும்
திருவாளர்கள் கலியமூர்த்தி, இலக்கியச் சோலை தமிழினியன்இ முயற்சி
முருகேசன், இரா. மோகன சுந்தரம், இல. வெங்கடேசன் ஆகியோர்
பேசினர்.
செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

18.12.2022 அன்று நடைபெற்ற 390-வது கூட்டம்

18.12.2022 அன்று நடைபெற்ற 390-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.12.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 390-ஆவது மாதாந்திரக் கூட்டம்
18.12.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை,
கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றி
சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் தமிழ் இயலன் (இயக்குநர், நான் ஒரு
ஐ.ஏ.எஸ். அகாடமி) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் அவரது குடும்ப
நிகழ்வில் பங்கேற்றதால் அவரது தலைமை உரையை இரா.
மோகனசுந்தரம் படித்தார்.
புலவர் தங்க ஆறுமுகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஒவை நடராசன், புலவர் தங்க ஆறுமுகனார் மனைவி கமலம்மாள்,
செயற்குழு உறுப்பினர் இரா. பூபாலன் ஆகியோரின் மறைவுக்கு மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.
கவிஞர். தமிழ் இயலன் அவர்கள் “புனைந்துரையேன்; பொய்ப்புகலேன்”-
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இராமலிங்க அடிகளார் சமூகப்
புரட்சி செய்தவர் என்றும் பசிப்பிணி போக்கிய மருத்துவர் என்னும் தம்
உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது உரையைப் பாராட்டியும், வாழ்த்தியும் இல. வெங்கடேசன், இரா.
மோகனசுந்தரம், முயற்சி முருகேசன், குடியாத்தம் குமணன்,
ச. கலியமூர்த்தி, அரிமா முனைவர் த.கு. திவாகரன் ஆகியோர் பேசினார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நன்றி கூற கூட்டம் இனிதே
நிறைவுற்றது.

20.11.2022 அன்று நடைபெற்ற 389-வது கூட்டம்

20.11.2022 அன்று நடைபெற்ற 389-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.11.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 389-ஆவது காணொலிக் கூட்டம்
20.11.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை, கந்தசாமி
நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார்.
திரு. முயற்சி முருகேசன் (ஒருங்கிணைப்பாளர் – முப்பா) புதுக்கவிதை – ஒரு
பார்வை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவரது சிறப்புரையை
புலவர் த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜூலு, திரு. வேசு. வேணு
கோபாலன், திருமதி பாரதி தேவி, ச. சலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தியும்,
பாராட்டியும் பேசினர்.
இறுதியாக திருமதி பாரதி தேவி நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

23.10.2022 அன்று நடைபெற்ற 388-வது கூட்டம்

23.10.2022 அன்று நடைபெற்ற 388-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.10.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 388-ஆவது காணொலிக் கூட்டம்
23.10.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி தொடக்க
உரை ஆற்றினார்.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் தலைமை ஏற்று
தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் பேரா. ச. கந்தசாமி (இணைப் பேராசிரியர்
மற்றும் தலைவர், வங்கி மேலாண்மைத் துறை, திருதிங்கால் நாடார்
கல்லூரி, சென்னை – 51) மாக்கவி பாரதியின் கவிடத்திறன் என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
திருவாளர்கள் குடியாத்தம் குமணன், மா. சிவஞானம், மு. ஆறுமுகப்
பெருமாள், ச.ச. மணிமேகலை, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பேரா.
ச. கந்தசாமி அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியாக பேரா. ச. கந்தசாமி ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.

25.09.2022 அன்று நடைபெற்ற 385-வது கூட்டம்

25.09.2022 அன்று நடைபெற்ற 385-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.09.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 385-ஆவது காணொலிக் கூட்டம்
25.09.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்கினார்.
சிறுகதைச் சீமாட்டி கவிஞர் (எழுத்தாளர் லண்டன்) பிரிட்டானியாவில்
புலம்பெயர் படைப்பு இலக்கியம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவரது சிறப்புரையை புலவர் த. இராமலிங்கனார், மு. ஆறுமுகப்
பெருமாள், முனைவர் தண்டபாணி, கண்மதியன், இரா. மோகனசுந்தரம்
ஆகியோர் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவடர்களின் கண்டு சொல் – வென்று செல்
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

21.08.2022 அன்று நடைபெற்ற 384-வது கூட்டம்

21.08.2022 அன்று நடைபெற்ற 384-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.08.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 384-ஆவது இணையவழிக் கூட்டம்
21.08.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்கினார்.
இலக்கியச் சிம்மம், எழுச்சிக் கவிஞர் இர. கங்கை மணிமாறன் (நிறுவனர்,
அருள்பிரகாச வள்ளலார் ஆன்மீகத் தமிழ் மன்றம், மயிலாடுதுறை)
“வையகம் உய்ய வந்த வள்ளலார்” என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவு ஆற்றினார்.
இவரது சிறப்புரையை அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு, புலவர்
த. இராமலிங்கனார் ஆகியோர் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

07-08-2022-அன்று நடைபெற்ற 383-வது கூட்டம்

07-08-2022-அன்று நடைபெற்ற 383-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
07.08.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 383-ஆவது இணையவழிக் கூட்டம்
07.08.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு

புலவர்

த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்ற,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் துவக்க உரை ஆற்றி
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். சிறப்புச் சொற்பொழிவாளர் இலங்கை
இலக்கியன் வே. ஞானசம்பந்தன் (விரிவுரையாளர்) இருதலைப் புள்ளின்
ஓர் உயிர் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவரது
சிறப்புரையைப் பாராட்டி இவருக்கு இலங்கை இலக்கியன் என்னும் விருது
வழங்கப்பட்டது.
கம்பநேசன், நாமதேவ், வை. குமரேசன், மா. சிவஞானம்,
(ஆஸ்திரேலியா), மு. ஆறுமுகப் பெருமாள், ஸ்ரீமதி, ராமச்சந்திரன் மற்றும்
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி (இலங்கை) மாணவர்களும்
சிறப்புரை நிகழ்த்திய வே. ஞானசம்பந்தன் அவர்களை பாராட்டியும்
வாழ்த்தியும் பேசினர்.
திரு. வே. ஞானசம்பந்தன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.