16.02.2025 அன்று நடைபெற்ற 415-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 16.02.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 415-ஆவது
பிப்ரவரி மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் பிப்ரவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 16.02.2025 அன்று நடைபெற்றது.

திருக்குறள் சொ. பத்மநாபன் தமிழ் தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.

செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அமுதா மெட்ரிக் மேநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தனது கொஞ்சும் மழலை மொழியில் இந்திய குடியரசு தினம் குறித்து பேசினார்.

தொடர்ந்து ‘தியாகச் செம்மல் தியாகராஜ பாகவதர் ‘தலைப்பில் கவிச்சுடர் டாக்டர் கார்முகிலோன் சிறப்புரையாற்றினார். சேலை தமிழினியன் அறிமுகவுரையாற்றினார்.

அண்மையில்ய ஸ்ரீராமம் பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்திய பாரதி விழாவில் நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் இரா. மோகனசுந்தரம் அவர்களின் துணைவியார் திருமதி . கலைமணி அவர்களுக்கு ‘பாரதி அறிஞர்‘ விருது வழங்கப்பட்டது. அதனை முன்னிட்டு அன்னாருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு செய்யப்பட் திரு. ஜெயமால் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுறது