23.04.2023 அன்று நடைபெற்ற 394-வது கூட்டம்

23.04.2023 அன்று நடைபெற்ற 394-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் இலக்கியச்சோலை திங்களிதழ்
இணைந்து நடத்திய சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி – 23.04.2023

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் இலக்கியச் சோலை திங்களிதழ் இணைந்து
நடத்திய சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி மாதாந்திரக் கூட்டமாக 23.04.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர் த.
இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில்
நடைபெற்றது.

திருக்குறள் சொ. பதம்நாபன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, செல்வன் சீ. தனவ்ந்த்
குறட்பாக்கள் சொல்ல, அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக ‘இலக்கியச்சேலை’ ஆசிரியர் சோலை தமிழினியன் நெறிபடுத்தி நடத்திய
‘சித்திரை முதல் பங்குனி’ வரை தலைப்பில் சித்திரைத் திருநாள் சிறப்புக் கவியரங்கம்
நடைபெற்றது. இதில் கவிஞர்கள், முனைவர் கி. ஈஸ்வரி, எஸ்.வீ. இராகவன்,
செல்லப்பா, முனைவர் சத்தியவாடி கோ. இராமலிங்கம், முனைவர் இரா. பூங்கோதை,
பிரபு சுப்பிரமணியம், முனைவர் வீ. புகழேந்தி, சீ. தனலட்சுமி, முனைவர்
பெ. கௌரி, தண்ணீர்க்குளம் தாசன், நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பான முறையில் கவிதைகளை வழங்கினர்.
தொடர்ந்து, ஸ்ருதிலய வித்யாலயா நடனப் பள்ளியின் நிறுவனர் கலைமாமணி திருமதி
பார்வதி பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழும் இசையும்’ தலைப்பில் தேர்ந்தொரு
உரையினை நிகழ்த்தினார். மேலும், டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் எதிர்பாராமல்
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்து தனக்கேயுரிய
பாணியில் நகைச்சுவையும் விழிப்புணர்வும் கலந்தபடி உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கனார் அவர்கள் ‘இலக்கியச்சோலை’ அண்ணாநகர் சிறப்பிதழை
வெளியிட்டார். முதற்பிரதிகளை முறையே அரிமா த.கு. திவாகரன், கவிஞர்
ப. சொக்கலிங்கம், திரு. சஞ்சய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்பு உரையாற்றிய
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் அவர்கள்
கவியரங்கத்தில் கலந்து கொண்ட கவிஞர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார். ‘தமிழும்
இசையும்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்பிரமணியன் அவர்களின் தமிழ்த் தொண்டு, நாட்டியத்திற்கு அவர் ஆற்றி வரும்
தொண்டு இவைகளை பாராட்டி அவரை வாழ்த்தினார்.
தமிழ்ப்பணிக்காவும் சமூக செயல்பாடுகளுக்காவும், ‘சேவைச்செம்மல்’ விருது கோ.
ஞானப்பிரகாசம், ‘குறள்நெறிச்செம்மல்’ விருது திரு. ச. கலியமூர்த்தி, ‘திருக்குறன்
சீர்பரவுவார்’ விருது திரு. சி. பாலுசாமி, ‘தமிழ்ச்செல்வர்’ விருது த. வடிவேலு,
‘பதிப்புச்செம்மல்’ விருது சு. பாரததேவி, ‘சேவைச்செல்வர்’ விருது சி. ஜெயபால்,
‘சேவைச்சுடர்’ விருது க. தனபால், ‘கவில்செல்வர்’ விருது கவிஞர் கா. முருகையன்,
‘செந்தமிழ்ச்செல்வர்’ முனைவர் வீ.சி. கமலக்கண்ணன் ஆகியோருக்கு வழங்கி
சிறப்பிக்கப்பட்டது.
‘இலக்கியச்சோலை’ திங்களிதழ் சார்பில் 10 தமிழ்ச்சான்றோர்கள் புதிதாக சங்கத்தின்
உறுப்பினர்களாக இணைந்தனர். அதற்கான காசோலை ரூ.10,000 சங்கப்
பொருளாளரிடம் வழங்கப்பட்டது. சீரியமுறையில் நடைபெற்ற சித்திரைத் திருநாள் சிறப்பு
நிகழ்ச்சி திரு. ஆர். வாசுதேவன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே
நிறைவுபெற்றது.