

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
21.12.2025 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
425-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 425-ஆவது மாத
நிகழ்ச்சியானது மாக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் 144-
ஆவது பிறந்தநாள் விழாவாக 21.12.2025 அன்று
அண்ணாநகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சங்கத்தலைவர்
புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்க, மாக்கவி
பாரதியார் அன்றும் இன்றும் என்றும் தலைப்பில் பாரதியார்
சங்கத் தலைவர் முனைவர் உலகநாயகி பழனி
சிறப்புரையாற்றினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு
அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணாநகர் ஜெயகோபால்
கரோடியா வித்யாலயா மாணவ மாணவிகளின் பேச்சரங்கம்,
பாட்டரங்கம் நடைபெற்றது. மாணவ மாணவியர்க்குச்
சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா
பாலகிருஷ்ணன், திருமதி பாரததேவி ஆகியோரும் இணைச்
செயலாளர் திரு. த. வடிவேலு மற்றும் பேராசிரியர் முனைவர் கி.
ஈஸ்வரி ஆகியோரும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியின்
முத்தாய்ப்பாக, சங்கத் தலைவர் சுமார் 70 ஆண்களாகப்
பத்திரப்படுத்தி வைத்திருந்த பாரதியார் படத்தைக் கொண்டு வந்து
நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.
திரு. சோலை தமிழினியன் தொகுத்து வழங்க, சங்கத்தின்
பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
