

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
16.11.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
424-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 424-ஆவது கூட்டம்
குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியாக 16.11.2025 அன்று
நடைபெற்றது.
மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, சங்கத் தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் நிகழ்ச்சிக்கு
தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் கலந்து
கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த
20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட
பேச்சரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இதனை சோலை
தமிழினியன் நெறிபடுத்தி நடத்டிதினார். மாணவ
மாணவிகளுக்கு பரிசுகளை சங்கத்தின் இணைச் செயலாளர்
திரு. த. வடிவேலு வழங்கினார்.
சங்கத்தின் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம்
நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
