20.10.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

20.10.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 20.10.2024 அன்று நடைபெற்றது.

20.10.2024 அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 411-ஆவது மாதாந்திர கூட்டம் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர்த.இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது.

திருமதி தமிழ்ச்செல்வ ஜெயபால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். சங்கச் செயலாளர் அரிமா துரை, சுந்தரராஜுலு அனைவரையும் வரவேற்றார்.

தலைவர் புலனர் த. இராமலிங்கம் தனது முன்னுரையில் சிறப்பு விருந்தினர் திரு. சுரானந்தா என்கிற சுப்புராஜ் அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

திரு. சோலை தமிழினியன் அவர்கள் திரு. சுரானந்தா அவர்கள் எழுதிய “பயணம் தொடர்கிறது ஆனால் பயணி இறந்துவிட்டான்” என்ற நூலைப் பற்றி வெகு சிறப்பாக ஆய்வுரை செய்தார். அதிலுள்ள சிறப்பு அம்சங்களை கோட்டிட்டுக் காட்டினார்.

பின்னர் ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் இந்த நூல் எழுதுவதற்கு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி நூலின் சிறப்பான அம்சங்ளை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக திருமதி தமிழ்ச்செல்வி ஜெயபால் நன்றியிரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது