Author Archives: adminn

25-07-2022-அன்று நடைபெற்ற 382-வது கூட்டம்

25-07-2022-அன்று நடைபெற்ற 382-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.07.2022 அன்று நடைபெற்ற கூட்டம்

திரு. இளவரசு அமிழ்தன் – திருமதி லீலாவதி தமிபதியனரின் மணிவிழா
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 382-ஆவது காணொலிக் கூட்டம்
25.07.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் மற்றும் முத்தமிழ் ஆய்வுமன்றம்
இணைந்து நடத்திய செம்மல் இளவரசு அமிழ்தன் லீலாவதி
தமிபதியனரின் மணிவிழா சிறப்பாக கொண்டாப்பட்டது. மாண்புமிகு
நீதியரசர் சு. இராஜேஸ்வரன், மேனாள் அரசவைக் கவிஞர்
முத்துலிங்கம், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இரத்தினசபாபதி,
நற்றமிழ் கவிஞர் நா. பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை. வசந்தராசன்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. முத்தமிழ் ஆய்வுமன்றத்
தலைவர் தமிழழகன் வாழ்த்திப் பேசினார்.
செயலளார் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்ற, திரு.
கோ.
ஞானப்பிரகாசம் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

17-07-2022-அன்று நடைபெற்ற 381-வது கூட்டம்

17-07-2022-அன்று நடைபெற்ற 381-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.07.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 381-ஆவது காணொலிக் கூட்டம்
17.07.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்ற, அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராக துவக்க உரை ஆற்றினார். துவக்க உரையில்
சிறப்புச் சொற்பொழிவாளர் சுவிட்சர்லாந்தின் சொல்வளனார் க.
அருந்தவராஜா (தலைவர், ஜெனிவா கலை இலக்கியப் பேரவை)
அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். க. அருந்தவராஜா
அவர்கள் சுவிட்சர்லாந்தில் தமிழர்களின் நிலைப்பாடு என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
துரை. சுந்தரராஜூலு, கோ. ஞானப்பிரகாசம், இரா. தண்டபாணி,
மா. சிவஞானம், ச. கலியமூர்த்தி, பாரததேவி, விஜயலட்சுமி
அம்மையார், முருகையன், மு. ஆறுமுகப்பெருமாள், த. வடிவேலு,
து.சீ. இராமலிங்கம் ஆகியேவார் சிறப்புரை ஆற்றிய திரு. க.
அருந்தவராஜா அவர்களோடு கலந்துரையாடிய பின்னர் அவரது
சிறப்புரையை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.

19-06-2022-அன்று நடைபெற்ற 380-வது கூட்டம்

19-06-2022-அன்று நடைபெற்ற 380-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.06.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 380-ஆவது காணொலிக் கூட்டம்
19.06.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவாளர்
வழக்கறிஞர் பாடுமீன் சு. ஸ்ரீ கந்தராசா (ஆஸ்திரேலியா) அவர்களை
திரு. திவாகரன் அறிமுகம் செய்தார். சு. ஸ்ரீகந்தராசா அவர்கள் “கங்காரு
நாட்டில் கால்பதித்த தமிழர்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
துரை, சுந்தரராஜூலு, புலவர் த. இராமலிங்னார், பாத்திமா மைந்தன்,
கௌரி சங்கர், தெர்மா டாக்டர் தண்டபாணி, சிவன் ஷான் (ஆஸ்திரேலியா),
இ.ஜெ. சுந்தர், சிவஞானம் (ஆஸ்திரேலியா), து.சீ. இராமலிங்கம்
ஆகியோர் சிறப்புரையாற்றிய திரு. சு. ஸ்ரீ கந்தராசா அவர்களைப்
பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
திரு. சு. ஸ்ரீ கந்தராசா ஏற்புரை ஆற்றினார்.
பின்னர் “கண்டு சொல்-வென்று செல்” என்னும் நிகழ்ச்சி பேரா. பு.பெ.
இராமசாமி அவர்களால் நடத்தப்பட்டது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

12-06-2022-அன்று நடைபெற்ற 379-வது கூட்டம்

12-06-2022-அன்று நடைபெற்ற 379-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
12.06.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 379-ஆவது இணையவழிக் கூட்டம்
12.06.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கம்
தலைமையில் கூடியது.
துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து சிறப்பு
சொற்பொழிவாளர் பேராசிரியர் முனைவர் பெ. கௌரி, தமிழ்த்துறை,
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அவர்களை அறிமுகம் செய்து உரை
ஆற்றினார்.
முனைவர் பெ. கௌரி, பாரதியின் “ஒளிபத்த கண்ணினாய் வா! வா!”
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
புலவர் த. இராமலிங்னார், துரை, சுந்தரராஜூலு, முயற்சி முருகேசன்,
மா. சிவஞானம் (ஆஸ்திரேலியா), குடியாத்தம் குமணன், து.சீ.
இராமலிங்கம், மறத்தமிழன், மு. ஆறுமுகப் பெருமாள், திருமதி பாரததேவி,
ச. கலியமூர்த்தி, முனைவர் க. ரேவதி ஆகியோர் முனைவர் பெ. கௌரி
அவர்களின் உரையைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல்-வென்று செல்”
என்னும் நிகழ்ச்சியை நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

29-05-2022-அன்று நடைபெற்ற 378-வது கூட்டம்

29-05-2022-அன்று நடைபெற்ற 378-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
29.05.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 378-ஆவது கூட்டம் 29.05.2022 ஞாயிறு
காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கம் தலைமையில் கூடியது.
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து சிறப்பு
சொற்பொழிவாளர் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யம் (சட்டம், இதழியல் மற்றும்
தொப்பியல் துறையில் ஆய்வறிஞர்) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கம்பனில் காதல் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
புலவர் த. இராமலிங்னார், துரை, சுந்தரராஜுலு, எல்ல. கிருஷ்ணமூர்த்தி,
புலவர் விஜயலட்சுமி, மறை. தாயுமானவன், து.சீ. இராமலிங்கம், சரஸ்வதி
அம்மாள் (மலேசியா), இராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் (அமெரிக்கா),
முனைவர் க. ரேவதி, த. வடிவேலு, பிரியா மற்றும் அவரது கணவர் ச.
கலியமூர்த்தி, பு.பெ. இராமசாமி ஆகியோர் சந்திரிகா சுப்பிரமண்யம்
அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
இறுதியாக சிறப்புச் சொற்பொழிவாளர் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

08-05-2022-அன்று நடைபெற்ற 377-வது கூட்டம்

08-05-2022-அன்று நடைபெற்ற 377-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.03.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 19.03.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பேரா. முனைவர் மணிமேகலை சித்தார்த்தன்
அவர்கள் உலக மகளிர் தினம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் உலக மகளிர் தினம் கொண்டாடுவது குறித்து பல்வேறு
தகவல்களை கூறினார். முக்கியமாக பிரான்ஸ் நாட்டில் வேலை செய்யும்
ஆடவர்களுக்கு அதிக சம்பளமும், அதே வேலையை செய்யும் மகளிருக்கு
குறைந்த சம்பளமும் கொடுத்து வந்ததாகவும், அதை எதிர்த்து மகளிர் சரி
சமமான சம்மளத்தை கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து
போராட்டம் நடத்தினார்கள். யுனெஸ்கோ மன்றம் வரையில் இது எடுத்து
செல்லப்பட்டு, யுனெஸ்கோ மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரே
மாதிரியான வேலையை செய்யும் ஆடர்வகளுக்கும், மகளிருக்கும் எந்த
வேறுபாடுமின்றி ஒரே சம்பளம் கொடுக்க வேண்டுமென்று அறிவித்த நாள்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பாடுபட்ட உலகத்தில் உள்ள சிறந்த
பெண்மணிகளை குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் கூறினார்.
தலைவர் பேசுகையில் பாரதியார், பாரதிதாசன் பாடிய பெண்ணுரிமை
பாடல்களையும், பெண் அடிமை தனத்தை எதிர்த்து புலவர்கள் பாடிய
பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.
முன்னதாக செயலாளர் வரவேற்றுப் பேசி அவையில் இருந்த மகளிரை
சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் கண்டு சொல், வென்று செல்
நிகழ்ச்சியை நடத்தி பரிசு வழங்கினார்.
துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.

24-04-2022-அன்று நடைபெற்ற 376-வது கூட்டம்

17-04-2022-அன்று நடைபெற்ற 375-வது கூட்டம்

17-04-2022-அன்று நடைபெற்ற 375-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.04.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 375-ஆவது காணொலிக் கூட்டம்
17.04.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்ற, அரிமா முனைவர் த.கு.
திவாகரன் தொடக்க உரை ஆற்றிச் சிறப்புச் சொற்பொழிவாளர் பாவலர்
கவிப்பாவை திருமதி சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி (பிரான்சு) அவர்களை
அறிமுகம் செய்து வைத்தார்.
திருமதி சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி புரட்சிச் கவிஞர் பாரதிதாசன் விழாவினை
ஒட்டி “பாவேந்தர் பாரதிதாசன் போன்றிய பெண்ணியம்” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
1938-ல் பெண்ணுலகு, பெண்கள் சீர்திருத்தம் குறித்த நூல்களை
எழுதியுள்ளார். பெர்னாட்ஷா பெண்ணியத்தைப் பற்றி கூறுவது போன்று
பாரதிதாசனும் நூல்கள் எழுதினார். குடும்ப விளக்கு புரட்சிப் பெண் என்னும்
நூல்களில் பெண்களைப் பாராட்டி எழுதினார். சமுதாய அவலங்களைப்
பிணைத்தும் வீரம் பற்றியும் கவிதைகள் எழுதி உள்ளார். கைம்மை பற்றி
கவிதை எழுதி உள்ளார்.
இவர் ஒரு செம்மாந்த கவிஞர். மறுமணம், பெண்கல்விகுறித்த கவிதைகள்
மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். பெண்கல்வி இல்லை
என்றால் சமுதாயம் தடம் மாறிப் போகும் என்பதையும் வாழ்வியல்
சிந்தனைகள் பற்றியும் கவிதைகளில் கூறியுள்ளார். செவ்விய வாழ்வு வாழ
வேண்டும் என்னும் பண்புள்ளவர், பழந்தமிழ் மரபினை ஒட்டி புதுமைகளைப்
புகுத்தியவர்.
திருவாளர்கள் துரை. சுந்தரராஜுலு, ச. கலியமூர்த்தி, து.சீ. இராமலிங்கம், மா.
சிவஞானம், சந்தியா, மணிமேகலை, முருகையன், மு. ஆறுமுக பெருமாள், த.
வடிவேலு ஆகியோர் சிறப்புரையை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
சிறப்புரையாற்றிய திருமதி. சாவித்திரி கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

20-03-2022-அன்று நடைபெற்ற 374-வது கூட்டம்

20-03-2022-அன்று நடைபெற்ற 374-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.03.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 374-ஆவது காணொலிக் கூட்டம்
20.03.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமை உரை ஆற்ற நடைபெற்றது
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்தார்.
செயலாளர் வரவேற்புரையில் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள்
43-ஆவது திருமண நாள் விழா கொண்டாடியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இணைச் செயலாளர் திரு. த. வடிவேலு அவர்களின் தாயார் திருமதி
இராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் மறைவு ஒட்டி அவருக்குச் சிலமணித்
துளிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு சொற்பொழிவாளர் கல்வி ரத்னா, அம்பாசிடர் முனைவர் ரவி.
கோவிந்தராஜ் அவர்களை அறிமுகம் செய்தார். முனைவர் ரவி. கோவிந்தராஜ்
அவர்கள் மனிதவேள மேம்பாட்டு பயிற்சி துறையிலும், கத்தார் ஆம்பல்
தமிழ்ச்சங்கத்திலும் தலைவராக உள்ளார். ஆம்பால் போல வாழும் தமிழும்,
தமிழனும் என்றும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
நூல்களைப் படிப்பர்களே தலைமை தாங்கம் பண்பு கொண்டவர்கள். தகடூர்
அதியமானும் ஒவையாரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.
தொண்டை மண்டலத்திற்கு தூதுவராகச் சென்று போரை தடுத்து நிறுத்திவயர்.
உழவர் பெருமக்கள் போற்றும் நாள் பொங்கல் பண்டிகையாகும். மாட்டுப்
பொங்கல் கொண்டாடுவது மனிதநேயப் பண்பாட்டைக் குறிக்கிறது.
இவரது சிறப்புரையை துரை. சுந்தரராஜூலு, புலவர் த. இராமலிங்கம், ஸ்ரீமதி,
சுரேஷ் (நாமக்கல்) து.சீ. இராமலிங்கம், மணிமேகலை ஜோதிமணி, பேரா. க.
ரேவதி, மு. ஆறுமுகப்பெருமாள், சாந்தகுமாரி எத்திராசன், த.கு. திவாகரன்,கண்மதியன், விருதுநகர் ஆம்பல் தமிழ்ச்சங்கம், பசுபதி, துபாய் சந்தியா,
மறத்தமிழன் ஆகியோர் பாராட்டியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
முனைவர் ரவி. கோவிந்தராஜ் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

06-03-2022-அன்று நடைபெற்ற 373-வது கூட்டம்

06-03-2022-அன்று நடைபெற்ற 373-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
06.03.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 373-ஆவது இணையவழிக் கூட்டம்
06.03.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
செயலாளர் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் சிறப்புப்
பட்டிமனிறத்தில் பங்கு பெறுவோர் மற்றும் நடுவர் கவிஞர் தூயவன் குறித்து
அறிமுக உரை ஆற்றினார். மகளிர் தினத்தை ஒட்டி (8.3.2022) மகளிருக்கு
மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இன் கூட்டத்தில் சிறப்புப் பட்டிமன்றம் செந்தமிழ்ச் செல்வன் கவிஞர் தூயவன்
நடுவராக விளங்க இன்றைய இளைஞர்கள் தமிழை அரவணைக்கிறார்களா!
புறக்கணிக்கிறார்களா! என்னும் தலைப்பில் நடைபெற்றது.
புறக்கணிக்கிறார்கள் என்னும் தலைப்பில் இடம் பெற்றோர்:
1) ப. பவித்ரா, B.A., அரியலூர்

2) கி. அஸ்வினி, B.A.,கவசம்பட்டு

3 ரா. மோனிஷா, B.A.,ஆரணி
அரவணைக்கிறார்களா என்னும் தலைப்பில் இடம் பெற்றோர்:
1) சௌமியா சிவராஜ், B.Com., MBA.

2) மு. கிருத்திகா, M.Sc., சேலம்

3) நா. பிரீத்தா, B.Sc., குமாரபாளையம்
இரு அணியினரும் தமது அணியின் சார்பாக சிறப்பாக வாதாடினார்கள். இரு
அணியினரின் வாதத்திறமை மிகவும் அருமையாக இருந்தது. இரு தரப்பு
அணியினரின் விவாதங்களை கேட்ட நடுவர் அவர்கள் செந்தமிழ்த் திருத்தேர்
என்ற அமைப்பும் தூய தமிழ்ப் பற்றாளர்களை ஒருவாக்குவதாகக் கூறி
இன்றைய இளைஞர்கள் தமிழை அரவணைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
என்று தீர்ப்பை வழங்கினார்.

செயலாளர் துரை. சுந்தரராஜுலு, ஜீவகன், சுரேஷ் சுப்பிரமணியம், திரு.வி.க.
பேச்சுப் பயிலரங்கம், மணிமேகலை, கண்மதியன், சரண்யா ஆகியோர்
பட்டிமன்ற நிகழ்வைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.