அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 426-ஆவது மாத நிகழ்ச்சி 18.01.2026 அன்று நடைபெற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 426-ஆவது மாத நிகழ்ச்சியானது தமிழர் திருநாள் விழாவாக 18.01.2026 அன்று அண்ணாநகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்க, திரு. சோலை தமிழினியன் வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக, சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு அவர்களின் வழிகாட்டுதலின்படி பொங்கல் தின சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்டிதிற்கு கவிஞர் இரா. சக்கரபாணி தலைமை தாங்கினார். கவிஞர்களுக்கு சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் திரு. த. வடிவேலு ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.12.2025 அன்று நடைபெற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 425-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 425-ஆவது மாத நிகழ்ச்சியானது மாக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் 144- ஆவது பிறந்தநாள் விழாவாக 21.12.2025 அன்று அண்ணாநகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சங்கத்தலைவர் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்க, மாக்கவி பாரதியார் அன்றும் இன்றும் என்றும் தலைப்பில் பாரதியார் சங்கத் தலைவர் முனைவர் உலகநாயகி பழனி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா வித்யாலயா மாணவ மாணவிகளின் பேச்சரங்கம், பாட்டரங்கம் நடைபெற்றது. மாணவ மாணவியர்க்குச் சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரததேவி ஆகியோரும் இணைச் செயலாளர் திரு. த. வடிவேலு மற்றும் பேராசிரியர் முனைவர் கி. ஈஸ்வரி ஆகியோரும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, சங்கத் தலைவர் சுமார் 70 ஆண்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த பாரதியார் படத்தைக் கொண்டு வந்து நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.
திரு. சோலை தமிழினியன் தொகுத்து வழங்க, சங்கத்தின் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 16.11.2025 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 424-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 424-ஆவது கூட்டம் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியாக 16.11.2025 அன்று நடைபெற்றது.
மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, சங்கத் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இதனை சோலை தமிழினியன் நெறிபடுத்தி நடத்டிதினார். மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை சங்கத்தின் இணைச் செயலாளர் திரு. த. வடிவேலு வழங்கினார்.
சங்கத்தின் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 28-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 14.09.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணாநகர், கந்தசாமி நாயுடு கல்லூயில் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு நிகழ்ச்சி நிரலை அவைக்கு அளித்தார். கீழ்கண்ட அலுவல்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன :-
2024-2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் செயலளார் திரு. துரை. சுந்தரராஜூலு அளித்தார். திரு. D. பன்னீர்செல்வம் முன்மொழிய இரா. மோகனசுந்தரம் வழிமொழிய ஆண்டறிக்கை பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
31.03.2025-ஆம் ஆண்டு முடிய தணிக்கைச் செய்யப்பட்ட கணக்குகளை பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அளித்தார். திரு. முயற்சி முருகேசன் முன்மொழிய திரு. சி. ஜெயபால் வழிமொழிய ஆண்டுக் கணக்குகள் பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2025-2026-ஆம் ஆண்டுக்கான தணிக்கையாளராக திரு. D. சரத்குமார் அவர்களை நியமனம் செய்யலாம் என்றும் அவரது ஊதியத்தை ரூ.4,000/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இந்த நிதியாண்டு முதல் அளிக்கலாம் என்ற செயற்குழுவின் பரிந்துரையை திரு. பு.பெ. இராமசாமி முன்மொழிய திரு. த.கு. திவாகரன் வழிமொழிய பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டத்தின் அடுத்த நிகழ்வாக அகவை 80-ஐ நிறைவு செய்த கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசும், சால்வையும் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
1.திரு. ம.ச. பாலசுப்பிரமணி 2.திரு. தி. செல்வராஜ் 3.திரு. வை. குமரேசன் 4. திரு. க. தனபால் 5.திருமதி கி. ஏழிசைவல்லி 6.Dr. T.K. செங்குட்டுவேல் 7.திரு. சி. வெங்கட்ராம் 8.திரு. ஜெ. ஜானகிராமன்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு “தாய்த் தமிழ் விருது-2025” கிடைப்பதற்கான முன்மொழிவுகளை தக்க ஆவணங்களுடன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களை அவரது அலுவலகத்தில் 2.9.2025-ஆம் நாள் சந்தித்து, பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் மற்றும் சோலைத் தமிழினியன் ஆகியோருடன் இணைந்து புலவர் த.கு. திவாகரன் அளித்தது குறித்த தகவலை அளித்தார். தமிழ் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனமும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பக நிறுவனமும் இணைந்து 90-அகவை நிரம்பிய தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் 05.09.2025-ஆம் நாள் அன்று வாணி மகாலில் விழா எடுத்து, அவ்விழாவில் அண்ணநாகர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் அவர்களுக்கு சிறப்பு செய்து பாராட்டப்பட்டது. அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அவரைப்பாராட்டிச் சிறப்பு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது
17.08.2025 அன்று நடைபெற்ற 421 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது
17.08.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 421-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 421-ஆவது மாத நிகழ்ச்சியானது 17.08.2025 அன்று நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றினார். நிகழ்ச்சியில், வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் மருத்துவம் என்ற தலைப்பில் சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநரும், “டாக்டர் வள்ளுவர்” நூலின் ஆசிரியருமான டாக்டர் முருகு சுந்தரம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு தமிழ்க் கடிகாரமும், சோலைப் பதிப்பகம் சார்பில் புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இதனை, சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு, கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், சோலை தமிழினியன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் இம்மாதம் புதிதாக உறுப்பினராக இணைந்த திருமதி. க. ஜெயஸ்ரீ சிறப்பிக்கப்பட்டார். சங்கத்திற்கு அறிமுகம் செய்த, சங்க இணைச் செயலாளர்த. வடிவேலு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். நமது சங்க செயற்குழு உறுப்பினரும் இலக்கியசோலை திங்களிதழின் ஆசிரியருமான சோலை தமிழினியன் அவர்களுக்கு சிறந்த சிற்றிதழுக்கான விருதினை தேனி கம்பம் பாரதி இலக்கியப் பேரவை 15.08.2025 அன்று வழங்கி சிறப்பித்தது. அவரைப் பாராட்டும் விதமாக சங்கத்தின் செயலாளர் சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள் கேள்வி நேரம் நடந்தேறியது. சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 20.07.2025 அன்று நடைபெற்றது
20.07.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 420-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.07.2025 அன்று சென்னை, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி அரங்கில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்வும் நடந்தேறியது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார். “பெருங்கவிக்கோவின் பெருஞ்சுவர்” நூலினை பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வெளியிட முதற்பிரதியினை திருமதி. பாரததேவி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் தலைமை ஏற்க, செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை நல்கினார். இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் தொகுத்து வழங்க, பேராசிரியர் இராம. குருநாதன், எல்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தமிழியலன், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், அரிமா த.கு. திவாகரன், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நினைவுரை நிகழ்த்தினர். ஏற்புரையாக வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களும், முனைவர் வா.மு.சே. ஆண்டவர் அவர்களும் நிகழ்த்தினர். கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்.
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது
15.06.2025 அன்று நடைபெற்ற 419 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 419-ஆவது மாத நிகழ்ச்சி அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 419-ஆவது மாத நிகழ்ச்சியானது 15.06.2025 அன்று நடைபெற்றது. திருக்குறள் தூதுவர் திரு. சொ. பத்மநாபன் தமிழ் வாழ்த்துப் பாட, அண்மையில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் நீத்த 272 பேருக்கும் நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் 98-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு “நான் நிரந்தரமானவன்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் தேன்மொழி எத்துராசன் சிறப்புரையாற்றினார். இவர் திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற “தாடி’ எத்துராசன் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ம.வே. மாணிக்கவாசகம் எழுதிய “வெளிச்ச வேர்கள்” நூல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. நூலினை கலைமாமணி ஏர்வாடியார் அறிமுகம் செய்ய அரிமா த.கு. திவாகரன் முதற் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். நூல் குறித்து கவிஞர் துருவன் பேசினார். சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள் கேள்வி நேரம் நடந்தேறியது. சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது
18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 418-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 418-ஆவது ஏப்ரல் மாத நிகழ்ச்சியானது 18.05.2025 அன்று நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு, தலைமையேற்று வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ‘அமெரிக்காவில் தமிழ்” என்னும் தலைப்பில் பேராசிரியர் இ.ஜே. சுந்தர் சிறப்புரையாற்றினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் 92-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு “காலமெல்லாம் கவிஞர்” என்னும் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பேரூரை நிகழ்த்தினார். சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
20.04.2025 அன்று நடைபெற்ற 417-ஆவது மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 417-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 417-ஆவது ஏப்ரம் பாத நிகழ்ச்சியானது 20.04.2025 அன்று நடைபெற்மது . வழக்கறிஞர் க. ஜெகதீஸ்வரன் தமிழ்ந்தாய் வாழ்த்து பாட சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜீலு வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் ‘முயற்சி‘ முருகேசன் தலையைபில் ‘கோடைக் கவியரங்கம்‘ நடைபெற்றது. அதில், சுமத்ரா கோவிந்தசாமி, முனைவர் இரா. பூங்கோதை, இரா. சக்கரபாணி, வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன். அதியமான். நா. விவேகானந்தன். ஓட்டேரி செல்வக்குமார். கல்யாணராமன் நாகராசன், நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கவிஞர்களுக்கு ‘கோடைக்கன்ஞர்‘விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியி, து.சீ.இராமலிங்கம் அவர்களுக்கு ‘கவிச்செல்வர்‘ விருதும் திருமதி ஏழிசைவல்லி அவர்களுக்கு ‘நிர்வாகச் செல்வர்‘ விருதம். ‘எஸ்.கே. அகாடெமி எஸ். கமல் அவங்களுக்கு ‘சாதனைச் செல்வர்‘ விருதும் திருமதி யாசிதம்யுகளுள்விச் செல்வர்‘ விருதும், திரு. கே.மணி அவர்களுக்கு ‘சோலைச்சுடர்‘ விருகும் வழங்கப்பட்டன.
சங்கத்தின் பொருளாளர் கோ. யூசாப்பிரகாசம் நன்றியுரையாற்ற முநகழ்ச்சி இனிதே நிறைவற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்மாதாந்திர கூட்டம்20.04.2025 அன்று நடைபெற்றது
16.03.2025 அன்று நடைபெற்ற 416-ஆவது மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத நிகழ்ச்சியானது 16.03.2025 அன்று நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்ற துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் பெண்களைப் போற்றும் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கை து.சீ. இராமலிங்கம் நெறிபடுத்தினார். இதில், கல்யாணராமன் நாகராசன், ஜீவா காசிநாதன், சுமத்ரா கோவிந்தாசாமி, ‘பரணி’ இராமமூத்தி, அதியமான், தண்ணீர்க்குளம் தாசன், இரா. சக்கரபாணி, ஆர். சிவராமலிங்கம் ஆகியோர் கவிதை வாசித்தனர். சிறந்த ஐந்து கவிஞர்களுக்கு தலா ரூ. 500/- பரிசினை முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து ‘இன்றைய பெண்கள் … பொறுமைசாலிகளா? திறமைசாலிகளா?’ தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு சோலை தமிழினியன் நடுவராகவும், அணியில், தேன்மொழி எத்துராசன், ந. செல்வமணி, முனைவர் கீதப்ரியா. வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் த. வடிவேலு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கிருஷ்ணவேணி அருணாச்சலம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கப் புரவலர் டாக்டர் பு.பெ. இராமசாமி வினாடி வினா நிகழ்ச்சியை நடத்த, சங்கப் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்