Author Archives: adminn

17.08.2025 அன்று நடைபெற்ற 421 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது

17.08.2025 அன்று நடைபெற்ற 421 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது

17.08.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
421-ஆவது மாத நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 421-ஆவது மாத நிகழ்ச்சியானது
17.08.2025 அன்று நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரையாற்ற,
சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
தலைமையேற்றினார்.
நிகழ்ச்சியில், வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் மருத்துவம் என்ற தலைப்பில்
சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநரும், “டாக்டர் வள்ளுவர்” நூலின்
ஆசிரியருமான டாக்டர் முருகு சுந்தரம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் சார்பில்
சிறப்பு விருந்தினருக்கு தமிழ்க் கடிகாரமும், சோலைப் பதிப்பகம் சார்பில்
புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இதனை, சங்கச் செயலாளர்
அரிமா துரை. சுந்தரராஜூலு, கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா
பாலகிருஷ்ணன், சோலை தமிழினியன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் இம்மாதம் புதிதாக உறுப்பினராக இணைந்த திருமதி.
க. ஜெயஸ்ரீ சிறப்பிக்கப்பட்டார். சங்கத்திற்கு அறிமுகம் செய்த, சங்க இணைச்
செயலாளர்த. வடிவேலு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.
நமது சங்க செயற்குழு உறுப்பினரும் இலக்கியசோலை திங்களிதழின்
ஆசிரியருமான சோலை தமிழினியன் அவர்களுக்கு சிறந்த சிற்றிதழுக்கான
விருதினை தேனி கம்பம் பாரதி இலக்கியப் பேரவை 15.08.2025 அன்று வழங்கி
சிறப்பித்தது. அவரைப் பாராட்டும் விதமாக சங்கத்தின் செயலாளர் சால்வை
அணிவித்து பாராட்டினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள் கேள்வி நேரம்
நடந்தேறியது.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது.

20.07.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 20.07.2025 அன்று நடைபெற்றது

20.07.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 420-ஆவது மாத நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.07.2025 அன்று
சென்னை, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி அரங்கில்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் படத்திறப்பும்
நினைவேந்தல் நிகழ்வும் நடந்தேறியது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை
இயக்குநர் முனைவர் ஔவை அருள் படத்தினை திறந்து வைத்து
நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார். “பெருங்கவிக்கோவின்
பெருஞ்சுவர்” நூலினை பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
வெளியிட முதற்பிரதியினை திருமதி. பாரததேவி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர்
த. இராமலிங்கனார் தலைமை ஏற்க, செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை நல்கினார். இலக்கியச்சோலை ஆசிரியர்
சோலை தமிழினியன் தொகுத்து வழங்க, பேராசிரியர் இராம.
குருநாதன், எல்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தமிழியலன்,
கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், அரிமா த.கு. திவாகரன்,
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நினைவுரை
நிகழ்த்தினர். ஏற்புரையாக வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களும்,
முனைவர் வா.மு.சே. ஆண்டவர் அவர்களும் நிகழ்த்தினர்.
கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்.

15.06.2025 அன்று நடைபெற்ற 419 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது

15.06.2025 அன்று நடைபெற்ற 419 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 15.06.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
419-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 419-ஆவது மாத நிகழ்ச்சியானது
15.06.2025 அன்று நடைபெற்றது.
திருக்குறள் தூதுவர் திரு. சொ. பத்மநாபன் தமிழ் வாழ்த்துப் பாட,
அண்மையில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் நீத்த
272 பேருக்கும் நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு
வரவேற்புரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர்
அமுதா பாலகிருஷ்ணன் தலைமையுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் 98-ஆம் பிறந்தநாளை
முன்னிட்டு “நான் நிரந்தரமானவன்” என்னும் தலைப்பில்
எழுத்தாளர் தேன்மொழி எத்துராசன் சிறப்புரையாற்றினார். இவர்
திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற “தாடி’ எத்துராசன் அவர்களின்
புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ம.வே. மாணிக்கவாசகம் எழுதிய “வெளிச்ச வேர்கள்”
நூல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. நூலினை கலைமாமணி
ஏர்வாடியார் அறிமுகம் செய்ய அரிமா த.கு. திவாகரன் முதற்
பிரதியினைப் பெற்றுக் கொண்டார். நூல் குறித்து கவிஞர் துருவன்
பேசினார். சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள்
கேள்வி நேரம் நடந்தேறியது.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது

18.05.2025 அன்று நடைபெற்ற 418 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 18.05.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 418-ஆவது
மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 418-ஆவது ஏப்ரல் மாத
நிகழ்ச்சியானது 18.05.2025 அன்று நடைபெற்றது. தமிழ்த்தாய்
வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளர்
அரிமா துரை. சுந்தரராஜுலு, தலைமையேற்று
வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ‘அமெரிக்காவில் தமிழ்” என்னும் தலைப்பில்
பேராசிரியர் இ.ஜே. சுந்தர் சிறப்புரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் 92-ஆம் பிறந்தநாளை
முன்னிட்டு “காலமெல்லாம் கவிஞர்” என்னும் தலைவர்
பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் பேரூரை நிகழ்த்தினார்.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

20.04.2025 அன்று நடைபெற்ற 417-ஆவது மாதாந்திர கூட்டம்

20.04.2025 அன்று நடைபெற்ற 417-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 417-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 417-ஆவது ஏப்ரம் பாத நிகழ்ச்சியானது 20.04.2025 அன்று நடைபெற்மது . வழக்கறிஞர் க. ஜெகதீஸ்வரன் தமிழ்ந்தாய் வாழ்த்து பாட சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜீலு வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில் ‘முயற்சிமுருகேசன் தலையைபில் ‘கோடைக் கவியரங்கம்‘ நடைபெற்றது. அதில், சுமத்ரா கோவிந்தசாமி, முனைவர் இரா. பூங்கோதை, இரா. சக்கரபாணி, வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன். அதியமான். நா. விவேகானந்தன். ஓட்டேரி செல்வக்குமார். கல்யாணராமன் நாகராசன், நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கவிஞர்களுக்கு ‘கோடைக்கன்ஞர்‘விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் தான் எழுதிய ‘முறிந்த வானவில்‘ என்னும் நூயினை உறுப்பினர்களுக்கு அண்டிப்பரிசாக வழங்கி, ‘இலக்கியச்சோலை‘ திங்களிதழின் அண்ணாநகர்த் சிறப்பிதழினை வெளியிட்டு, சான்றோர்களுக்கு விருதும். கவிஞர்களுக்கு ‘கோடைக் கவிஞர்‘ பட்டயமும் வழங்கி சிறப்பித்தார். முதற்பிரதியினை அரிமா துரை.சுந்தரரானது. முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், திருமதி பாரத்தேவி. த.வடிவேது ஆகியோர் பெற்றுக் கொண்டனர் . சோலை தமிழினியன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியி, து.சீ.இராமலிங்கம் அவர்களுக்கு ‘கவிச்செல்வர்‘ விருதும் திருமதி ஏழிசைவல்லி அவர்களுக்கு ‘நிர்வாகச் செல்வர்‘ விருதம். ‘எஸ்.கே. அகாடெமி எஸ். கமல் அவங்களுக்கு ‘சாதனைச் செல்வர்‘ விருதும் திருமதி யாசிதம்யுகளுள்விச் செல்வர்‘ விருதும், திரு. கே.மணி அவர்களுக்கு ‘சோலைச்சுடர்‘ விருகும் வழங்கப்பட்டன.

சங்கத்தின் பொருளாளர் கோ. யூசாப்பிரகாசம் நன்றியுரையாற்ற முநகழ்ச்சி இனிதே நிறைவற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 20.04.2025 அன்று நடைபெற்றது

16.03.2025 அன்று நடைபெற்ற 416-ஆவது மாதாந்திர கூட்டம்

16.03.2025 அன்று நடைபெற்ற 416-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத நிகழ்ச்சியானது 16.03.2025 அன்று நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்ற துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில் பெண்களைப் போற்றும் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கை து.சீ. இராமலிங்கம் நெறிபடுத்தினார். இதில், கல்யாணராமன் நாகராசன், ஜீவா காசிநாதன், சுமத்ரா கோவிந்தாசாமி, ‘பரணி’ இராமமூத்தி, அதியமான், தண்ணீர்க்குளம் தாசன், இரா. சக்கரபாணி, ஆர். சிவராமலிங்கம் ஆகியோர் கவிதை வாசித்தனர். சிறந்த ஐந்து கவிஞர்களுக்கு தலா ரூ. 500/- பரிசினை முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் வழங்கினார்.

தொடர்ந்து ‘இன்றைய பெண்கள் … பொறுமைசாலிகளா? திறமைசாலிகளா?’ தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு சோலை தமிழினியன் நடுவராகவும், அணியில், தேன்மொழி எத்துராசன், ந. செல்வமணி, முனைவர் கீதப்ரியா. வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் த. வடிவேலு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கிருஷ்ணவேணி அருணாச்சலம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கப் புரவலர் டாக்டர் பு.பெ. இராமசாமி வினாடி வினா நிகழ்ச்சியை நடத்த, சங்கப் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்

16.02.2025 அன்று நடைபெற்ற 415-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 16.02.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 415-ஆவது
பிப்ரவரி மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் பிப்ரவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 16.02.2025 அன்று நடைபெற்றது.

திருக்குறள் சொ. பத்மநாபன் தமிழ் தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.

செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்ற, துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அமுதா மெட்ரிக் மேநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தனது கொஞ்சும் மழலை மொழியில் இந்திய குடியரசு தினம் குறித்து பேசினார்.

தொடர்ந்து ‘தியாகச் செம்மல் தியாகராஜ பாகவதர் ‘தலைப்பில் கவிச்சுடர் டாக்டர் கார்முகிலோன் சிறப்புரையாற்றினார். சேலை தமிழினியன் அறிமுகவுரையாற்றினார்.

அண்மையில்ய ஸ்ரீராமம் பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்திய பாரதி விழாவில் நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் இரா. மோகனசுந்தரம் அவர்களின் துணைவியார் திருமதி . கலைமணி அவர்களுக்கு ‘பாரதி அறிஞர்‘ விருது வழங்கப்பட்டது. அதனை முன்னிட்டு அன்னாருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு செய்யப்பட் திரு. ஜெயமால் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுறது

19.01.2025 அன்று நடைபெற்ற 414-ஆவது மாதாந்திர கூட்டம்

19.01.2025 அன்று நடைபெற்ற 414-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 19.01.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சனவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 19.01.2025 அன்று நடைபெற்றது.

மாணவ மாணவிகள் தமிழ் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.

செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்றும் போது, தலைவர் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது ஓய்வு எடுத்தக் கொண்டிருப்பதால், துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டிக் கொண்டார். மேலும் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மறைமலை அடிகளார் விருதினை அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்களுக்கு அளிக்கப்பட்டதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

முதலாவதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தனது கொஞ்சும் மழலை மொழியில் திருக்குறள் ஒப்புவித்தனர்.

தொடர்ந்து பொங்கல் திருநாள் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. சோலை தமிழினியன் கவியரங்கை நெறிபடுத்தி நடத்தினார்.

நிகழ்ச்சியில், நமது சங்கத்தின் புரவலர் அரிமா த.கு. திவாகரன் அவர்களின் பவன விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பவள விழா காணும் புரவலர் அரிமா த.கு. திவாகரனை பாராட்டி கவிஞர் கண்மதியன். இரா. மோகனசுந்தரம், பாக்டர் பு.பெ. இராமசாமி, த. வடிவேலு, பன்னீர்செல்வம், து.சி. இராமலிங்கம், திருமதி பாரத தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அரிமா த.கு. திவாகரன் ஏற்புரை நிகழ்ந்த, பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

15.12.2024 அன்று நடைபெற்ற 413-ஆவது டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

15.12.2024 அன்று நடைபெற்ற 413-ஆவது டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சனவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆவது டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று நடைபெற்றது.

மாணவ மாணவிகள் தமிழ் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.

முதலாவதாக நமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும் அண்ணாநகர் திருநெறிய தமிழ்மன்றத்தின் நிறுவனருமான திரு. வி. நடராசன். ஐ.ஏ.எஸ். அவர்களின் மறைவுக்கும், அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் நீத்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டன.

உலக செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த குகேஷுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்த, சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர் த.இராமலிங்களார் தலைமை தாங்கினார்.

‘வையத் தைைலமை கொள்’ என்னும் தலைப்பில் தென்காசி கணேசன் உரையாற்றினார். சோலை தமிழ்னியன் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் பாரதியார் ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்னும் தலைப்பை மையமாக கொண்டு சிறந்ததொரு உரையாற்றினார்.

சோலைப் பதிப்பகம் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு நூல்கள் அண்டிப் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக பள்ளி மாணவ மணற் “மாணவர்அரங்கம்” சிறப்பாக நடைபெற்றது. இதில், பாரதியார் பாடல்கள், பாரதியாரின் புதிய ஆத்திசுடி ஆகியவை 20 மாணவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டன.

இறுதியில் டி.பெ. இராமசாமி அவர்களன் நடத்திய கண்டு சொல் வென்று சொல் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கப் பொருளாளர் திரு. கோ.ஞானப்பிரகாரம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுள்ளது

17.11.2024 அன்று நடைபெற்ற 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

17.11.2024 அன்று நடைபெற்ற 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 17.11.2024 அன்று நடைபெற்றது.

திரு. சோலை தமிழினியன் தமிழ்த் தாய் வாழ்த்து பாட சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுது வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இலக்கியச் சோலை திங்கள் இதழின் ஆசிரியருமான திரு. சோலை தமிழினியன் அவர்களின் அருமை தாயார் திருமதி. சரோஜா அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அவைக்கு அறிவித்து அள்ளாருடைய ஆத்மா சாந்தி அடைய உறுப்பினர் அனைவரும் சில மணி துளிகள் எழுந்து நின்று இரங்கலை தெரிவித்தனர். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.

கவிமணியின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும்‘ என்னும் தலைப்பில் பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பின் நிறுவனத் தலைவர் தமிழ்முகில் திருளை பாபு உரையாற்றினார்.

தனது உரையில், “குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பானை அறிமுகம் செய்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்றும். தான் ஒரு கவிஞர் என்பதைக் காட்டிலும் கல்வெட்டுக் கலைஞர் என்று அழைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். காரணம் எந்த கோவில்களில் கல்வெட்டை பார்த்தாலும் தங்கு தடையின்றி சரளமாக படிக்கும் ஆற்றல் உடையவர் கவிமணி” என்றார்.

முத்தாய்ப்பாக, 1940-அபம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர் குழு மாநாட்டில் தமிழ்வேள் உ மகேஸ்வரன் அன்னை அவர்களால் ‘கவிமணி” என்னும்ய் பட்டடம் கொடுக்கப்பட்டதாகவும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புனைம வாய்ந்தவராகத் திகழ்ந்தவர் என்றும் ஆங்கிலத்தில் தான் எழுதிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வைத்திதந்தார் என்று அறியப்படுவதாக தனது சிறப்புரையில் திருவை பாபு தெரிவித்திருந்தார்.

சோலைப் பதிப்பகம் சபில் சிறப்பு விருந்தினராக அன்புப் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் 25.11.2024-ல் பிறந்தியால் கணையிருக்கின்ற சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலூ சிறப்பு விருந்தினர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சங்கப் வாஜனானர் திரு. கோ.ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்ற