18.01.2026 அன்று நடைபெற்ற 426 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
426-ஆவது மாத நிகழ்ச்சி 18.01.2026
அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 426-ஆவது மாத நிகழ்ச்சியானது
தமிழர் திருநாள் விழாவாக 18.01.2026 அன்று அண்ணாநகரில்
நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கனார் தலைமை தாங்க, திரு. சோலை தமிழினியன்
வரவேற்புரையாற்றினார்.

முன்னதாக, சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு
அவர்களின் வழிகாட்டுதலின்படி பொங்கல் தின சிறப்புக் கவியரங்கம்
நடைபெற்றது. கவியரங்கத்டிதிற்கு கவிஞர் இரா. சக்கரபாணி
தலைமை தாங்கினார். கவிஞர்களுக்கு சங்கத்தின் துணைத்
தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர்
திரு. த. வடிவேலு ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.