Author Archives: adminn

10.03.2024 அன்று நடைபெற்ற “நிக்க அதற்குத் தக” நூல் அறிமுக விழா

10.03.2024 அன்று நடைபெற்ற “நிக்க அதற்குத் தக” நூல் அறிமுக விழா

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் “நிக்க அதற்குத் தக”நூல் அறிமுக விழா” 10.03.2024

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பச்சையப்பன் அறக்கட்டளைச் செயலாளர் சி. துரைக்கண்ணு அவர்கள் எழுதிய “நிற்க அதற்குத் தக” என்னும் நூல் அறிமுக விழாவாக 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த.இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரை ஆற்றுகையில் முதன்மை விருந்தினர் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்களைப் பற்றியும், அவருடைய நண்பர் திரு. சி. துரைக்கண்ணு அவர்களைப் பற்றியும் சிறப்பாக” பேசினார்.

தொடக்க உரை ஆற்றிய கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் பேரா. முனைவர் டெமு.சே. ஆண்டவர் அவர்கள் நூலைப் பற்றி தனது கருத்துக்களை கூறினார். பின்னர் வாழ்த்துரை வழங்க வந்துள்ள பேரா. முனைவர் வி. அரசு அவர்களையும், பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

தலைமையுரையில் தலைவர் நூலாசிரியர் திரு. சி. துரைக்கண்ணு அவர்களைப் பற்றியும் தனது நெடுநாளைய நண்பர் முனைவர் மருதூரார் பற்றியும் வெகுவாக பாராட்டிப் பேசினார்.

முனைவர் மருதூரார் தனக்கும் திரு. சி. துரைக்கண்ணு அவர்களும் முப்பதாண்டு காலமாக நெய்வேலியில் ஒன்றாக பணியாற்றிய போது பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார். இந்த நூலைப் பற்றி அவர் குறிப்பிடும் போது அதன் சிறப்பு அம்சங்களை குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார். இந்த நூல் ஒரு கருவூலம் என்று கூறி அனைவருடைய வீடுகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 35 நூல் வாங்கப்பட்டன. மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு தொடர்புடைய கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து முதல்வர்களும், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.

பேரா.முனைவர் வி. அரசு மற்றும் பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்களும் வாழ்ந்துரை வழங்கினார்கள்.

நூலாசிரியர் திரு. சி. துரைக்கண்ணு ஏற்புரை வழங்கிய போது இந்த நூலை எழுதியதற்கான காரணகாரியவிாக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

நிறைவாக முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியிரை நணி நண்பகல் உணவிற்கு பின் கூட்டம் இனிதே நிறைவற்றது.

18.02.2024 அன்று நடைபெற்ற உலக தமிழ்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

18.02.2024 அன்று நடைபெற்ற உலக தமிழ்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் உலக தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, திரு. சி. செயபால் தம்பதியர் தமிழ்நாய் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த.இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா முனைவர் துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக செயலாளர் நினைவில் வாழும் புலவர் தங்க. ஆறுமுகன் மற்றும் இரா. முத்துகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பேரா. சுமித்ரா மற்றும் நம்ம அார் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கல்வெட்டு ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

உலகத் தாய்மொழி நாள் குறித்து பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர். த.இராமலிங்கனார் அவர்கள் திரு. சா. இராசேந்திரன் அவர்களை அறிமுகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து திரு. சா. இராசேந்திரன் அவர்கள் “சிறப்புக்குரியவை மானுடமா? மற்றவையா? என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா பாலகிருஷ்ணான், நற்றமிழ் கவிஞர் நா. பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். சோலை தமிழினியன் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

21.01.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

21.01.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ். தன்வந்த் தமிழ் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை, சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்த “மனிதநேயம் வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பேராசிரியர் முனைவர் கே. ஈஸ்வரி அவர்களும், அணியின் சார்பில் பேராசிரியர் க.கி. முருகானந்தம், வை. இராஜேஸ்வரி. பேராசிரியர் யோ.சா. இராசேந்திரன் முனைவர் இரா. பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இலக்கியச் சோலை திங்களிதழின் பொங்கல் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனை சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் வெளியிட பிரதிகளை சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு, புரவலர் அரிமா த.கு. திவாகரன், துணைச் செயலாளர் வடிவேலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி. பாரததேவி நன்றியுரை நிகழ்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புரவலர் அரிமா த.கு. திவாகரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி சிறப்பு சொற்பொழிவாளர் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு சொற்பொழிவாளர் டாக்டர் ஜெ. ஜெய்சி திலகம். தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி அவர்களால் “கண்டு சொல்-வென்று செல்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவாக இணைச் செயலாளர் சி. ஜெயபால் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவற்றது.

19.11.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

19.11.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 19.11.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 19.11.2020 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்களார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.

டாக்டர் பு.பெ. இராமசாமி அறிமுகவுரை நிகழ்த்த, வற்றாத தமிழ்நீர் வார்த்த கருமேகம் என்னும் தலைப்பில் டாக்டர் கேப்டன். முத்தையா சிறப்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில் காளமேக புலவர் பாடிய பாடல்களில் 35 பாடல்கள் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தையும் அவபோருக்கு அரித்தார். ஒரு ஆங்கில மருத்துவர் இந்த தலைப்பில் பேசியது அவையோரை வியப்பில் ஆழ்த்தியது.

இன்னர் கண்டு சொல் வென்று சென்” என்னும் நிகழ்ச்சி பேரா. டி. இராமசாமி அவர்களால் நடத்தப்பட்டது.

நிறவாக இணைச் செயலாளர் சி. ஜெயபால் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது

15.10.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

15.10.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 15.10.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் விண்வெளி வார சிறப்பு நிகழ்ச்சி 15.10.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.

கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் தொடக்கவுரையாற்றினார். சோலை தமிழினியன், திரு. நெல்லை சு. முத்து குறித்து அறிமுக உரை ஆற்றினார். இந்திய விண்வெளி எழுச்சி.. என்னும் தலைப்பில் திரு.நெல்லை சு. முத்து அவர்கள் சிறப்புரை வழங்கினார்..

முன்னதாக விண்வெளி குறித்தும் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்தும் கலாம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உரை நிகழ்த்தினர்.

பொருளாளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

20.08.2023 அன்று நடைபெற்ற 398-வது கூட்டம்

20.08.2023 அன்று நடைபெற்ற 398-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது -20.08.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி 20.08.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர்த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.

இதில், சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகையாளர்களின் பங்கு.. தலைப்பில் சிறப்பானதொரு உரையை தோழர் D.S.R. சுபாஷ் நிகழ்த்தினார்.

முன்னதாக இலக்கியச்சோலை திங்களிதழ் கவிஞர்கள் பங்கேற்ற சுதந்திரன தின சிறப்புக் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இதனை சோலை தமிழினியன் நெறிபடுத்தி நடத்தினார்.

சங்கத்தில் பொருளாளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

16.07.2023 அன்று நடைபெற்ற 397-வது கூட்டம்

16.07.2023 அன்று நடைபெற்ற 397-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மறைமலையடிகளார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது -16.07.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மறைமலையடிகளார் பிறந்த நாள் நிகழ்ச்சி 16.07.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. திருக்குறள் சோ. பத்மநாபன் தமிழ்த்தாய் வாழ்த்தும் திருக்குறள் பற்றிய ஒரு பாடலையும் பாடினார். நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையில் இலக்கிவீதி இனியவன் அவர்கள் இயற்கை எய்தியதற்கு இரங்கல் தெரிவித்தார்.

இதில், தனித்தமிழ் இயக்க கொள்கையும் மறைமலையடிகளும்.. தலைப்பில் சிறப்பானதொரு உரையை பேராசிரியர் முனைவர் கி. ஈஸ்வரி நிகழ்த்தினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன். சங்கத்தின் புரவலர் முனைவர் தா.கு.திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் பொருளாவர் கோ. ஞரனப்பிரகாசம் நன்றியுரை நிகழ்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

18.06.2023 அன்று நடைபெற்ற 396-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது – 18.06.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி 18.06.2023
அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜுலு
வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையர் என்னும் உறவைப் போற்றும்
கவிதையினை கவிஞர் சோலை தமிழினியன் மற்றும் கவிஞர் மறத்தமிழன் ஆகியோர்
வாசித்தனர்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு, கவிதைகளின் தந்தையெனப் போற்றப்படும் மகாகவி
பாரதியின் வரிகளைக் கொண்ட வல்லமை தாராயோ தலைப்பில் தந்தை, மகள், பெண்
சமூகம் குறித்தான சிறப்பானதொரு உரையை கவிஞர் சிவகாமி அருணன் நிகழ்த்தினார்.
முன்னதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த வி. காவியா,
கே. விகாஷினி மற்றும் கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளியைச் சார்ந்த பெ. சனிசிதாஸ்ரீ
ஆகிய மாணவிகள் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தலைப்பில் உரையாற்றினார்.
சங்கத்தின் புரவலர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது.

21.05.2023 அன்று நடைபெற்ற 395-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது – 21.05.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி 21.05.2023
அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜுலு
வரவேற்புரை நிகழ்த்த, திரு. சொ. பத்மநாபன் திருக்குறள் வாழ்த்துப்
பாடினார்.
இதில், இலக்கியச் சோலை திங்களிதழின் அண்ணாநகர் சிறப்பிதழ் மதிப்புரை
செய்யப்பட்டது. இதனை திரு. முயற்சி முருகேசன் நிகழ்த்த, ஆசிரியர் சோலை
தமிழினியன்
ஏற்புரை வழங்கினார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் க.கி. முருகானந்தம் தலைமையில் “குடும்
வாழ்க்கை சிறப்புற பெரிதும் துணை புரிவது அன்னையின் அரவணைப்பா? தந்தையின்
கண்டிப்பா? தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. அன்னையர் தினத்தைப்
போற்றம் வகையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அன்னையர்க்கும் திராவிட முழக்கம்
வலையொளி ஊடகத்தின் நிறுவனர் திரு. ஞானபாலன் அவர்களுக்கும் சால்வை
அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பொருளாளர் திரு.கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை
நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைடைந்தது.