20.08.2023 அன்று நடைபெற்ற 398-வது கூட்டம்

20.08.2023 அன்று நடைபெற்ற 398-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது -20.08.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி 20.08.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர்த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.

இதில், சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகையாளர்களின் பங்கு.. தலைப்பில் சிறப்பானதொரு உரையை தோழர் D.S.R. சுபாஷ் நிகழ்த்தினார்.

முன்னதாக இலக்கியச்சோலை திங்களிதழ் கவிஞர்கள் பங்கேற்ற சுதந்திரன தின சிறப்புக் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இதனை சோலை தமிழினியன் நெறிபடுத்தி நடத்தினார்.

சங்கத்தில் பொருளாளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது