

18.02.2024 அன்று நடைபெற்ற உலக தமிழ்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் உலக தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, திரு. சி. செயபால் தம்பதியர் தமிழ்நாய் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த.இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா முனைவர் துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக செயலாளர் நினைவில் வாழும் புலவர் தங்க. ஆறுமுகன் மற்றும் இரா. முத்துகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பேரா. சுமித்ரா மற்றும் நம்ம அார் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கல்வெட்டு ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
உலகத் தாய்மொழி நாள் குறித்து பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர். த.இராமலிங்கனார் அவர்கள் திரு. சா. இராசேந்திரன் அவர்களை அறிமுகம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து திரு. சா. இராசேந்திரன் அவர்கள் “சிறப்புக்குரியவை மானுடமா? மற்றவையா? என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா பாலகிருஷ்ணான், நற்றமிழ் கவிஞர் நா. பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். சோலை தமிழினியன் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
