10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புரவலர் அரிமா த.கு. திவாகரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி சிறப்பு சொற்பொழிவாளர் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு சொற்பொழிவாளர் டாக்டர் ஜெ. ஜெய்சி திலகம். தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி அவர்களால் “கண்டு சொல்-வென்று செல்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவாக இணைச் செயலாளர் சி. ஜெயபால் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவற்றது.