
19.11.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 19.11.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 19.11.2020 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்களார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
டாக்டர் பு.பெ. இராமசாமி அறிமுகவுரை நிகழ்த்த, வற்றாத தமிழ்நீர் வார்த்த கருமேகம் என்னும் தலைப்பில் டாக்டர் கேப்டன். முத்தையா சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில் காளமேக புலவர் பாடிய பாடல்களில் 35 பாடல்கள் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தையும் அவபோருக்கு அரித்தார். ஒரு ஆங்கில மருத்துவர் இந்த தலைப்பில் பேசியது அவையோரை வியப்பில் ஆழ்த்தியது.
இன்னர் கண்டு சொல் வென்று சென்” என்னும் நிகழ்ச்சி பேரா. டி. இராமசாமி அவர்களால் நடத்தப்பட்டது.
நிறவாக இணைச் செயலாளர் சி. ஜெயபால் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது
