16.07.2023 அன்று நடைபெற்ற 397-வது கூட்டம்

16.07.2023 அன்று நடைபெற்ற 397-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மறைமலையடிகளார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது -16.07.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மறைமலையடிகளார் பிறந்த நாள் நிகழ்ச்சி 16.07.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. திருக்குறள் சோ. பத்மநாபன் தமிழ்த்தாய் வாழ்த்தும் திருக்குறள் பற்றிய ஒரு பாடலையும் பாடினார். நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையில் இலக்கிவீதி இனியவன் அவர்கள் இயற்கை எய்தியதற்கு இரங்கல் தெரிவித்தார்.

இதில், தனித்தமிழ் இயக்க கொள்கையும் மறைமலையடிகளும்.. தலைப்பில் சிறப்பானதொரு உரையை பேராசிரியர் முனைவர் கி. ஈஸ்வரி நிகழ்த்தினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன். சங்கத்தின் புரவலர் முனைவர் தா.கு.திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் பொருளாவர் கோ. ஞரனப்பிரகாசம் நன்றியுரை நிகழ்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.