15.10.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

15.10.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 15.10.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் விண்வெளி வார சிறப்பு நிகழ்ச்சி 15.10.2023 அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.

கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் தொடக்கவுரையாற்றினார். சோலை தமிழினியன், திரு. நெல்லை சு. முத்து குறித்து அறிமுக உரை ஆற்றினார். இந்திய விண்வெளி எழுச்சி.. என்னும் தலைப்பில் திரு.நெல்லை சு. முத்து அவர்கள் சிறப்புரை வழங்கினார்..

முன்னதாக விண்வெளி குறித்தும் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்தும் கலாம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உரை நிகழ்த்தினர்.

பொருளாளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.