
17-07-2022-அன்று நடைபெற்ற 381-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.07.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 381-ஆவது காணொலிக் கூட்டம்
17.07.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை
ஆற்ற, அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராக துவக்க உரை ஆற்றினார். துவக்க உரையில்
சிறப்புச் சொற்பொழிவாளர் சுவிட்சர்லாந்தின் சொல்வளனார் க.
அருந்தவராஜா (தலைவர், ஜெனிவா கலை இலக்கியப் பேரவை)
அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். க. அருந்தவராஜா
அவர்கள் சுவிட்சர்லாந்தில் தமிழர்களின் நிலைப்பாடு என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
துரை. சுந்தரராஜூலு, கோ. ஞானப்பிரகாசம், இரா. தண்டபாணி,
மா. சிவஞானம், ச. கலியமூர்த்தி, பாரததேவி, விஜயலட்சுமி
அம்மையார், முருகையன், மு. ஆறுமுகப்பெருமாள், த. வடிவேலு,
து.சீ. இராமலிங்கம் ஆகியேவார் சிறப்புரை ஆற்றிய திரு. க.
அருந்தவராஜா அவர்களோடு கலந்துரையாடிய பின்னர் அவரது
சிறப்புரையை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.
