Author Archives: adminn

27.02.2022-அன்று நடைபெற்ற 372-வது கூட்டம்

27.02.2022-அன்று நடைபெற்ற 372-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
27.02.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 372-ஆவது இணையவழிக் கூட்டம்
27.02.2022 ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். J.A.L. கணேசன்,
முகம்மாமணி இராமலிங்கம், சிவ சுப்பிரமணியம் ஆகியோரது மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு சில மணித்துளிகள் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது. புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்றினார்.
சொற்சுவை அரசி இலக்கிய மாமணி பேரா. முனைவர் க. ரேவதி (M.A. Ph.D.,
DSS, PGDJMC, DCA, Dip. in Hindi) அவர்கள் “உலகத் தாய் மொழி நாள் விழா”
என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.
சொற்பொழிவின் சில பகுதிகள் : கிழக்கு பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்தான்
இடையே மொழிப் போர் ஏற்பட்டது. 1956-ல் பாகிஸ்தானின் ஆட்சி மொழிகளில்
ஒன்றாக வங்கமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மொழிப்போர் வங்கதேசம்
என்ற தனி நாடு உருவாக வழி வகுத்தது. அதன் பின்னணியில் தான்
தாய்மொழியின் தனிச்சிறப்பை உணர்த்தும் வகையில் பன்னாட்டு அமைப்பான
ஐ.நா. சபை வங்கதேசத்தின் மொழிப்போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலகத்
தாய் மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றியது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை தனது உறுப்பு நாடுகள்
இதனைக் கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. உலகத் தாய்
மொழி நாள் கொண்டாடப்படும் வரலாறு இதுவே ஆகும். மனிதன் இருந்தால்
மொழி வளரும்; மனிதன் இறந்தால் மொழி அழியும். மனிதக் கூட்டம் மொழி
வளர்ச்சிக்கு உதவி வருகின்றன.
புலவர் த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜுலு, ராம் லக்ஷ்மன் (France)
தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம், இரா. தண்பாணி, மோதிலால் பாபு, வடசென்னைத்தமிழ்க் கழகம், இளங்கோ வன்னிய பெருமாள், முயற்சி முருகேசன்,
மணிமகலை, புலவர் விஜயலட்சுமி, கவிஞர் மறத்தமிழன் ஆகியோர் முனைவர்
க. ரேவதியைப்பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
முனைவர் க.ரேவதி அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் கண்டு சொல் வென்று செல் நிகழ்ச்சி
நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

13-02-2022-அன்று நடைபெற்ற 371-வது கூட்டம்

13-02-2022-அன்று நடைபெற்ற 371-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
13.02.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 371-ஆவது
காணொலிக் கூட்டம்
13.02.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, செயலாளர் அரிமா
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து தொடக்க உரை
ஆற்றினார்.
செயலாளர் தம் வரவேற்புரையில் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின்
உறுப்பினரும் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலருமான திரு. சி.
பாலசுப்ரமணியம் 107-ஆவது வயதில் மறைவுற்றார் என்ற இரங்கல்
செய்தியை அறிவித்துத் தொடர்ந்து சிலமணித் துளிகள் அஞ்சலி
செலுத்தப்பட்டது.
சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களை அரிமா.
த.கு. திவாகரன் அறிமுகம் செய்து வைத்து உரை ஆற்றினார்.
கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் ஓர் எழுத்தாளர், குழந்தைகள் பராமரிப்பு சறிப்புக்
கல்வியாளர், டென்மார்க்கில் பிள்ளை வளர்ப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் கவிஞர் கலாநிதி
ஜீவகுமாரன் சங்க உறுப்பினர்களிடம் கலுந்துரையாடினார்.
திருவாளர்கள் கூபர்ட், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜூலு, புலவர்
விஜயலட்சுமி, குடியாத்தம் குமணன், கோ. ஞானப்பிரகாசம், ந. பாபு, கௌரி
சிவபாலன் (ஜெர்மனி) ஆகியோர் சொற்பொழிவாளரை வாழ்த்தியும்,
பாராட்டியும் பேசினர்.
கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

31-01-2022-அன்று நடைபெற்ற 370-வது கூட்டம்

31-01-2022-அன்று நடைபெற்ற 370-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
31.01.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 370-ஆவது காணொலிக் கூட்டம் 31.01.2022
ஞாயிறு மாலை 5.00 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையும், தலைமை உரையும்
ஆற்றினார்.
செயலாளர் தம் உரையில் திருவாளர்கள் கா. வேழவேந்தன், வி.த.
கிருஷ்ணமூர்த்தி, பெ. சண்முக சுந்தரம், இரா. மணி (நிழற்படக் கலைஞர்) ஆகியோர்
மறைவு குறித்து தெரிவித்தார். அவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரா.
பு.பெ. இராமசாமி இன்று மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி மௌனவிரதம்
மேற் கொண்டதால் அவரால் நடத்தப்படும் “கண்டு சொல் வென்று செல்” என்னும்
நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து
தொடக்க உரை ஆற்றி சிறப்புரை ஆற்றிய டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
அவர்களை அறிமுகம் செய்து அவர் குறித்த விவரங்களை தெரிவித்தார்.
டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் எழுத்தாளர், லண்டன் குழந்தைகள் நல
அதிகாரி (ஓய்வு) “பிரித்தானியாவில் தமிழர்களின் வரலாறும், வாழ்க்கை
மாற்றங்களும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையில் சில பகுதிகள்:
பிரித்தானியா 4 நாடுகளைக் கொண்டது, இங்கு 195 நாடுகளில் இருந்து மக்கள்
வந்துள்ளனர். 330 மொழிகள் பேசும் நாடு. பல கலாச்சார சமுதாய நிலைகளைக்
கொண்டவர்களாக இருந்தாலும் பண்பாட்டைக் காத்து வருகின்றனர். சீன மக்கள்
அதிக அளவில் பாதுகாப்பு கோரி இங்கு வந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள்
வருகையும் உண்டு, இந்தியாவில் இருந்து 5% வந்துள்ளனர். இங்கு கலப்புத்
திருமணம் அதிக அளவில் நடைபெற்றாலும் பரந்து பட்ட மனம் கொண்டவர்களாக
உள்ளனர். இங்கு 240 பள்ளிகள் உள்ளன. டாக்டர் சண்முக சுந்தரம் அவர்களால்
“லண்டன் முரசு” என்னும் முதல் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டு
வருவதோடு தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இலங்கைத் தமிழர் சிவானந்தன் பத்திரிக்கை மூலமாக சைவ சமய நெறிகளைப் பரப்புவதோடு சபாபதி
பிள்ளை மற்றும் சதானந்தன் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர்.
இங்கு முருக வழிபாடு அதிகம். லண்டன் மாநகரில் முதலாவது பெரிய கோயில்
கட்டப்பட்டுள்ளது. மேலும் 40 கோயில்கள் உள்ளன.
இங்கு தமிழர்களுக்கு என்று தகவல் நிலையம் உள்ளது. இங்கு தமிழர்கள்
வரவால் தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது. இலங்கைத் தமிழர்களால்
தொலைக்காட்சியும், பண்பலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு, சேரலாதன், கவிஞர் ந. பாபு, நடராஜா
சச்சிதானந்தம், பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ வன்னிய பெருமாள்,
து.செ. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம், ச. கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புச்
சொற்பொழிவாளரை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினர்.
டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

16-01-2022-அன்று நடைபெற்ற 369-வது கூட்டம்

16-01-2022-அன்று நடைபெற்ற 369-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.01.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 369-ஆவது மெய்நிகர் காணொலிக் கூட்டம்
16.01.2022 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்ற அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார்.
திருமதி சந்திர கௌரி சிவபாலன் எழுத்தாளர் தமிழ் வான் அவை அமைப்பாளர்
(ஜெர்மனி) ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம் என்னும் தலைப்பில்
ஜெர்மனியில் இருந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
ஆற்றிய உரை : ஜெர்மனி 16 மாநிலங்களைக் கொண்ட 8 கோடியே 30 லட்சம்
மக்கள் வாழும் ஜனநாயக நாடு. 60,000 தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரி
வந்தனர். அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடாக விளங்குகிறது. அங்கு வாழும்
தமிழர்களின் கல்வி நிலை, உணவு, திருமணம், மொழிகலப்பு, பண்பாட்டு கலப்பு,
நடைபெறும் விழாக்கள் குறித்தும் ஒவ்வொரு பிராந்திய ரீதியாக ஆடை வேறுபடும்
நிலைமை குறித்தும், குங்குமப் பொட்டு வைப்பதால் ஏற்படும் இடையூறால் பொட்டு
வைப்பதில்லை என்றும் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை என்றும் எல்லா தொழில்
செய்வோரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். தமிழர்கள் கோயில்கட்டி
இறைவழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் செல்லவும், விரதம்
சம்பிரதாயங்கள் கடைபிடிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கார் உற்பத்தி பெருந்தொழில். நிலக்கரியும் இரும்பு தொழில் வளர்ச்சியில் முக்கிய
பங்கு வகிக்கின்றன. மொழிக்கு கல்வி அடித்தளமாக விளங்குகிறது. கிறித்துமஸ்
எல்லோரும் கொண்டாடும் விழா. அமைதி வழியில் அந்நாட்டுப் பண்பாடுகளை ஏற்று
பல பண்பாட்டு (Multi Culture) முறைகளை ஏற்று வாழ்ந்து வருகின்றனர்.
இவரது உரையை துரை. சுந்தரராஜூலு, முல்லை நாச்சியார், முனைவர் ரேவதி,
எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், ச. கலியமூர்த்தி, ஸ்ரீமதி
வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தியும், பாராட்டியும் பேசினர். திருமதி கௌரி
சிவபாலன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

26-12-2021-அன்று நடைபெற்ற 368-வது கூட்டம்

26-12-2021-அன்று நடைபெற்ற 368-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 368-ஆவது கூட்டம் 26.12.2021 ஞாயிறு காலை
10.30 மணிக்கு நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்றினார்.
பேரா. அ. சதீஸ்குமார், ஸ்ரீமதி ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சி. “தமிழர் பண்பாட்டு மரபில் சங்க இலக்கியம்’ என்னும் தலைப்பில் சிறப்புச்
சொற்பொழிவு ஆற்றினார்.
அரிமா துரை. சுந்தரராஜுலு விஜயலட்சுமி, முனைவர் க. ரேவதி, குடியாத்தம்
குமணன், மறத்தமிழன், ச. கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பேரா.
சதீஸ்குமார் அவர்களைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
பின்னர் பேரா. அ. சதீஸ்குமார் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

19-12-2021-அன்று நடைபெற்ற 367-வது கூட்டம்

19-12-2021-அன்று நடைபெற்ற 367-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 367-ஆவது இணையவழிக் காணொலிக்
கூட்டம் 19.12.2021 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்றினார்.
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ பாரிசு, கிருத்தியான் லக்ருவா (பன்னாட்டு
நிறுவனம்) மேனாள் நிருவாக அதிகாரி, ஐரோப்பாவில் தமிழக அரசின் அயலகத்
தமிழறிஞர் இலக்கண முதல் விருதாளர் “இக்காலத் தமிழில் இலக்கணப்
பிழைகள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சங்க உறுப்பினர்கள் வை. செல்லப்பா, சிவகுமாரன் (ஏழிசைவல்லியின்
அண்ணன்) ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புலவர். த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜுலு, வினைதீர்த்தான் (காரைக்குடி)
பேரா. E.J. சுந்தர், இளங்கோ (கன்னியாகுமரி) சரஸ்வதி (ஈரோடு) ஆகியோர்
சொற்பொழிவாளரை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

05-12-2021-அன்று நடைபெற்ற 366-வது கூட்டம்

05-12-2021-அன்று நடைபெற்ற 366-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
05.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 366-ஆவது இணையவழிக் காணொலிக் கூட்டம்
05.12.2021 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
திருப்புகழ் அருட்செல்வர், மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன், MBBS. (MAHE), MOG
(UM) FAMS (New Delhi) (மகப்பேறு மருத்துவ நிபுணர் மற்றும் சோதனைக் குழாய்
குழந்தைப் பேறு நியுணர்) “காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன்” என்னும்
தலைப்பில் ஈப்போவில் இருந்து சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
பாவலர் முயற்சி முருகேசன், புலவர். த. இராமலிங்கனார், குடியாத்தம் குமணன்,
முனைவர் க. ரேவதி, ஜீவகன் (ஜெர்மனி), கவிஞர் மறத்தமிழன், பாரதி தேவி,
ஜோதிமணி ஆகியோர் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

21-11-2021-அன்று நடைபெற்ற 365-வது கூட்டம்

21-11-2021-அன்று நடைபெற்ற 365-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.11.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 365-ஆவது கூட்டம் 21.11.2021 ஆம் நாளன்று
ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் கூடியது.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்ற,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளராக தொடக்க உரை
ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் திரு. பொ. சிறீ ஜீவகன் தமிழ்மணி அவர்களை அறிமுகம்
செய்து திருமதி இராமநாயகம் உரை ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவாளர்
ஜெர்மனி செந்தமிழ் சீராளர் பொ. சிறீ ஜீவகன் தமிழ்மணி, காமன் நகரின் பாரதி
தமிழ்ப்பள்ளியை நிறுவி அதில் பொறுப்பாசிரியராகவும் திகழ்கிறார். “திருக்குறளில்
மானிட ஒழுக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை : 1985 முதல் தமிழ்ப்பணி ஆற்றி பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
திருக்குறளை பல மொழிகளில் மொழி பெயர்த்தவர். 39 விருதுகள் பெற்றதோடு
5 விருதுகளை மன்னர்களிடம் இருந்து பெற்றார். பெண்கள் சிறப்பை உணர்த்த
ஒளவை விழா நடத்தி மானிட ஒழுக்கத்தைப் பின்பற்ற உலகப் பொதுமறை வழிகாட்டும்
நூலாக திகழ்கிறது.
மனித இனம் நல்ல வண்ணம் வாழவும் வேறுபாடுகளைக் கடந்து வழிகாட்டும் நூல்.
200 ஆண்டுகளாக நன்னெறிப் பரப்பும் நூல். மனிதனை மனிதனாக உருவாக்கும்
நூல். திருக்குறள் அமைப்பு சிறப்பு வாய்ந்தது. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில்
அறவொழுக்கம் குறித்தும், அடக்கமுடமை அதிகாரத்தில் ஐம்பொறிகளை அடக்கி
வாழ்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது. திருக்குறளில் மானிட ஒழுக்கம் குறித்து
கூறப்பட்டுள்ளதை பல குறள்கள் மூலம் விளக்கிக் கூறினார்.
இவரது உரையை முனைவர் க. ரேவதி, முல்லை நாச்சியார், விஜயலட்சுமி, இராம
நாயகம் (மலேசியா) ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

31-10-2021-அன்று நடைபெற்ற 364-வது கூட்டம்

31-10-2021-அன்று நடைபெற்ற 364-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
31.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 364-ஆவது இணையவழிக் கூட்டம் 31.10.2021
ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில்
கூடியது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, அரிமா முனைவர் துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் முல்லை
நாச்சியார் அவர்களை அறிமுகம் செய்து தொடக்க உரை நிகழ்த்தினார்.
திருமதி கவிஞர் முல்லை நாச்சியார் (எழுத்தளார், சொற்பொழிவாளர்) “டென்மார்க்
தமிழர் வாழ்வியலும் இலக்கியங்களும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முனைவர் க. ரேவதி, இராம நாயகி, ரமேஷ் பாபு (எத்தியோப்பியத் தமிழ்ச்சங்கம்),
துரை. சுந்தரராஜூலு, மணிமேகலை ஆகியோர் சிறப்புரை ஆற்றிய கவிஞர் முல்லை.
நாச்சியாரை பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
கவிஞர் முல்லை. நாச்சியார் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

17-10-2021-அன்று நடைபெற்ற 363-வது கூட்டம்

17-10-2021-அன்று நடைபெற்ற 363-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 363-ஆவது இணையவழிக் கூட்டம்
17.10.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் தலைமை ஏற்க, அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு
வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர்
த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார்.
உயர்ந்த வாழ்கைக்கு, உயர்ந்த சந்தை உழவர் சந்தையா? புலவர் சந்தையா?
என்பது குறித்து நகைச்சுவை பட்டிமன்றம் நகைச்சுவை பாவலர் குடியாத்தம்
குமணன் தலைமையில் நடைபெற்றது.
உழவர் சந்தையே என்ற அணியில் கீழ்க்கண்டோர் பங்கேற்றனர் :-

  1. 1. கவிஞர். ந முத்துவேன்
  2. 2. முனைவர் வாணி ஜோதி
  3. 3. முனைவர் ஆசுகவி இனியா
    புலவர் சந்தையே என்ற அணியில் கீழ்க்கண்டோர் பங்கேற்றனர் :-
  4. 1. பேரா. தமிழியலன்
  5. 2. முனைவர் வசுந்தரா தேவி
  6. 3. முனைவர் சாலினி ஜெரால்ட்
    இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களது அணிக்கு வலு சேர்க்கும்
    விதத்தில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
    இரு தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த பட்டிமன்றத் தலைவர் உயர்ந்த
    வாழ்கைக்கு உயர்ந்த சந்தை உழவர் சந்தையே என்று தீர்ப்பு அளித்தார்.
    பொருளாளர் நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.