Category Archives: செய்திகள்

20.10.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

20.10.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 20.10.2024 அன்று நடைபெற்றது.

20.10.2024 அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 411-ஆவது மாதாந்திர கூட்டம் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர்த.இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது.

திருமதி தமிழ்ச்செல்வ ஜெயபால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். சங்கச் செயலாளர் அரிமா துரை, சுந்தரராஜுலு அனைவரையும் வரவேற்றார்.

தலைவர் புலனர் த. இராமலிங்கம் தனது முன்னுரையில் சிறப்பு விருந்தினர் திரு. சுரானந்தா என்கிற சுப்புராஜ் அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

திரு. சோலை தமிழினியன் அவர்கள் திரு. சுரானந்தா அவர்கள் எழுதிய “பயணம் தொடர்கிறது ஆனால் பயணி இறந்துவிட்டான்” என்ற நூலைப் பற்றி வெகு சிறப்பாக ஆய்வுரை செய்தார். அதிலுள்ள சிறப்பு அம்சங்களை கோட்டிட்டுக் காட்டினார்.

பின்னர் ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் இந்த நூல் எழுதுவதற்கு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி நூலின் சிறப்பான அம்சங்ளை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக திருமதி தமிழ்ச்செல்வி ஜெயபால் நன்றியிரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது

18.08.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

18.08.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 20.10.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் உலக தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.02.2034 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபற்றது.

நிகழ்ச்சியில் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, திரு. சி. செயபால் தம்பதியர் தமிழ்தாய் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா முனைவர் துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக செயலாளர் நினைவில் வாழும் புலவர் தங்க. ஆறுமுகன் மற்றும் இரா. முத்துகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பேரா. சுமித்ரா மற்றும் நம்ம ஊர் கோபிநாத் ஆசியோர் கவிதை வாசித்தனர். கல்வெட்டு ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அரங்க, மல்லிகா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 410-ஆவது ஆகஸ்டு மாத சிறப்பு நிகழ்ச்சி18.08.2004 அன்று நடைபெற்றது.

மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.

சொல்லடி சிவசக்தி” தலைப்பில் டயானா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திருமதி,கல்யாணி சிதம்பரம் உரையாற்றினார்.

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சேலை தமிழினியன் உரையாற்றும்போது 28.09.2024 அன்று நடைபெறவிருக்கின்ற தனது “இலக்கியச்சோலை” திங்களிதழின் 15-ஆம் ஆண்டு விழாவில் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு “தமிழ்ச்சங்க செல்வம்” என்னும் விருது வழங்கப்படவிருக்கிறோம், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

செயற்குழு உறுப்பினர் திரு. அ. சந்தி அவர்கள் இலக்கியச்சோலை மாத இதழின் 15-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு களிதை வாசித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் “கண்டு சொல் வென்று செல்” நிகழ்ச்சியினை டாக்டர் டி.பெ.இராமசுவாமி நிகழ்த்தினார்.

சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

21.07.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

21.07.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 21.7.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் ஜூலை மாத சிறப்பு நிகழ்ச்சி 21.07.2024 அன்று நடைபெற்றது.

சோலை தமிழினியன் தமிழ்த் தாய் வாழ்த்து பாட சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுது வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.

தலைவர் தனது முன்னுரையில் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளார் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார். வேதாச்சலம் என்ற பெயரை மறைமலை என்று மாற்றி கொண்டதன் மூலம் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று அவரை தனித்தமிழ் இயக்கம் காண ஊன்றுகோலாக அமைந்தது.

மறைமலையடிகளாரின் வாழ்வியல் முறை‘ தலைப்பில் சவீதா பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஞான செல்வகணபதி உரையாற்றினார். ‘ஈழத்துக் கவிஞர்’ காசி. ஆனந்தனின் “தமிழா நீ பேசுவது தமிழா!” பாடலுடன் தொடங்கி மறைமலையடிகளார் தனது வாழ்வில் வகுத்த உடல், மனம், அறிவு குறித்த மூன்று கோணங்களை எடுத்துரைத்து சிறப்பான முறையில் உரையாற்றினார்.

தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கும் பணியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முயற்சி முருகேசன் ஏற்றுக்கொண்டார். இவரை சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு பாராட்டி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் “கண்டு சொல் வென்று செல்” நிகழ்ச்சியினை டாக்டர் பு.பெ.இராமசாமி நிகழ்த்தினார்.

சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவற்றது

16.06.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

16.06.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 16.6.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் ஜூன் மாத சிறப்பு நிகழ்ச்சி 16.06.2024 அன்று நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜூன் 16 உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அ. சக்தி,சோம. பாலகுரு ஆகியோரும். ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நம்ம ஊர் கோபிநாத் அவர்களும் கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின் தமிழ்த் தொண்டு தலைப்பில் சிலம்புச்செம்மல் புலவர் தமிழமுதன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் உரையில், “அப்பாதுரையார் தான் இந்தி ஆசிரியராக இருந்தாலும், தமிழின் பால் அவர் கொண்டிருந்து நேசத்தால், பேரறிஞர் அண்ணாவுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தேர்ந்த தமிழறிஞர்” என்று புகழ்ந்துரைத்தார்.

நிகழ்ச்சியில் “கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தத்துவப் பாடல்களா? காதல் பாடல்களா?” என்கின்ற தலைப்பில் சோலை தமிழினியன் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், திருமதி தேன்மொழி பிரகாஷ், ந. செல்வமணி. க.ஜெகதீஸ்வரன். குருசங்கர் ஆகியோர் உரையாற்றினார்.

சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த. நிகழ்ச்சி இனிதே நிறைவும்மது

19.05.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

19.05.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மே மாத சிறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜூலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சங்கத்டிதின் மூத்த உறுப்பினர் திரு. டி. பாலகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மே 12-ஆம் தேதி உலக அன்னையர் தினம் முன்னிட்டு கவிஞர் தங்கசாரா அவர்களும், மே 12-ஆம் தேரி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கவிஞர் யோசா அவர்களும் கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கரந்தை தமிழ்ச்சங்க நிறுவனர் தமிழ்த்தொண்டர் உமாமகேசுவரன் பிள்ளையின் தமிழ்த்தொண்டு தலைப்பில் முனையர் அரிமாத-தி. திவாகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் சங்க உறுப்பினரும் கந்தசாமி நாயுடு கல்லூரியின் முதல்வருமான முனைவர் வா.மு.சே. ஆண்டனர் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்தும், பவள விழா கானும் சங்கத்தின் செயற்கழு உறுப்பிணம் திரு. நாமதேவு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தும். வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கும் சங்க செயற்குழு உறுப்பினர் திரு. செயயால் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சகப் பொருளாளர் திரு. கோட் ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்ச்சி இனிதே நிறவைற்றது

21.04.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

21.04.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மே மாத சிறப்பு நிகழ்ச்சி 21.04.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 01.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். திருமதி தமிழ்ச்செல்வி தமிழ்த்தாய் வாழ்த்து பாட திருசொ. பத்மநாபன் திருக்குறள் பாடலைப் பாடினார்.

வரவேற்புரை ஆற்றிய செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜூலு சித்திரைத் திங்களில் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் காயிதே மில்லத் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் இராம. சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டார். செயலாளர் பேசுகையில் இந்தக் கூட்டம் 3 பிரிவுகளாக நடைபெறும் என்றார். முதலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களை குறிக்கும் வகையில் 12 கவிஞர்கள் கவி பாடுவார்கள். பின்னர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அடுத்தது இலக்கியச்சோலை திங்கள் இதழ் அண்ணாநகர் சிறப்பிதழாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

12 கவிஞர்களும் கவிதை பாடி முடித்தவுடன், கீழ்க்கண்டவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. பேரா. முனைவர் பு.பெ. இராமசாமி, திரு. முயற்சி முருகேசன், D.பன்னீர்செல்வம், திருமதி தமிழ்ச்செல்வி மற்றும் அ. சக்தி ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் இலக்கியச்சோலை திங்கள் இதழை தலைவர் வெளியிட, முதல் இதழை செயலனார் திரு. துரை. சுந்தரராஜுலு, முனைவர் அமுதா பாலகிருஷ்ணன். திருமதி, பாரததேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற அனையரையும் தலைவர் பாராட்டினார்.

முன்னதாக இலக்கியச் சோலை ஆசிரியர் திரு. தமிழினியன் அவர்கள் கவிஞர்களை அறிமுகப்படுத்தி, களியரங்கத்தை நெறிப்படுத்தினார். பின்னர் இலக்கியச்சோலை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. சோலை தமிழினியன் அவர்கள் 10 உறுப்பினர்களை இந்த ஆண்டு சேர்ப்பதாக கூறி ரூ.10,000/-கனை காசோணைய பொருளாளரிடம் வழங்கினார்.

தலைவர் பேசுகையில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இலக்கியச்சசோலை திரு.தமிழினியனுக்கு பாராட்டைத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மிகச் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் தன் வயப்படுத்தினார். முனைவர் பு.பெ. இராசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தி பரிசுகள் ாறுங்கினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

10.03.2024 அன்று நடைபெற்ற “நிக்க அதற்குத் தக” நூல் அறிமுக விழா

10.03.2024 அன்று நடைபெற்ற “நிக்க அதற்குத் தக” நூல் அறிமுக விழா

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் “நிக்க அதற்குத் தக”நூல் அறிமுக விழா” 10.03.2024

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பச்சையப்பன் அறக்கட்டளைச் செயலாளர் சி. துரைக்கண்ணு அவர்கள் எழுதிய “நிற்க அதற்குத் தக” என்னும் நூல் அறிமுக விழாவாக 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த.இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரை ஆற்றுகையில் முதன்மை விருந்தினர் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்களைப் பற்றியும், அவருடைய நண்பர் திரு. சி. துரைக்கண்ணு அவர்களைப் பற்றியும் சிறப்பாக” பேசினார்.

தொடக்க உரை ஆற்றிய கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் பேரா. முனைவர் டெமு.சே. ஆண்டவர் அவர்கள் நூலைப் பற்றி தனது கருத்துக்களை கூறினார். பின்னர் வாழ்த்துரை வழங்க வந்துள்ள பேரா. முனைவர் வி. அரசு அவர்களையும், பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

தலைமையுரையில் தலைவர் நூலாசிரியர் திரு. சி. துரைக்கண்ணு அவர்களைப் பற்றியும் தனது நெடுநாளைய நண்பர் முனைவர் மருதூரார் பற்றியும் வெகுவாக பாராட்டிப் பேசினார்.

முனைவர் மருதூரார் தனக்கும் திரு. சி. துரைக்கண்ணு அவர்களும் முப்பதாண்டு காலமாக நெய்வேலியில் ஒன்றாக பணியாற்றிய போது பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார். இந்த நூலைப் பற்றி அவர் குறிப்பிடும் போது அதன் சிறப்பு அம்சங்களை குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார். இந்த நூல் ஒரு கருவூலம் என்று கூறி அனைவருடைய வீடுகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 35 நூல் வாங்கப்பட்டன. மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு தொடர்புடைய கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து முதல்வர்களும், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.

பேரா.முனைவர் வி. அரசு மற்றும் பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்களும் வாழ்ந்துரை வழங்கினார்கள்.

நூலாசிரியர் திரு. சி. துரைக்கண்ணு ஏற்புரை வழங்கிய போது இந்த நூலை எழுதியதற்கான காரணகாரியவிாக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

நிறைவாக முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியிரை நணி நண்பகல் உணவிற்கு பின் கூட்டம் இனிதே நிறைவற்றது.

18.02.2024 அன்று நடைபெற்ற உலக தமிழ்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

18.02.2024 அன்று நடைபெற்ற உலக தமிழ்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் உலக தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, திரு. சி. செயபால் தம்பதியர் தமிழ்நாய் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த.இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா முனைவர் துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக செயலாளர் நினைவில் வாழும் புலவர் தங்க. ஆறுமுகன் மற்றும் இரா. முத்துகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பேரா. சுமித்ரா மற்றும் நம்ம அார் கோபிநாத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கல்வெட்டு ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

உலகத் தாய்மொழி நாள் குறித்து பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர். த.இராமலிங்கனார் அவர்கள் திரு. சா. இராசேந்திரன் அவர்களை அறிமுகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து திரு. சா. இராசேந்திரன் அவர்கள் “சிறப்புக்குரியவை மானுடமா? மற்றவையா? என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா பாலகிருஷ்ணான், நற்றமிழ் கவிஞர் நா. பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். சோலை தமிழினியன் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

21.01.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

21.01.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ். தன்வந்த் தமிழ் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை, சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்த “மனிதநேயம் வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பேராசிரியர் முனைவர் கே. ஈஸ்வரி அவர்களும், அணியின் சார்பில் பேராசிரியர் க.கி. முருகானந்தம், வை. இராஜேஸ்வரி. பேராசிரியர் யோ.சா. இராசேந்திரன் முனைவர் இரா. பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இலக்கியச் சோலை திங்களிதழின் பொங்கல் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனை சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் வெளியிட பிரதிகளை சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு, புரவலர் அரிமா த.கு. திவாகரன், துணைச் செயலாளர் வடிவேலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி. பாரததேவி நன்றியுரை நிகழ்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

10.12.2023 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புரவலர் அரிமா த.கு. திவாகரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி சிறப்பு சொற்பொழிவாளர் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு சொற்பொழிவாளர் டாக்டர் ஜெ. ஜெய்சி திலகம். தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் முனைவர் பு.பெ. இராமசாமி அவர்களால் “கண்டு சொல்-வென்று செல்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவாக இணைச் செயலாளர் சி. ஜெயபால் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவற்றது.