21.04.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

21.04.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மே மாத சிறப்பு நிகழ்ச்சி 21.04.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 01.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். திருமதி தமிழ்ச்செல்வி தமிழ்த்தாய் வாழ்த்து பாட திருசொ. பத்மநாபன் திருக்குறள் பாடலைப் பாடினார்.

வரவேற்புரை ஆற்றிய செயலாளர் முனைவர் அரிமா துரை. சுந்தரராஜூலு சித்திரைத் திங்களில் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் காயிதே மில்லத் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் இராம. சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டார். செயலாளர் பேசுகையில் இந்தக் கூட்டம் 3 பிரிவுகளாக நடைபெறும் என்றார். முதலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களை குறிக்கும் வகையில் 12 கவிஞர்கள் கவி பாடுவார்கள். பின்னர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அடுத்தது இலக்கியச்சோலை திங்கள் இதழ் அண்ணாநகர் சிறப்பிதழாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

12 கவிஞர்களும் கவிதை பாடி முடித்தவுடன், கீழ்க்கண்டவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. பேரா. முனைவர் பு.பெ. இராமசாமி, திரு. முயற்சி முருகேசன், D.பன்னீர்செல்வம், திருமதி தமிழ்ச்செல்வி மற்றும் அ. சக்தி ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் இலக்கியச்சோலை திங்கள் இதழை தலைவர் வெளியிட, முதல் இதழை செயலனார் திரு. துரை. சுந்தரராஜுலு, முனைவர் அமுதா பாலகிருஷ்ணன். திருமதி, பாரததேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற அனையரையும் தலைவர் பாராட்டினார்.

முன்னதாக இலக்கியச் சோலை ஆசிரியர் திரு. தமிழினியன் அவர்கள் கவிஞர்களை அறிமுகப்படுத்தி, களியரங்கத்தை நெறிப்படுத்தினார். பின்னர் இலக்கியச்சோலை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. சோலை தமிழினியன் அவர்கள் 10 உறுப்பினர்களை இந்த ஆண்டு சேர்ப்பதாக கூறி ரூ.10,000/-கனை காசோணைய பொருளாளரிடம் வழங்கினார்.

தலைவர் பேசுகையில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இலக்கியச்சசோலை திரு.தமிழினியனுக்கு பாராட்டைத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மிகச் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் தன் வயப்படுத்தினார். முனைவர் பு.பெ. இராசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தி பரிசுகள் ாறுங்கினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.