

21.07.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 21.7.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் ஜூலை மாத சிறப்பு நிகழ்ச்சி 21.07.2024 அன்று நடைபெற்றது.
சோலை தமிழினியன் தமிழ்த் தாய் வாழ்த்து பாட சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுது வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.
தலைவர் தனது முன்னுரையில் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளார் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார். வேதாச்சலம் என்ற பெயரை மறைமலை என்று மாற்றி கொண்டதன் மூலம் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று அவரை தனித்தமிழ் இயக்கம் காண ஊன்றுகோலாக அமைந்தது.
‘மறைமலையடிகளாரின் வாழ்வியல் முறை‘ தலைப்பில் சவீதா பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஞான செல்வகணபதி உரையாற்றினார். ‘ஈழத்துக் கவிஞர்’ காசி. ஆனந்தனின் “தமிழா நீ பேசுவது தமிழா!” பாடலுடன் தொடங்கி மறைமலையடிகளார் தனது வாழ்வில் வகுத்த உடல், மனம், அறிவு குறித்த மூன்று கோணங்களை எடுத்துரைத்து சிறப்பான முறையில் உரையாற்றினார்.
தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கும் பணியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முயற்சி முருகேசன் ஏற்றுக்கொண்டார். இவரை சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு பாராட்டி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் “கண்டு சொல் வென்று செல்” நிகழ்ச்சியினை டாக்டர் பு.பெ.இராமசாமி நிகழ்த்தினார்.
சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவற்றது
