18.08.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

18.08.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 20.10.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் உலக தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.02.2034 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபற்றது.

நிகழ்ச்சியில் திருமதி இரா. தமிழ்ச்செல்வி, திரு. சி. செயபால் தம்பதியர் தமிழ்தாய் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா முனைவர் துரை.சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக செயலாளர் நினைவில் வாழும் புலவர் தங்க. ஆறுமுகன் மற்றும் இரா. முத்துகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பேரா. சுமித்ரா மற்றும் நம்ம ஊர் கோபிநாத் ஆசியோர் கவிதை வாசித்தனர். கல்வெட்டு ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அரங்க, மல்லிகா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 410-ஆவது ஆகஸ்டு மாத சிறப்பு நிகழ்ச்சி18.08.2004 அன்று நடைபெற்றது.

மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.

சொல்லடி சிவசக்தி” தலைப்பில் டயானா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திருமதி,கல்யாணி சிதம்பரம் உரையாற்றினார்.

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சேலை தமிழினியன் உரையாற்றும்போது 28.09.2024 அன்று நடைபெறவிருக்கின்ற தனது “இலக்கியச்சோலை” திங்களிதழின் 15-ஆம் ஆண்டு விழாவில் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு “தமிழ்ச்சங்க செல்வம்” என்னும் விருது வழங்கப்படவிருக்கிறோம், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

செயற்குழு உறுப்பினர் திரு. அ. சந்தி அவர்கள் இலக்கியச்சோலை மாத இதழின் 15-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு களிதை வாசித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் “கண்டு சொல் வென்று செல்” நிகழ்ச்சியினை டாக்டர் டி.பெ.இராமசுவாமி நிகழ்த்தினார்.

சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது