
19.05.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மே மாத சிறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜூலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சங்கத்டிதின் மூத்த உறுப்பினர் திரு. டி. பாலகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மே 12-ஆம் தேதி உலக அன்னையர் தினம் முன்னிட்டு கவிஞர் தங்கசாரா அவர்களும், மே 12-ஆம் தேரி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கவிஞர் யோசா அவர்களும் கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கரந்தை தமிழ்ச்சங்க நிறுவனர் தமிழ்த்தொண்டர் உமாமகேசுவரன் பிள்ளையின் தமிழ்த்தொண்டு தலைப்பில் முனையர் அரிமாத-தி. திவாகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் சங்க உறுப்பினரும் கந்தசாமி நாயுடு கல்லூரியின் முதல்வருமான முனைவர் வா.மு.சே. ஆண்டனர் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்தும், பவள விழா கானும் சங்கத்தின் செயற்கழு உறுப்பிணம் திரு. நாமதேவு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தும். வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கும் சங்க செயற்குழு உறுப்பினர் திரு. செயயால் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சகப் பொருளாளர் திரு. கோட் ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்ச்சி இனிதே நிறவைற்றது
