Author Archives: adminn

10-10-2021-அன்று நடைபெற்ற 362-வது கூட்டம்

10-10-2021-அன்று நடைபெற்ற 362-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
10.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 362-ஆவது இணையவழிக் கூட்டம்
10.10.2021-ஆம் நாள் ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற,
செயலாளர் அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
Dr. A.J. ரத்தின பிரகாஷ், BNYS; M.D. (Naturopathy) அரசு யோகா மற்றும் இயற்கை
மருத்துவமனை, அரும்பாக்கம் வாழ்வியல் நோய்களும், வாழ்வளிக்கும்
“இயற்கை மருத்துவம்” என்னும் தலைப்பிலும்,
Dr. S. ஐஸ்வர்யா, BNYS; M.D. (Acupunture) அரசுயோகா மற்றம் இயற்கை
மருத்துவமனை, அரும்பாக்கம் “நோய்களைக் கொண்டாடுவோம்” என்னும்
தலைப்பிலும் சிறப்புவரை ஆற்றினார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் மண்குளியல் சிகிச்சை ஈரத்துண்டு
சிகிச்சை, கை, கால் சுடுநீர் சிகிச்சை, இடுப்பு குளியல் (B.P.) முதுகு தண்டு வட
குளியல், வாழை இலை குளியல், சிகிச்சையும் உடல் கழிவுகளை நீக்கவும், நீரிழிவு
நோய் மற்றும் சிறுநீரக் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
கூறினர்.
நோய் எதிர்ப்புக்கான சிகிச்சைகளும் தூக்கமின்மைக்கும், ஞாபக சக்திக்கும் சூரிய
ஒளி குளியல், காந்த சிகிச்சை, நறுமண சிகிச்சை, மன அழுத்தம் மற்றும் மன
அமைதிக்கும் சிகிச்சை அளிப்பதோடு பட்டைதீட்டிய அரிசி உடலுக்கு நன்மை
பயக்காது என்றும் தெரிவித்தனர். ஒரு நாளைக்கு 8 குவளைத் தண்ணீர்
குடிப்பதோடு இருமுறை உணவு உள்ள வேண்டும் என்பதையும் கூறினர்.
சங்க உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் பொருளாளர்
நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

26-09-2021-அன்று நடைபெற்ற 361-வது கூட்டம்

26-09-2021-அன்று நடைபெற்ற 361-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.09.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 361-ஆவது காணொலிக் கூட்டம்
26.09.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.00 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமை தாங்க நடைபெற்றது. அரிமா முனைவர் துரை.
சுந்தரராஜுலு செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.
சிங்கப்பூர் பல்திறன் வித்தகி முனைவர் திருமதி ராஜி சீனிவாசன் (தலைவர்,
சிங்கப்பூர் தமிழ்நாட்டுப் புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்) “இனி ஒரு விதி
செய்வோம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
“இனி ஒரு விதி செய்வோம்” – ஆழமான இந்த சொற்றொடரை உணர்ந்து நாம்
சிந்திக்க வேண்டும் என்றும் சமுதாயத்திற்கு உணர்வு சார்ந்த நுண்ணறிவையும்
மன வளத்தையும் அளிக்க வேண்டும் என்றும் தேச நலத்திற்காக விவேகானந்தர்
பொன்மொழிகைளத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கிடைத்த பிறவியைப்
பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ZOHO என்ற நிறுவனத்தின் தலைவரின்
தலைமைப் பண்பு குறித்தும், குப்பை எண்ணங்களை மனதில் வைத்துக்
கொள்ளாமல் வன்மம் இன்றி இருக்க வேண்டும் என்றும், உதவும் கரங்கள்
வித்யாசாகர் போன்றோரை எடுத்துக் காட்டி தாய்மொழிப் பற்று, தேசத்தின் வரலாறு
குறித்தும் தம் சிறப்புரையில் தெரிவித்தார். இவரது உரையை சங்க
உறுப்பினர்களும், செயலாளரும் வாழ்த்திப் பாராட்டினர்.
இறுதியாக பொருளாளர் நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

12-09-2022-அன்று நடைபெற்ற 360-வது கூட்டம்

12-09-2022-அன்று நடைபெற்ற 360-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
12.09.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 360-ஆவது காணொலிக் கூட்டம்
12.09.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. புலவர்
த. இராமலிங்கனார் தலைமை தாங்க, செயலாளர் அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
மகாகவி பாரதியாரின் நெருங்கிய உறவினர் பொறியாளர் இரா. சுந்தர்,
“இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு” என்னும் பொருள் குறித்து
சிறப்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

28-08-2021-அன்று நடைபெற்ற 359-வது கூட்டம்

08-08-2021-அன்று நடைபெற்ற 358-வது கூட்டம்

08-08-2021-அன்று நடைபெற்ற 358-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.08.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 358-ஆவது காணொலிக் கூட்டம்
08.08.2021-ஆம் நாள் ஞாயிறு மாலை 05.30 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தொடக்க உரை
ஆற்ற, செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் அவர்கள் தலைமை உரையில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனையை
துவக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் “சீனாவில் செந்தமிழ் வளர்ச்சி” என்னும்
பொருள் பற்றி தண்தமிழ்ச் செல்வர் தமிழ்த்திரு. திருமலை சோமு சிறப்புரை
ஆற்றினார். இவர் சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் செய்தி ஆசிரியராக பணி
புரிபவர்.
ஆற்றிய உரை : சீன வானொலி நிலையம் 58 ஆண்டகளாக தமிழ் ஒளிபரப்பு
செய்கிறது. நிலையத்தில் 14 சீனர்கள் தமிழ்ப்பிரிவில் பணியாற்றுகின்றனர்.
ஒளிப்பரப்பப்படும் செய்திகள் நம்பகத் தன்மை கொண்டவை. எனவே இரு தரப்பு
உறவுகளை வளப்படுத்தும் விதமாக உள்ளது. பெய்ஜிங்கில் தமிழ்ச்சங்கம்
செயல்படுவதோடு அதில் பல சீனர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் படைப்புகளில் சீனர்கள் பங்கு
பெறுகின்றனர். சீனாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து பல நூல்கள் தமிழில்
உள்ளன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு சீன வானொலி நிலையம் ஆற்றும் பணி
போற்றத்தக்கது.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

01-08-2021-அன்று நடைபெற்ற 357-வது கூட்டம்

01-08-2021-அன்று நடைபெற்ற 357-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
01.08.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 357-ஆவது காணொலிக் கூட்டம்
01.08.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு
புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தொடக்க உரை ஆற்றினார். செயலாளர்
துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
இன்றைய நிகழ்வில் கவிஞர் வாணிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது. இக் கூட்டத்தில் பேரா. முனைவர், இலக்கிய மாமணி,
சொற்சுவைச்சுடர் க. ரேவதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இக் கூட்டத்தில்
கவிஞர் வாணிதாசன் குடும்பத்தினர் பங்கு பெற்றனர். பலர் வாழ்த்துரையும்
வழங்கினார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

25-07-2021-அன்று நடைபெற்ற 356-வது கூட்டம்

25-07-2021-அன்று நடைபெற்ற 356-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.07.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 356-ஆவது காணொலிக் கூட்டம்
25.07.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளராக தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
ஞானச்செவ்வேல், பொறியாளர் கண்ணன் சேஷாத்ரி அவர்கள் “உழவுக்கும்
தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவர் சிங்கப்பூரில் உள்ள விஷா இலக்கிய மன்றத்தின் தலைவராக உள்ளார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

18-07-2021-அன்று நடைபெற்ற 355-வது கூட்டம்

18-07-2021-அன்று நடைபெற்ற 355-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.07.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 355-ஆவது காணொலிக் கூட்டம்
18.07.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
அரிமா த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜலு த வரவேற்புரை ஆற்ற, தலைவர் புலவர்
த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்றினார். மறை. தி. தாயுமானவன்,
மறைமலை அடிகளாரின் வாழ்வும், வாக்கும் என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். இவர் தமிழ்நாடு அரசு வழங்கிய மறைமலை அடிகளாரின் முதல்
விருதாளர் ஆவார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

27-06-2021-அன்று நடைபெற்ற 354-வது கூட்டம்

27-06-2021-அன்று நடைபெற்ற 354-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
27.06.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 354-ஆவது காணொலிக் கூட்டம்
27.06.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அரிமா
த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்றினார். செயலாளர் துரை. சுந்தரராஜலு
தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்றினார்.
திரு. த.கு. திவாகரன் சிறப்புச் சொற்பொழிவாளர் “நகைச்சுவை இமயம்”
பேரா. கண. சிற்சபேசன் அவர்களை அறிமுகம் செய்து அறிமுக உரை ஆற்றினார்.
பேரா. கண. சிற்சபேசன் அவர்கள் “நான் நடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

20-06-2021-அன்று நடைபெற்ற 353-வது கூட்டம்