அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 15.06.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 352-ஆவது காணொலிக் கூட்டம் 15.06.2021-ஆம் நாள் ஞாயிறு மாலை 06.30 மணிக்கு மணவை முஸ்தபா அவர்களின் 86-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரிமா த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்ற, செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மருத்துவ மாமணி டாக்டர் மு. குமரேசன் மற்றும் கல்விச் செம்மல் முனைவர் மு. பொன்னவைக்கோ சிறப்புச் சொற்பொழிவாளர்களாகப் பங்கேற்றனர். பேரா. முனைவர் மறைமைலை இலக்குவனார் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாளர்களை அறிமுகம் செய்து உரை ஆற்றினார். சங்கத்தின் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். டாக்டர் மு. குமரேசன் அவர்கள் முஸ்தபா அவர்களின் “மருத்துவக் கலைச் சொல்லாக்கம்” என்னும் தலைப்பிலும் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் முஸ்தபா அவர்களின் “கணினியியல் கலைச் சொல்லாக்கம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 30.05.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 351-ஆவது கூட்டம் 30.05.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.00 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. செயலாளர் வரவேற்புரை ஆற்ற தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். சிங்கப்பூர் முனைவர் சொல்லின் செல்வர் தீந்தமிழ்ச் சுடர் இரத்தின வெங்கடேசன், சங்க இலக்கியச் சமூகம் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளாராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் திகழ்ந்தார். இக் கூட்டத்தில் முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களுக்கு “தீந்தமிழ்ச் சுடர்” என்னும் விருது வழங்கப்பட்டது. முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களை வை. குமரேசன், இரா. தண்டபாணி, முகம்மது பிலால் (சிங்கப்பூர்), பாபு சசிதரன் (மும்பை), தி. கோவிந்தராசன் (பாண்டி), பேரா. க. ரேவதி, புலவர் விஜயலட்சுமி, து.சீ. இராமலிங்கம், ஸ்ரீமதி, நாமதேவு, இரா. தமிழ்ச்செல்வி, சம்பத் பெரியசாமி, த. வடிவேலு ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர். இறுதியில் முனைவர் இரத்தின வெங்கடேசன் ஏற்புரை வழங்கினார். பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 16.05.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 350-வது காணொலிக் கூட்டம் 16.05.2021- ஆம் நாள் அன்று காலை 10.30 மணி அளவில் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் கூடியது. செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ந. ஜெயபால் (SBI) மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளாராக திகழ்ந்தார். கவிஞர் வாணி தாசனின் கவிதை இன்பம் குறித்து தீந்தமிழ்த் தென்றல் தமிழ்த்திரு. தி. கோவிந்தராசு, M.A., M.L., (புதுச்சேரி) சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். தலைவர் அவர்கள் தனது தொகுப்புரையில் கவிஞர் வாணிதாசன் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் கொண்டாடும் என்பதை அறிவித்தார். Dr. சிவக்குமரன் ராமலிங்கம் (சிங்கப்பூர்), ராம்லட்சுமண் (பிரான்சு) (தமிழ்க் கலாச்சார பண்பாட்டுக் கழகம்) கண்மதியன் முயற்சி முருகேசன், குடியாத்தம் குமணன் பேரா. சுந்தர், நந்தினி, தமிழ்ச்செல்வி, வளர்மதி, G. ரேவதி, நீலகண்ட தமிழ்முருகன், அய்யை (வாணிதாசன் மகள்), மணிமேகலை, தமிழ் இயலன், து.சீ. இராமலிங்கம், P.P. இராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 30.04.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 349-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் 30.04.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கொரோனா – நீங்களும் நானும் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் மரு. இரா. கலைக் கோவன் (இந்திய மருத்துவமன்றம், திருச்சி) தலைமையில் நடைபெற்றது. அவருடன் சிறப்புநிலை மருத்துவர்களான மரு. க. கோபால், மரு. K. செந்தில்குமார், மரு. S.P. திருப்பதி (செயலாளர், இந்திய மருத்துவக் கழகம்) ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மருத்துவர்கள், கொரோனா நோய்த் தொற்று குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளையும் தெரிவித்தனர். உறுப்பினர்களின் பல சந்தேகங்களை மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர். இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த பேரா. E.J. சுந்தர் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இக் கூட்டத்தின் அடுத்த நிகழ்வாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131-ஆவது பிறந்தநாள் விழா குறித்து தலைவர் தமிழ்ப்பணி செம்மல் புலவர். த. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினர். செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா த.க. திவாகரனும் இந்நிகழ்வில் பங்குபெற்றனர். இறுதியாக பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18.04.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 348-வது கூட்டம் இணைய வழி மூலம் 18.04.2021-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரு. துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார். இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர், சோலை தமிழினியன் இலக்கியச் சோலை இதழின் அண்ணாநகர் சிறப்பிதழை வெளியிட்டு அறிமுக உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் செயலாளர் தமிழருவி கோவை. கோகுலன், ஆரணி வட்டத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் காந்தீய கவிநிலா டாக்டர் க. பரமசிவம், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன் ஆகியோர் அண்ணாநகர் சிறப்பிதழ் வெளியிட்டது குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர். அடுத்த நிகழ்வாக சித்திரைத் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இலக்கிய மாமணி பேரா. முனைவர் க. ரேவதி, சித்திரையும் தமிழர் பண்பாடும் குறித்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பருவநிலை காலங்களை பகுத்தறிந்து அறிவியல் நுணுக்கமும் ஆழங்கால் பட்டவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கினர் என்பதை பல இலக்கியச் சான்றுகளுடன் உரையாற்றினார். பண்டைத் தமிழர்கள் கிழமை, கோள்களின் ஆதிக்கம் போன்றவைகளை நன்கு உணர்ந்தவர்களாகவும் அதற்கேற்றவாறு தம் வாழ்க்கையை நுண்மான் நுழைபுலத்தோடு வாழ்ந்து காட்டினார் என்பதையும் விளக்கிக் கூறினார. சித்திரைத் திருநாள் கொண்டாட்டங்களின் வெளிப்பாடு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதையும் தம் உரையில் சுட்டிக்காட்டினார். இறுதியாக சித்திரைத் திருவிழா தமிழர் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து இருந்ததை இலக்கியச் சான்றுகளுடன் கூறி தம் உரையை நிறைவு செய்தார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை பலர் பாராட்டிப் பேசினர். இறுதியாக பொருளாளர் நன்றி கூற இணையவழி கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 14.03.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 347-வது கூட்டம் இணைய வழி மூலம் 14.03.2021-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரு. துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை ஆற்ற ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்ற உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி எழுத்துத் துறையில் அதிகம் சாதிப்பது பெண்களா? ஆண்களா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நற்றிணை நாயகி கவிஞர் கலைச் செல்வி புலியூர் கிகன் அவர்களை நடுவராக கொண்டு நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் க. அஷயா, கோவை மற்றும் பேரா. முனைவர் சுபா. அருணாச்சலம், கடலூர், அதிகம் சாதிப்பது பெண்களே என்றும், முதுமுனைவர் தெ. சத்யா, ஆய்வறிஞர், உலக மக்களியர் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை மற்றும் முனைவர் சை. இளமத, இளம் வணிகவியல் 3-ஆம் ஆண்டு மாணவி விழுப்புரம் அதிகம் சாதிப்பது ஆண்களே என்றும் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வாதிட்டனர். இறுதியில் பட்டிமன்ற நடுவர் அவர்கள் எழுத்துத் துறையில் அதிகம் சாதிப்பது ஆண்களே என்று தீர்ப்பளித்தார். பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது குறித்துப் பலர் பாராட்டிப் பேசி பட்டிமன்றத்தில் பங்கேற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பொருளாளர் நன்றி கூற சங்கத்தின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 27.02.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 346-வது கூட்டம் இணைய வழி மூலம் 27.02.2021- ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் திகழ்ந்தார். சொற்பொழிவாளர் தமிழ்ச் செம்மல் முனைவர் மா.கி. இரமணன் அவர்கள் உலகத் தாய்மொழி நாள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய உரை: “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்ற திருமூலரின் வாக்குப்படி தமிழ் அமைப்புகள் தான் தாய்மொழித் தமிழைக் கொண்டாட முனைப்பாக இருக்க வேண்டும். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் உலகத் தாய்மொழி நாளை கொண்டாடுவது பெருமையாக உள்ளது. திரு. சுப்பிரமணியம் அவர்கள் 15-20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி சிறக்கவும் அதன் வளம் பெருகவும் தாய்மொழித் திருநாளை கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தியவர். விருதுநகர் மணல்மேடு சங்கர லிங்கனார் தமிழ்நாடு என்னும் பெயர் வைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தியும் உண்ணாவிரதம் இருந்தும் வெற்றி கண்டவர். 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது. மனநலம் பேசியவர் வள்ளுவர் மனம் நன்றாக இருந்தால் வாரிசுகள் உயரும் என்பதை உணர்த்தியவர் ஆண்டுதோறும் பிப்ரவரி திங்களில் தாய்மொழித் திருநாளை கொண்டாடினால் தமிழ் மொழி சிறக்கும். திருமந்திரத்தில் தமிழின் பெருமை பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. பாவேந்தரும், தமிழின் சிறப்பை உலகமெலாம் பரப்ப வேண்டும் என்னும் கொள்கை உடையவர். தமிழ்மொழி செம்மையானது. தன் சீரிளமைத் திறம் குன்றாமல் விளங்கி வருவது. சிவபெருமான் வளர்த்தது. இன்றைய தலைமுறைக்கு தமிழ் உணர்வு இல்லை. கல்வியில் நல்லதமிழ் இருக்க வேண்டும் முழுமையான தமிழை கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்க இத்திருநாளில் செயல்படுத்த முயல வேண்டும். பாடல்பாடி மழையை வரவேற்கும் ஆற்றல் கொண்டது நம் மொழி. தமிழக்குச் சிறப்பு அகமும், புறமும் – என்று பிறந்தவள் என்று உணராதவள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல், இடை, கடைச் சங்கம் தோன்றியது. பழமையான இம்மொழியைக் காப்பது தொன்மையான இலக்கண நூல்களே. தமிழ் உலக நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழ் மொழிக்கு பெருமை தருவதாகும். இயல், இசை, நாடகத் தமிழோடு அறிவியல் தமிழையும் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி கொணர்ந்தார். தமிழுக்கு என்று தனி இடத்தை அளித்து வருவது தமிழ் சீன வானொலி உலகப் பல்கலைக்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நல்ல தமிழைப் படிப்போம் என்றும் எல்லா இடத்திலும் தமிழ் நுழைய வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். இறுதியாக நன்றி உரை ஆற்றிய பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம், அரிமா த.கு. திவாகரன் அவர்கள் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க கூட்டம் இணையவழி காணொளிக் காட்சி மூலம் நடப்பதற்கு எடுத்துவரும் சீரிய முயற்சிகளையும் ஆற்றிவரும் சேவைகளையும் பாராட்டிப் பேசினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 07.02.2021 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 345-வது கூட்டம் இணைய வழி மூலம் 07.02.2021- ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் திகழ்ந்தார். சொற்பொழிவாளர் திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் பைந்தமிழ் ஆசான் கா. நமச்சிவாயர் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 20.02.1876-ஆம் ஆண்டு பிறந்த காவேரிப்பாக்கம் நமச்சிவாயர் கல்வி கற்ற பின்னர் தண்டையார்பேட்டையில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து மகாவித்வான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மேலும் கல்விப் பயின்றார்.
செயின்ட் சேவியர் உயர் நிலைப்பள்ளி, நார்விக் மகளிர் பள்ளி, சிங்கலர் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். தமிழ்க்கழகத்தின் தலைமைத் தேர்வாளராகவும், தமிழ்க் கல்வி சங்க உறுப்பினராகவும், பின்னர் அதன் தலைவராகவும் 1934 வரை பதவியில் தொடர்ந்து நீடித்தார். தமிழ்ப்பாட நூல்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எழுதினார். தமிழ் வித்வான் தேர்வு முறையை அறிமுகம் செய்து அதில் தேர்ச்சி பெறுவோர் பட்டம் பெறுவர் என அறிவித்தார். அறிவியில் நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தார். 1934-ல் தமிழர் திருநாளை தமிழ் ஆசிரியர்களைச் சிறப்பித்துக் கொண்டாடினார். பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன், நாடக மஞ்சரி என 10 நாடகங்களை அரேங்கேற்றினார். தமிழ்ச் சிற்றிலக்கணம், ஆத்திச்சூடி, தொல்காப்பியம், இளம்பூரணர், உரையுடன் வெளியிட்டதோடு தணிகைப்புராணம், தஞ்சை வாணன் கோவை, இறையனார் களவியல் ஆகியவற்றைத் திருத்திய பதிப்பாக வெளியிட்டார். 1936-ல் பொங்கல் அன்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தைத் தோற்றுவித்தார். தமிழ்க் கடல் என்ற பெயரில் அச்சகம் நடத்தி கவிதைகள் வெளியிட்டார். 1936-ஆம் ஆண்டு மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழக நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார். இதை தொடர்ந்து மரு. ஜி. பவித்ரா அவர்கள் அறிவோம் ஆயுர்வேதம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.மரு. ஜி. பவித்ரா அவர்கள் ஆயுர் என்றால் வாழ்க்கை. வேதம் என்றால் அறிவு. வாழ்க்கையைப் பற்றிய அறிவு தான் ஆயுர்வேதம். வெறும் நோய்களை தீர்க்கும் மருத்துவ முறையான மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை முறைகளையும் எடுத்துரைக்கிறது. நோயை குணப்படுத்துவது மட்டுமின்றி மீண்டும் நோய் வராமல் தடுத்து ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியம் என்றால் உடம்பில் உள்ள மூன்று தோஷங்கள், ஏழு தாதுக்கள், ஜீரண சக்தி, மனதின் வேலைப்பாடுகள் இவற்றின் சமநிலையே ஆரோக்கியம். இந்த சமநிலை குலையாதிருக்கும் பொருட்டு தினசரி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், பருவக்காலங்களுக்கு ஏற்ப கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், தினச்சர்ய, ருதுச்சர்ய என்றப் பெயரில்
ஆயுர்வேதம் விளக்குகிறது. ஆயுர்வேதத்தில் நோய் தனி மனிதன் தனி எனப் பிரிக்காமல் மனதினை ஒரு முழுமையான ஒன்றாகக் கருதி உடல், மனம், தோஷங்கள், நோயின்
அறிகுறிகள் என அனைத்தையும் கருத்தில்க் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதர்வண வேதத்தில் இருந்து உப வேதமாக வந்த ஆயுர்வேதம், மோட்சம் அடைவதற்கான கருவியாகத்தான் கருதப்படுகிறது. சீரான ஆரோக்கியமான வாழ்வுக்கான முழுத் தீர்வாகவும் அமைகிறது.
இறுதியாக நன்றி உரை ஆற்றிய பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம், அரிமா த.கு. திவாகரன் அவர்கள் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க கூட்டம் இணையவழி காணொலிக் காட்சி மூலம் நடப்பதற்கு எடுத்துவரும் சீரிய முயற்சிகளையும் ஆற்றிவரும் சேவைகளையும் பாராட்டிப் பேசினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 19.03.2023 அன்று காணொலி மூலம் நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 19.03.2023 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா. முனைவர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள் உலக மகளிர் தினம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் உலக மகளிர் தினம் கொண்டாடுவது குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். முக்கியமாக பிரான்ஸ் நாட்டில் வேலை செய்யும் ஆடவர்களுக்கு அதிக சம்பளமும், அதே வேலையை செய்யும் மகளிருக்கு குறைந்த சம்பளமும் கொடுத்து வந்ததாகவும், அதை எதிர்த்து மகளிர் சரி சமமான சம்மளத்தை கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து போராட்டம் நடத்தினார்கள். யுனெஸ்கோ மன்றம் வரையில் இது எடுத்து செல்லப்பட்டு, யுனெஸ்கோ மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரே மாதிரியான வேலையை செய்யும் ஆடர்வகளுக்கும், மகளிருக்கும் எந்த வேறுபாடுமின்றி ஒரே சம்பளம் கொடுக்க வேண்டுமென்று அறிவித்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பாடுபட்ட உலகத்தில் உள்ள சிறந்த பெண்மணிகளை குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் கூறினார். தலைவர் பேசுகையில் பாரதியார், பாரதிதாசன் பாடிய பெண்ணுரிமை பாடல்களையும், பெண் அடிமை தனத்தை எதிர்த்து புலவர்கள் பாடிய பாடல்களையும் மேற்கோள் காட்டினார். முன்னதாக செயலாளர் வரவேற்றுப் பேசி அவையில் இருந்த மகளிரை சால்வை அணிவித்துப் பாராட்டினார். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் கண்டு சொல், வென்று செல் நிகழ்ச்சியை நடத்தி பரிசு வழங்கினார். துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.இம்மொழியைக் காப்பது தொன்மையான இலக்க நூல்களே. தமிழ் மொழி பல உலக நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பது தமிழ் மொழிக்கு பெருமை தருவதாகும். இயல், இசை, நாடக தமிழோடு, அறிவியல் தமிழையும் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி கொணர்ந்தார். தமிழுக்கு என்று தனி இடத்தை அளித்து வருவது தமிழ் சீன வானொலி ஆகும். உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நல்ல தமிழை படிபோம் என்றும் எல்லா இடத்திலும் தமிழ் நுழைய வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். இறுதியாக நன்றி உரை ஆற்றிய பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம், அரிமா த.கு. திவாகரன் அவர்கள் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க கூட்டம் இணையவழி காணொலிக் காட்சி மூலம் நடப்பதற்கு எடுத்துவரும் சீரிய முயற்சிகளையும் ஆற்றிவரும் சேவைகளையும் பாராட்டிப் பேசினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.11.2020 அன்று இணைய வழி மூலம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 342-வது கூட்டம் இணைய வழி மூலம் 17.11.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பளராக இந்த நிகழ்ச்சியை இணைய வழி மூலம் ஏற்பாடு செய்த அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் முனைவர் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்கப் புலவர்களின் மாண்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு சொற்பொழிவாளர் ஆற்றிய உரை : சங்ககால இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென் கீழ்க்கணக்கு ஆகிய நூல்கள் அடங்கும். இவற்றைப் பாடிய புலவர்களில் பெண்பால் புலவர்களும், சில மன்னர்களும் அடங்குவர். இப் புலவர்கள் அக்காலச் சமுதாய வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக விளங்கினர். தம் குடும்பம் வறிய நிலையில் இருந்தாலும், தரம் தாழாது நுண்மான் நுழைபுலம் மிக்கவராக விளங்கினர். ஆற்றுப்படை நூல் பாடிய புலவர்கள் தாம் பெற்ற செல்வம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு செல்வம் பெறாதவர்களை செல்வச் செழிப்போடு விளங்கும் மன்னர்களிடம் ஆற்றுப்படுத்தும் குணம் கொண்டவர்களாக விளங்கினர். சங்கப் புலவர்கள் பல நீதி நூல்கள் மூலமாக மக்களை நல்வழிப்படுத்தி அறவாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தனர். சங்கப் புலவர்கள், அக்கால மக்கள் காதல் மற்றும் வீரத்தை போற்றி வாழ்ந்தனர் என்பதை பல பாடல்களில் பாடியுள்ளனர். சங்கப் புலவர்கள் பலர் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி நல்லாட்சி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந் நிகழ்ச்சியை தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சிலர் வாழ்த்தி பேசினார்கள். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் துபாயிலிருந்து தமிழறிஞர்கள் வாழ்த்தி பேசினார்கள். பொருளாளர் நன்றி கூற இணைய வழி கூட்டம் இனிதே நிறைவடைந்தது.