

27-02-2021-அன்று நடைபெற்ற 346-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
27.02.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 346-வது கூட்டம் இணைய வழி மூலம் 27.02.2021-
ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்
திரு. துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக் கூட்டத்தின்
ஒருங்கிணைப்பாளராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் திகழ்ந்தார்.
சொற்பொழிவாளர் தமிழ்ச் செம்மல் முனைவர் மா.கி. இரமணன் அவர்கள் உலகத்
தாய்மொழி நாள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய உரை:
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!”
என்ற திருமூலரின் வாக்குப்படி தமிழ் அமைப்புகள் தான் தாய்மொழித் தமிழைக்
கொண்டாட முனைப்பாக இருக்க வேண்டும். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் உலகத்
தாய்மொழி நாளை கொண்டாடுவது பெருமையாக உள்ளது. திரு. சுப்பிரமணியம்
அவர்கள் 15-20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி சிறக்கவும் அதன் வளம்
பெருகவும் தாய்மொழித் திருநாளை கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தியவர்.
விருதுநகர் மணல்மேடு சங்கர லிங்கனார் தமிழ்நாடு என்னும் பெயர் வைப்பதற்கு பல
போராட்டங்கள் நடத்தியும் உண்ணாவிரதம் இருந்தும் வெற்றி கண்டவர். 1967-ஆம்
ஆண்டு ஏப்ரல் 14-ல் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது. மனநலம்
பேசியவர் வள்ளுவர் மனம் நன்றாக இருந்தால் வாரிசுகள் உயரும் என்பதை
உணர்த்தியவர் ஆண்டுதோறும் பிப்ரவரி திங்களில் தாய்மொழித் திருநாளை
கொண்டாடினால் தமிழ் மொழி சிறக்கும். திருமந்திரத்தில் தமிழின் பெருமை பல
இடங்களில் கூறப்பட்டுள்ளது. பாவேந்தரும், தமிழின் சிறப்பை உலகமெலாம் பரப்ப
வேண்டும் என்னும் கொள்கை உடையவர். தமிழ்மொழி செம்மையானது. தன்
சீரிளமைத் திறம் குன்றாமல் விளங்கி வருவது. சிவபெருமான் வளர்த்தது.
இன்றைய தலைமுறைக்கு தமிழ் உணர்வு இல்லை. கல்வியில் நல்லதமிழ் இருக்க
வேண்டும் முழுமையான தமிழை கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்க இத்திருநாளில்
செயல்படுத்த முயல வேண்டும்.
பாடல்பாடி மழையை வரவேற்கும் ஆற்றல் கொண்டது நம் மொழி. தமிழக்குச் சிறப்பு
அகமும், புறமும் – என்று பிறந்தவள் என்று உணராதவள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல், இடை, கடைச் சங்கம் தோன்றியது. பழமையான இம்மொழியைக்
காப்பது தொன்மையான இலக்கண நூல்களே. தமிழ் உலக நாடுகளில் ஆட்சி
மொழியாக உள்ளது. தமிழ் மொழிக்கு பெருமை தருவதாகும். இயல், இசை, நாடகத்
தமிழோடு அறிவியல் தமிழையும் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி கொணர்ந்தார்.
தமிழுக்கு என்று தனி இடத்தை அளித்து வருவது தமிழ் சீன வானொலி உலகப்
பல்கலைக்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நல்ல
தமிழைப் படிப்போம் என்றும் எல்லா இடத்திலும் தமிழ் நுழைய வேண்டும் என்பதையும்
வற்புறுத்தினார்.
இறுதியாக நன்றி உரை ஆற்றிய பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம், அரிமா த.கு.
திவாகரன் அவர்கள் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க கூட்டம் இணையவழி காணொளிக்
காட்சி மூலம் நடப்பதற்கு எடுத்துவரும் சீரிய முயற்சிகளையும் ஆற்றிவரும்
சேவைகளையும் பாராட்டிப் பேசினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
