14-03-2021-அன்று நடைபெற்ற 347-வது கூட்டம்

14-03-2021-அன்று நடைபெற்ற 347-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
14.03.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 347-வது கூட்டம் இணைய வழி மூலம்
14.03.2021-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. செயலாளர் திரு. துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை ஆற்ற
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை
ஆற்ற உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை ஒட்டி எழுத்துத் துறையில் அதிகம் சாதிப்பது பெண்களா? ஆண்களா?
என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நற்றிணை நாயகி கவிஞர் கலைச்
செல்வி புலியூர் கிகன் அவர்களை நடுவராக கொண்டு நடைபெற்றது. பேராசிரியர்
முனைவர் க. அஷயா, கோவை மற்றும் பேரா. முனைவர் சுபா. அருணாச்சலம்,
கடலூர், அதிகம் சாதிப்பது பெண்களே என்றும், முதுமுனைவர் தெ. சத்யா,
ஆய்வறிஞர், உலக மக்களியர் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை மற்றும் முனைவர்
சை. இளமத, இளம் வணிகவியல் 3-ஆம் ஆண்டு மாணவி விழுப்புரம் அதிகம்
சாதிப்பது ஆண்களே என்றும் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வாதிட்டனர்.
இறுதியில் பட்டிமன்ற நடுவர் அவர்கள் எழுத்துத் துறையில் அதிகம் சாதிப்பது
ஆண்களே என்று தீர்ப்பளித்தார். பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது குறித்துப்
பலர் பாராட்டிப் பேசி பட்டிமன்றத்தில் பங்கேற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பொருளாளர் நன்றி கூற சங்கத்தின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.