20.08.2017 – 307- வது மாதாந்திரக் கூட்டம்

Photo with News - August 2017(1)-3Photo with News - August 2017(1)-1Photo with News - August 2017(1)-2

20.08.2017 – 307- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.08.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 307-ஆவது கூட்டம் 20.08.2017 அன்று புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற இந்து ஒற்றுமைக் கழக மேல் நிலைப் பள்ளி தமிழாசிரியர்
கோ. அண்ணாதுரை அவர்கள் “விடுதலை வேட்கையில் தமிழ்க் கவிஞர்களின் பங்கு”
என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பாரதியார், பாரதிதாசன், கவிமணி
தேசிக விநாயகம் விள்ளை, நாமக்கல் கவிஞர் ஆகியவர்கள் நாடு விடுதலைக்காக
பாடுபட்டதை அவரவர்கள் எழுதிய எழுச்சிக் கவிதைகள் குறித்தும் அவை எந்த
அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இசையுடன் பாடி
அவையோரை தன்வயப்படுத்தினார். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாடு
இருத்தல் வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியதை நினைவு கூர்ந்தார்.
தமிழகத்தில் இன்றைக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இல்லை என்பதை
வருத்ததோடு குறிப்பிட்டார்.
தலைவர் பேசும் போது பாரதி, பாரதிதாசன், மேலும் பல கவிஞர்கள் எழுதிய
கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை எனக்
குறிப்பிட்ட அவர் வீடுகளில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்படுவதில்லை
என்பது வருத்தமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் ஆகஸ்ட் மாதம் பிறந்த நாள் கண்ட
உறுப்பினர்களை வாழ்த்தினார்.
அண்ணாநகர் நலச்சங்கத்தின் சார்பில், துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணன்
அவர்களுக்கு, “பன்முக சாதனையாளர்” விருது வழங்கியதை பாராட்டி தமிழ்ச்சங்கம்
சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பிரஷாந்தி குருகுலம் மற்றும்
திருவள்ளுவர் மிஷன் இணைந்து சி. பாலுசாமி அவர்களது திருக்குறள் சேவையைப்
பாராட்டி, “திருக்குறள் மாமணி” விருது பெற்றமைக்கு பாராட்டு தெவிக்கப்பட்டது.
மருத்துவத் துறையில் மருத்துவ சிகிச்சை அறுவை அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு 42
ஆயிரம் ஒளிப்படங்களை எடுத்து சாதனை புரிந்தததை இந்து தமிழ் நாளிதழ்
வெளியிட்டதைப் பாராட்டி நமது சங்க உறுப்பினர் டி.எஸ்.கே. கரண் அவர்களுக்கு
வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்த திரு. வளன் அரசு அவர்கள், தலைவர்
வேண்டுகோளை ஏற்று, சில மணித்துளிகள் திருக்குறள் குறித்து சிறப்பாகப் பேசினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி வினா-விடை நிகழ்ச்சித் தொடர்ந்து, பொருளாளர் தி.
ரங்கராஜன் கூறுகையில் புதிய உறுப்பினர்கள் 3 பேர்களை அறிமுகம் செய்த பேரா.
திருக்குறள் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி கூறினார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.