30-04-2021-அன்று நடைபெற்ற 349-வது கூட்டம்

30-04-2021-அன்று நடைபெற்ற 349-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
30.04.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 349-வது கூட்டம் காணொலிக்
காட்சி மூலம் 30.04.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30
மணிக்கு நடைபெற்றது. இதில் கொரோனா – நீங்களும் நானும்
என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் மரு. இரா.
கலைக் கோவன் (இந்திய மருத்துவமன்றம், திருச்சி) தலைமையில்
நடைபெற்றது. அவருடன் சிறப்புநிலை மருத்துவர்களான மரு. க.
கோபால், மரு. K. செந்தில்குமார், மரு. S.P. திருப்பதி (செயலாளர்,
இந்திய மருத்துவக் கழகம்) ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக
கலந்து கொண்டனர். மருத்துவர்கள், கொரோனா நோய்த் தொற்று
குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளையும்
தெரிவித்தனர். உறுப்பினர்களின் பல சந்தேகங்களை மருத்துவர்கள்
தெளிவுபடுத்தினர். இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த பேரா.
E.J. சுந்தர் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தின் அடுத்த நிகழ்வாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
அவர்களின் 131-ஆவது பிறந்தநாள் விழா குறித்து தலைவர்
தமிழ்ப்பணி செம்மல் புலவர். த. இராமலிங்கம் அவர்கள் சிறப்புரை
ஆற்றினர். செயலாளர் திரு. துரை. சுந்தரராஜூலு மற்றும் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் அரிமா த.க. திவாகரனும் இந்நிகழ்வில்
பங்குபெற்றனர். இறுதியாக பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.