16-05-2021-அன்று நடைபெற்ற 350-வது கூட்டம்

16-05-2021-அன்று நடைபெற்ற 350-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.05.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 350-வது காணொலிக் கூட்டம் 16.05.2021-
ஆம் நாள் அன்று காலை 10.30 மணி அளவில் புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் கூடியது. செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ந. ஜெயபால் (SBI) மறைவிற்கு இரங்கல்
தெரிவிக்கப்பட்டது. அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளாராக திகழ்ந்தார்.
கவிஞர் வாணி தாசனின் கவிதை இன்பம் குறித்து தீந்தமிழ்த் தென்றல்
தமிழ்த்திரு. தி. கோவிந்தராசு, M.A., M.L., (புதுச்சேரி) சிறப்புச் சொற்பொழிவு
ஆற்றினார். தலைவர் அவர்கள் தனது தொகுப்புரையில் கவிஞர் வாணிதாசன்
பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் கொண்டாடும்
என்பதை அறிவித்தார். Dr. சிவக்குமரன் ராமலிங்கம் (சிங்கப்பூர்), ராம்லட்சுமண்
(பிரான்சு) (தமிழ்க் கலாச்சார பண்பாட்டுக் கழகம்) கண்மதியன் முயற்சி முருகேசன்,
குடியாத்தம் குமணன் பேரா. சுந்தர், நந்தினி, தமிழ்ச்செல்வி, வளர்மதி, G. ரேவதி,
நீலகண்ட தமிழ்முருகன், அய்யை (வாணிதாசன் மகள்), மணிமேகலை, தமிழ்
இயலன், து.சீ. இராமலிங்கம், P.P. இராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இறுதியாக பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.