18.09.16 – பொதுக்குழுக் கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

பொதுக்குழுக்  கூட்டம்

18.09.16 – பொதுக்குழுக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்
தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
18.09.2016 அன்று நடைபெற்றது.

வரவேறபுரை ஆற்றிய தலைவர் தமிழ்ச்சங்கம் இதுவரை ஆற்றிய பணிகளை
உறுப்பினர்களுக்கு விளக்கினார். நமது சங்கம் பல்வேறு பணிகளை செய்ய
நினைத்தாலும் நிதி நெருக்கடி காரணமாக செய்ய முடியாத நிலை உள்ளதாக
கூறினார். உடனடியாக சில உறுப்பினர்கள் தங்களால் இயன்ற அளவு
நன்கொடைகள் அளித்தனர்.
செயலாளர் பேசுகையில் 2015-2016-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
மற்றும் 2015 – 2016-ஆம் ஆண்டிற்கான ஆண்டு கணக்குள் ஏறகனவே
உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு அது குறித்து
விளக்கம் தேவை என்றால் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
பின்னர், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு கணக்குகள் முறைப்படி
பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2016-2018-ஆம் ஆண்டின்
தணிக்கையாளராக தற்போதைய தணிக்கையாளர் திரு. சரத்குமார் அவர்களையே
நியமிப்பது என்றும் அவரது ஆண்டு ஊதியம் ரூ.1500 என அளிப்பதற்கு
பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. கீழ்கண்ட தமிழறிஞர்களை புரவலர்களாக
நியமிக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
முனைவர் ஒவை நடராசன், டி.ஆர். இராசு, வே.சு. வேணுகோபாலன்,
முனைவர் பு.பெ. இராமசாமி ஆகியோர்.
பின்னர் 2016-2018-ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை
தேர்தல் ஆணையர் திரு. தர்மன் அவைக்கு அளித்தார்.

தலைவர் புலவர் த. இராமலிங்கம்

துணைத் தலைவர்கள்: அமுதா பாலகிருஷ்ணன், முனைவர்
கிருஷ்ணவேணி அருணாசலம் வி. நாகசுந்தரம் செயலளார் துரை. சுந்தரராசன்

பொருளாளர் தி. ரங்கராஜன்

இணைச் செயலாளர்கள் து.சீ. இராமலிங்கம் சு. பாரததேவி

செயற்குழு அறுப்பினர்கள் :

  1. ஆ.ச. அருள்
  2. வை. குமரேசன்
  3. த. வடிவேலு
  4. ச. கலியமூர்த்தி
  5. கே.எஸ். மலர்மன்னன்
  6. இரா. பூபாலன்
  7. சி. பாலுசாமி
  8. கோ.ஞானப்பிரகாசம்
  9. சி. செயபால்
  10. பீம. பெருமாள்
  11. க. தனப்பால்
  12. இ.ஜே. சுந்தர்
  13. இ. தர்மன்
  14. ஸ்ரீ மதி வெங்கடாசலம்
  15. இரா. செல்லராசு

பின்னர். இன்றைய கூட்டத்திற்கான செலவினை ஏற்றுக் கொள்வதாக திரு.
இராமு அவர்கள் அதற்கான பணத்தை பொருளாளரிடம் அளித்தார். வந்திருந்த
அனைவருக்கும் நன்கொடை அளித்தவர்களுக்கும் ரூ.5,000/- நன்கொடை
அறிவித்த திரு. வே.சு. வேணுகோபால் மற்றும் திரு. இராமு அவர்களுக்கும்
செயலாளர் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.