அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.06.2017 அன்று நடைபெற்ற ‘முப்பெரும் விழா”
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 32-ஆவது ஆண்டு விழா, அகவை முதிர்ந்த
தமிழறிஞர்கள் திருவாளர்கள் அன்புப்பழம் நீ, பி.கே. சிங்கார அரங்கம்,
நெ.ஆ. பூபதி ஆகியோருக்கு விருதும், பொற்கிழியும் வழங்கல், அரசுப் பொதுத்
தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு
சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கல் ஆகிய ‘முப்பெரும் விழா’க்கள்
18.06.2017 அன்று, தலைவர் புலவர் த. இராமலிங்கம்
தலைமையில்
நடைபெற்றது.
சிறப்புரை ஆற்றிய முன்னாள் அரசுச் செயலாளர் திரு. கி. தனவேல், இ.ஆ.ப.
அவரகள், தமிழ்மொழி குறித்த பல்வேறு விளக்கங்களை அளித்தார். தமிழ்
தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் நடைபெறும் கீழடி அகழ்வாய்வு
மூலம் தெரியவருவதாகவும், இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க
இலக்கியங்களை ஆதாராமாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் பேசுகையில், தமிழ்ப் பாடத்தில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண்
பெறுவதால், பல மாணவர்கள் சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற பாடங்களை
தேர்வு செய்வதாக கூறி இதனைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர்கள்
தமிழ்ப்பாடத்திற்கு மதிப்பெண் அளிக்கும் போது சலுகை காட்ட வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது நடைபெறும் தமிழ்ச்சங்க கூட்டங்களுக்கு பெரும்பாலும்
முதியவர்களே வருவதாகவும், இளைஞர்கள் வருவதில்லை என்று குறிப்பிட்டு
வருங்காலத்தில் தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து பேசிய
முனைவர் சேதுகுமணன்
பேசியபோது தமிழ்மொழியின் சிறப்பு குறித்து சிலாகித்து பேசினார்.
அண்ணாநகர் தமிழ்ச்சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி ஒரு லட்சம்
ரூபாய் நன்கொடையாக அறிவித்தார்.
தலைவர் பேசுகையில் தமிழ்ச்சங்கம் ஆற்றி வரும் பணிகளைக் குறித்து
விரிவாக எடுத்துத்தார் தமிழ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில்
கஞ்சத்தனம் பார்ப்பது இல்லை எனவும், அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான்
வினாத்தாள்கள் திருத்தப்படுவதாகவும் விளக்கினார்,
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றனார்.
பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூறினார்.





