






17-11-2019-அன்று நடைபெற்ற 335-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்களுக்கு நினைவு பரிசினை
புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தர்ராஜன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி

திருமதி. மணிமேகலை கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
உடன் புலவர் பேரா. இரா. நாராயணன், புலவர் த. இராமலிங்கம், துரை, சுந்தர்ராஜன்

103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை பாராட்டி
எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன் அவையோருக்கு வாசித்த காட்சி.

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.11.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 335-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 17.11.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்கள்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “வாழ்வும் வாக்கும்”
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில் திரு. கி.ஆ.பெ. அவர்கள் 94 வயதான அவர்
சாமான்யராகப் பிறந்து சாதனையாளராக விளங்கினார் என்றும் பள்ளிக்குச்
செல்லாமலேயே பெரும் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்ப்பணி
ஆற்றி வந்தார் எனக் குறிப்பிட்டார். அவர்க ஒரு சுயமரியாதை சுடரொளி
என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரை பெரியார் ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு
அழைத்து வந்தார் என்றாலும், ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிட கழகமாக
மாற்றப்பட்டதால் அதிலிருந்து வெளியேறினார் என கூறினார்.
அண்ணாவை அழைத்து சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கில
சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்க்கச் செய்தார்.
முனைவர் நாராயணன் அவர்கள் பேசுகையில் கி.ஆ.பெ. அவர்கள் சித்த
மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு, அரசின் பரிந்துரையின் மேல் சித்த
மருத்துவ வாரியத் தலைவராக விளங்கினார்.
அவர் 1930-ஆம் ஆண்டு இலங்கை சென்று உரையாற்றினார் என்றும்,
இரண்டாவது உலகத் தமிழ்மாநாடு நடத்த பெரும் உதவியாக இருந்தார்
எனவும் குறிப்பிட்டார். தீண்டாமையை எதிர்த்தார். முத்தமிழ்க் காவலர்,
கலைமாமணி, மதுரைப் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் போன்றவைகள்
இவரது சிறப்பு.
கலைஞர் அவர்கள் இவரது பெயரால் திருச்சி மாவட்ட
மருத்துவமனைக்கு கி.ஆ.பெ. மருத்துவமனை என்று பெயர் சூட்டினார்.
12 குறட்பாட்களுக்கு இவர் நுட்பமான மாறுபட்ட உரை எழுதியுள்ளார்.
சித்த மருத்துத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதி 100 மருத்துவ
முறைகளுக்கு பரிகாரம் கொடுத்துள்ளார்.
கி.ஆ.பெ. அவர்களின் பெயர்த்தி வெற்றிச்செல்வி பேசுகையில் வ.சுப.
மாணிக்கம், எம்.ஜி.ஆர் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு
வைத்திருந்தார். தஞ்சையில் உலகத் தமிழ் மாநாட்டில் பேசுகையில் தமிழ்ப்
பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தபோது உடனே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எழுந்து அவரது
கோரிக்கையை ஏற்று இதே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைகழகம்
அமைக்கப்படும் என்று அறிவித்தார் என்றும் குறிப்பிட்டார். அவரது
குறிக்கோள் உணவு, உடை, நேரம் தவறாமை இவைகளை இறுதி வரை
கடைபிடித்தார்.
தமிழ்க்கொடியை உருவாக்கி அதில் வில், மீன், அம்பு, இலச்சினை
பொறித்தார். கோபத்தை தவிர்த்தல், பிறரிடம் உதவியை எதிர்பாராதே,
உழைத்து சம்பாதிக்க வேண்டும், போதுமென்ற மனம் இவைதான் அவர்
கடைபிடித்த கொள்கைகள். எழுபதாயிரம் தமிழ்த் திருமணத்தை நடத்தி
வைத்துள்ளார் என்று கூறினார்.
சங்க உறுப்பினர்கள் இரா. மோகனசுந்தரம், திருக்குறள் பாஸ்கரன்,
து.சீ. இராமலிங்கம் ஆகியோர் தங்களுக்கும் கி.ஆ.பெ. வுக்கும் உள்ள
தொடர்புகளை நினைவுபடுத்தினர்.
திரு. லட்சுமிகாந்தன் பாரதி, இ.ஆ.பெ. அவர்கள், அவரது தாத்த நாவலர்
சோமசுந்தர பாரதியின் நெருங்கிய நண்பர் என்றும் அவரது தமிழ்ப்பற்று,
சித்த மருத்துத்தில் ஈடுபாடு போன்றவைகளை, தனது 94 வயதிலும்
அவையில் தெளிவாகவும், ஆர்வத்துடனும் கூறினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். நவம்பர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பாராட்டப்பட்டனர்.
நன்றி உரை ஆற்றிய ச. கலியமூர்த்தி அவர்கள் தனது மகள் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,
வழக்கம்போல் இனிப்பு காரம் வழங்கினார். பின்னர், தனது தந்தையாரின்
103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை
பாராட்டி எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன்
அவையோருக்கு வாசித்தார்.
பின்னர் செயலாளர் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு
செய்தார்.
