15.10.2017 – 309- வது மாதாந்திரக் கூட்டம்

Photo with News - October 2017-4Photo with News - October 2017-1Photo with News - October 2017-2Photo with News - October 2017-3

15.10.2017 – 309- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.10.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 309-ஆவது கூட்டம் 15.10.2017 அன்று
புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் முனைவர்
நல்லூர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “வள்ளலாரின்
சமுதாய சிந்தனைகள்” என்னும் தலைப்பில் சிறந்ததொரு உரையாற்றினார்.
வள்ளலாரின் பல்வேறு பரிணாமங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற
அறிஞர்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அவையோரை
தன்வயப்படுத்தினார். அன்புக்கும் கருணைக்கும் சாட்சியாக வாழ்ந்தவர்
வள்ளலார் என்று புகழாரம் சூட்டினார்.
தலைவர் புலவர் த. இராமலிங்கம் பேசுகையில் வள்ளலார் குறித்த பல்வேறு
தகவல்களை எடுத்துரைத்தார். அவரது கொள்கைகளான பசியாற்றுதல்,
மரணமில்லா பெருவாழ்வு போன்றவற்றை விரிவான
தெளிவுபடுத்தினார். பசித்திரு. தனித்திரு, விழித்திரு இவற்றிற்கு தக்க விளக்கம்
முறையில்

அளித்தார்.
முன்னதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி
நிஷாந்தினி வள்ளலார் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். செயலாளர் துரை.
சுந்தரராசன் பொன்னாடை அணிவிக்க துணைத் தலைவர் அமுதா
பாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் பு.பெ. இராமசாமி ஆகியோர் நூல்களை
வழங்கினர்.
அக்டோபர் மாதம் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினர்கள்
பாராட்டப்பட்டனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி வினா-விடை நடத்தி பரிசு வழங்கினார்.
செயலாளர் நன்றி கூறும் போது கல்லூரிக்கு புதிததாக நியமிக்கப்பட்ட
முதல்வர் டாக்டர் கே. தங்கவேலு அவர்களை தலைவருடன் நேரில் சந்தித்தது
குறித்தும், சங்கத்தின் கூட்டம் குறித்தும் விவாதித்ததை குறிப்பிட்டபோது, தமிழ்
வளர்ச்சிக்கும், நமது சங்க வளர்ச்சிக்கான அத்துணை உதவிகளை செய்ய உறுதி
அளித்ததை நன்றியுடன் குறிப்பிட்டார்.
பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.