1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.
2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.
3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.
2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.
3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் 19.04.2015 அன்று
நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர் திரு. கவியழகன் அவர்கள், தமிழ் இலக்கியத்திற்கு
டாக்டர் மு.வ. அவர்கள் ஆற்றிய பங்கு என்னம் தலைப்பில்
அரியதொரு உரையாற்றினார். 32 ஆண்டுகள் ஆசிரியராகப்
பணியாற்றி வரும் இவர் மு.வ. அவர்களைப் பற்றி பல்வேறு
தகவல்களை எடுத்துச் சொல்லி அவருடைய இலக்கியங்கள்
புதினங்கள் கடிதங்கள் ஆகியவற்றை முழுவதுமாக ஆய்வு
செய்து ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல தெளிவாக
உரையாற்றினார். மு.வ. அவர்கள் எழுதும் போது அவரை எந்த
தமிழறிஞர்களும் ஆதரிக்கவில்லை என்று கூறியது
அவையோரை வியக்க வைத்தது. பின்னர் அவர் எழுதிய சில
நூல்களைப் பற்றி எடுத்துச் சொல்லி அந்த நூல்களின்
சிறப்புக்களை தெளிவாக விளக்கினார். அவையோரும் மிகவும்
ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். மு.வ. என்ற இரு எழுத்துக்கள்
முனைவர் மு.வ. அவர்களைக் குறிப்பது மட்டுமல்ல,
முன்னேற்றத்தின் வழிகாட்டி என்று கூறி தன் உரையை
நிறைவு செய்தார். முன்னதாக சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கம் மு.வ. அவர்களோடு தனக்குள்ள தொடர்பு
குறித்தும் அவர் எழுதிய நூல்கள் குறித்தும் தெளிவாக எடுத்து
கூறினார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. டி.ஆர். இராசு
அவர்கள் தமிழ்ச்சங்க அறக்கட்டளைக்கு ரூபாய் 30
ஆயிரத்துக்கான காசோலையை தலைவரிடம் வழங்கி தான்
வாக்களித்தவாறு ஒரு லட்சத்தை நிறைவு செய்தார்.
முன்னதாக செயலார் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்ற
காயத்ரி ரங்கராஜன் நன்றி கூறினார்.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க செயலாளர் துரை, சுந்தரராஜலு
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உலக
திருக்குறள் வாழ்வியல் மையத்தின் விதிமுறைப்படி 2015 – 2016
ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தும்
நிகழ்ச்சியை துரை. சுந்தரராஜலு அவர்கள் நடத்தி வைத்தார்.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு
முறையே திருவாளர்கள் சந்திரசேகரன், இராம. முருகேசு, கவிஞர்
எழிலன் ஆகியோர்களை அவரவர் பொறுப்புகளில் பதவிப்
பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக திருக்குறள் பிரேமாவதி
அவர்கள் மடிஇன்மை அதிகாரம் குறித்து உரையாற்றினார். புதிதாக
பதவியேற்ற நிர்வாகிகளைப் பாராட்டி திருவாளர்கள் அரங்கநாதன்,
கவிமாமணி குமரிச்செழியன் ஆகியோர் உரையாற்றினார். நண்பகல்
உணவிற்குப் பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தின் கூட்டத்தில்