1. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா

1. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 17.05.2015 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு
தலைமையேற்று பேசிய தலைவர் புலவர் த. இராலிங்கம் அவர்கள், சிறப்பு
விருந்தினரான அந்தமான் கல்வித் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி
ஓய்வுபெற்ற டாக்டர். எம். அய்யாராஜு அவர்களைப் பற்றி சிறந்ததொரு அறிமுக
உரையாற்றினார். தொடர்ந்து பேசிய டாக்டர் எம். அய்யாராஜு அவர்கள் “அந்தமான்
தீவுகள் குறித்தும் அதனை சுற்றியுள்ள பல்வேறு தீவுகளை பற்றியும் தெளிவாகவும்,
ஆதாரபூர்வமான செய்திகளை விளக்கப் படங்களுடன் சிறந்ததொரு
உரையாற்றினார். இதுவரை கேள்விபடாத செய்திகள் அந்தமான் – நிக்கோபார்
தீவுகளுக்கு அப்பெயர்கள் எவ்வாறு வந்தன என்று விளக்கினார். முதலில்
டச்சுக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்களாலும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு
வந்ததையும் குறிப்பிட்டு காட்டினார். போர்ட் பிளேர் பகுதி தவிர மற்ற பகுதிகள்
இன்னும் கற்கால வாழ்க்கைதான் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறி
அங்குள்ள கலாச்சாரம், அங்குள்ள அரசியல் போன்றவைகளை தெளிவாக விளக்கி
தனது 35 ஆண்டுகள் பணியாற்றிய அரசு பணியின் அனுபவங்களை பகிர்ந்து
கொண்டார். முன்னதாக செயலாளர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அந்தமான் குறித்து தான் ஆய்வு செய்து எழுதிய இரண்டு நூல்களை
தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக டாக்டர் எம். அய்யாராஜு அவர்கள்
வழங்கினார். துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி நவில கூட்டம்
நிறைவடைந்தது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.06.2015 அன்று நடைபெற்ற
“பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்த நாள் விழாவும்” “அகவை
முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கும் விழாவும்”
வெகு சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
அவர்கள் தலைமை வகித்தார். கலைமாமணி பொன்னடியான் அவர்கள்
பாவேந்தர் பாரதிதாசனுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பல்வேறு
நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறினார். அவருடைய அருமை பெருமைகளை
எடுத்துக் கூறி அவருடைய அணுக்கத் தொண்டனாக இன்றும் தொடர்ந்து
பணியாற்றி வருவதாகவும் கூறினார். தனது முல்லைச்சரம் இதழ் மூலம்
பாவேந்தரின் புகழினைப் பரப்பி வருவதாகவும் உணர்ச்சி பொங்க
உரையாற்றினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களான திருவாளர்கள் அரிமா
அரங்கநாதன் அவர்களுக்கு “திருக்குறள் செம்மல்” விருதும், “முகம்”
மாமணி அவர்களுக்கு “இதழியல் வித்தகர்” விருதும், முத்தமிழ் மணி மு. மணி
அவர்களுக்கு “கவிச்செல்வர்” விருதும் வழங்கப்பட்டன. பொற்கிழியாக தலா
ரூபாய் மூவாயிரம் வழங்கப்பட்டது. விருது வழங்கிச் சிறப்புரையாற்றிய
முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் விருது பெற்றவர்களின்
சிறப்பியல்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பாவேந்தர் குறித்த பல
தகவல்களைக் கூறிய அவர் பாவேந்தரின் படைப்புகள் குறித்து விரிவாக ஒரு
ஆய்வாளரைப் போல விரிவுரையாற்றினார். பாரதிதாசன் குறித்த கவிதைகளை
கவிமாமணி முனைவர் குமரிச் செழியன் அவர்களும், கவிஞர் து.சீ.
இராமலிங்கம் அவர்களும் இனியாக படைத்தனர். முன்னதாக சங்கத்தின்
செயலாளர் துரை. சுந்தர்ராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர்
ரங்கராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.


