Author Archives: adminn

18-10-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

18-10-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.10.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 342-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 18.10.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச் சங்கத்தின்
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் இருந்து வழக்கறிஞர்
கவிஞர் கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு “சங்கத்தமிழ்” என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சங்க
இலக்கியம் பல நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளில்
இருந்ததாகவும், அதில் பல தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாகவும், பல
ஓலைச்சுவடிகள் மக்களின் அறியாமை காரணமாக நெருப்பில் எரிக்கப்பட்டு
விட்டதாகவும் கூறி, மீதமுள்ள கையில் கிடைத்த ஓலைச் சுவடிகளில்
இருந்துதான் தற்போது கிடைத்துள்ள சங்க இலக்கியங்கள் வழக்கத்தில்
உள்ளன. அவர் பேசுகையில் தமிழ் இலக்கியங்களில் உள்ள அனைத்து
பாடல்களையும் பட்டியலிட்டு ஒவ்வொரு தலைப்புக்கும் சிறந்த உரை
விளக்கத்தை தொகுத்துக் கூறினார். தமிர்களின் சங்க கால வாழ்க்கை,
அவர்களின் தொழில் மற்றும் பல்வகை நிலங்கள், பூக்கள் போன்றவைகளை
எடுத்துக் கூறினார். கலைஞர் தனது சங்கத்தமிழில் 99 வகையான பூக்களின்
பெயரோடு தொடங்கி இருப்பார் என்று கூறி அவையோரை தன்
வயப்படுத்தினார்.
ஒளவையார் தொடங்கி பல சங்ககாலப் புலவர்களைப் பட்டியலிட்டு,
அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை உள்ளிட்ட பல இலக்கியங்களில்
உள்ள நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு
நன்றி கூறினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் பேசும்போது, சிறப்பு விருந்தினரை
அறிமுகப்படுத்தினார். சங்க இலக்கியத்தின் மேன்மையை எடுத்துக்கூறி 99
பூக்களின் பெயர்களையும் கூறினார்.
தலைவர் பேசும்போது சிறப்பு விருந்தினரை வெகுவாகப் புகழ்ந்து
பேசினார். சங்க இலக்கியங்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கூறி
உறுப்பினர்களை நேரில் காணும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அரிம துரை. சுந்தரராசன் அக்டோபர்
மாதம் பிறந்தநாள் காணும் உறுப்பினர்களை வாழ்த்திப் பாராட்டினார்.
இதுவரை சங்கத்தில் பல தமிழறிஞர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட
சில பாடல்களை எடுத்து பேசினார்கள் என்றும், ஆனால் இப்போது கவிஞர்
கனிமொழி அவர்கள் அனைத்து பாடல்களையும் குறிப்பிட்டு விளக்கி
கூறியது பெருமைப்பட கூடியதாகும். தலைவருடைய 89-ஆம்
பிறந்தநாளுக்கு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அடுத்த கூட்டம் குறித்து செயலாளர் அறிவித்து அதுவும் இணையவழி
மூலம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆஸ்த்திரேலியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்
ஆர்வலர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.

20-09-2020-அன்று நடைபெற்ற 340-வது கூட்டம்

20-09-2020-அன்று நடைபெற்ற 340-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.09.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 340-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 20.09.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச் சங்கத்தின்
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிமாமணி
முனைவர் ம. வேலூர் நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு “இலக்கிய
இன்பம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களை
தொகுத்துக் கூறினார். கனியன் பூங்குன்றனார், ஒளவை, பாரதியார்,
பாரதிதாசன், க.ப. அறவாணன், கவிஞர் சுரதா போன்ற பல கவிஞர்கள்
கூறிய செய்திகளை மிக அருமையாக தொகுத்து கூறினார். இதற்குச்
சான்றாக வலராற்று செய்திகளை நந்திக் கலம்பகம், சீவக சிந்தாமணி
போன்ற பாடல்களை எடுத்துக் கூறி அவையோரை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினார்.
முன்னதாக வரவேற்பு ஆற்றிய செயலாளர் செப்டம்பர் மாதம் பிறந்தநாள்
கண்ட உறுப்பினர்களை வாழ்த்திப் பாராட்டினார். மேலும் இது அண்ணா
பிறந்த மாதம் என்பதால், அண்ணாவைப் பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்து
கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன்
அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அண்ணாவைப் பற்றி பல்வேறு
செய்திகளை கூறினார்.
விருந்தினரும் தந்தை பெரியார் பிறந்த மாதம் என்பதால் பெரியாரை
பற்றி கவிதை வாசித்தார்.தலைவர் பேசுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு உறுப்பினர்களை
சந்திக்கும் வாய்பை ஏற்படுத்தித் தந்த முனைவர் த.கு. திவாரகரன்
அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிறப்பு விருந்தினரின் பேச்சு அருமையாக
இருந்ததாக பாராட்டினார்.
கவிஞர் கலாவதி குலசேகரன், திரு.ஜோதிமணி, து.சீ. இராமலிங்கம், மு.
நாமதேவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இத்தகைய அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணாநகர்த்
தமிழ்சங்கத்திற்கு சிறப்பு விருந்தினர் நன்றி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்
ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.

23-08-2020-அன்று நடைபெற்ற 339-வது கூட்டம்

23-08-2020-அன்று நடைபெற்ற 339-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.08.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 339-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 23.08.2020-ஆம் நாளன்று தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட சொல்வளச் செம்மல் திரு. கந்திலி
கரிகாலன் அவர்கள் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
பாரதிதாசன் எந்த அளவிற்கு மக்களினடையே தமிழ் உணர்வை
போற்றினார் என்பதையும், மகாகவி பாரதியார் தமிழின் சிறப்பையும்,
மொழியின் வளத்தையும் தம் பாடல்களின் மூலம் உணர்த்தியவர்
என்பதையும் கூறினார். தமிழ் மொழி அதன் முக்கியத்துவத்தை இழக்கும்
நிலைக்கு வந்தபோது தமிழகமே வெகுண்டு எழுந்து பலர் தம் இன்னுயிரை
மாய்த்து கொண்டதை சுட்டிக் காட்டினார். நந்திக் கலம்பகம், தேம்பாவனி
போன்ற இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள் காட்டி
அவையோரைத் தன்வயப்படுத்தினார்.
தொடக்க உரையாற்றிய அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள்,
தமிழின் மேன்மையைக் கூறி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
தலைவர் பேசுகையில் கடந்த ஆறுமாதங்களுக்குப் பிறகு
உறுப்பினர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதை
கூட்டிக்காட்டியும் சிறப்பு விருந்தினர் சிறப்பாகப் பேசியதையும் பாராட்டி
பேசினார்.
தமிழை நம் போன்ற அமைப்புகள்தான் மக்களுக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அண்மையில்
நம்மைவிட்டுப் பிரிந்த மாண்புமிகு பேராசிரியர், அன்புப்பழம் நீ, திருமதி
ஜெயஸ்ரீ ராஜசேகரன், மு.பி. பாலசுப்பிரமணியம், தமிழறிஞர் கோ.
சாரங்கபாணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் பிறந்த நாள் காணும் உறுப்பினர்களுக்குப் பிறந்த நாள்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த இணையவழிக் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து,
கூட்டத்தை சிறப்பாக அமைத்து கொடுத்த முனைவர் த.கு. திவாகரன்
அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
துபாய், ஆஸ்த்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும்
தமிழர்கள் தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட குடியாத்தம் குமணன், சொ. பத்மநாபன்,
புலவர் சோ. கருப்பசாமி, து.சீ. இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள். புதிய உறுப்பினர் ஜோதிமணி தன்னை அறிமுகப்படுத்தி,
வாழ்த்து தெரிவித்தார்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

23-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

23-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.02.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
திருக்குறள் இல. வெங்கடேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் வழங்கினார், உடன் செயலாளர் துரை, சுந்தரராஜுலு

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
திருக்குறள் இல. வெங்கடேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
உடன் தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை. சுந்தரராஜுலு

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.02.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 338-ஆவது கூட்டம், 23.02.2020
அன்று தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருக்குறள் இல. வெங்கடேசன்
“திருக்குறளும் – கம்பனும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு அவர்கள், பிப்ரவரி திங்கள்
20-ஆம் நாள் “உலகத் தாய் மொழிநாள்” கொண்டாடப்படுவது வழக்கம்
என்று கூறி அது குறித்து தலைவர் உரையாற்ற வேண்டுமென்று
வேண்டுகோள் வைத்தார்.
தலைவர் பேசுகையில் தாய்மொழி நாள் யுனெஸ்கோ அறிவித்த பிப்ரவரி
21-ஆம் நாள் முதன்முதலாக வங்கதேசம் கொண்டாடியது
எனக்குறிப்பிட்டு, உலகில் 7700 மொழிகள் இருப்பதாகவும், அதில் 13
மொழிகள்தான் பேச்சு எழுத்து வடிவில் இருப்பதாக கூறினார். அதில்
தமிழ்மொழி தான் முதன்மையாகத் திகழ்வதாக கூறினார். இலக்கிய,
இலக்கணம் கொண்ட தமிழ்மொழி சிறந்த மொழி எனக் கூறினார். பேரறிஞர்
அண்ணா முதல்வர் ஆனபோது, மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைக் குறிப்பிட்டார். செம்மொழி
ஆவதற்கான 13 இலக்கண தகுதிகளைப் பெற்றிருந்தும் தமிழுக்கு
செம்மொழி அந்தஸ்து கிடைக்காதது வருத்தமளிப்பதாக கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்
வைத்தல், தமிழில் கையெழுத்திடுதல் அவசியத்தை வலியுறுத்தினார்.
பாரதிதாசன், கம்பன் போன்றவர்கள் தமிழை உயர்த்திப் பேசியதையும்
குறிப்பிட்டார்.
திரு. இல. வெங்கடேசன் பேசுகையில் 12 மொழிகளைக் கற்ற பாரதியார்
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். திருக்குறள் எண் 7 என்றம் கம்பராமாயணம் 7 அவதாரம்
என்று ஒப்பிட்டு பேசினார். இரண்டுக்கும் பொது எண். 7 ஆல்பர்ட் ஸ்வைசர்
தமிழ் சிறந்த மொழி என்று சொன்னதை எடுத்துக் காட்டினார்.
நன்றியறிதலுக்கு கும்பகர்ணனையும், திருவள்ளுவர் சொன்ன
நன்றியறிதல் அதிகாரத்தையும் ஒப்பிட்டு பேசினார்.
அவர் உரையாற்றிய நேரம் முழுவதும் கம்பனையும், திருவள்ளுவரையும்
ஒப்பிட்டு பல செய்திகளைக் கூறி அவையோரை தன்வயப்படுத்தினார்.
கம்பன் 800 குறளுக்குமேல் இராமாயணத்தில் பயன்படுத்தி உள்ளார்
என்பது கூடுதல் தகவல்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய செயலாளர், அனைவரையும்
வரவேற்று பிப்ரவரி மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கூட்டத்தில் வருகை தந்த திரு. ராஜேந்திரன் சோர்டியா, தமிழ்மொழி
குறித்து திரு.வி.க. பேசியதை எடுத்துக் கூறினார். பார்வையாளராக
வந்திருந்த திருமதி பத்மாவதியின் குழந்தை 6 வயது காயத்ரி குறள்க் கூறி
அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.
செயலாளர் அனவைருக்கும் நன்றி கூறி, குறிப்பாக இனிப்பு வழங்கிய
ச. கலியமூர்த்திக்கு நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

08-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

08-02-2020-அன்று நடைபெற்ற 338-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.02.2020 அன்று நடைபெற்ற
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை. சுந்தரராசன், பொருளாளர் ஞானப்பிரகாசம்,
துணைத் தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள்
மற்றும் போட்டியின் நடுவர்களாக புலவர் தங்க. ஆறுமுகம், பேராசிரியர் முனைவர் ஜே. சுந்தர்,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேச்சு போட்டியில் பங்குபெற்ற மாணவ / மாணவிகள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
08.02.2020 அன்று நடைபெற்ற
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 08.02.2020,
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்லூரி
மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.
தலைவர் புலவர் த. இராமலிங்கம், செயலாளர் துரை.
சுந்தரராசன், பொருளாளர் ஞானப்பிரகாசம், துணைத்
தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும்
போட்டியின் நடுவர்களாக புலவர் தங்க. ஆறுமுகம்,
பேராசிரியர் முனைவர் ஜே. சுந்தர், அரிமா முனைவர் த.கு.
திவாகரன் ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்கள்
மற்றும் பலரும் பங்கேற்றனர்.

19-01-2020-அன்று நடைபெற்ற 337-வது கூட்டம்

19-01-2020-அன்று நடைபெற்ற 337-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.01.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
புலவர் தமிழமுதன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் வழங்கினார், உடன் செயலாளர் துரை. சுந்தரராஜுலு

அரிமா துரை. சுந்தரராஜலு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி,
ஜனவரி மாதம் பிறந் உறுப்பினர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் புலவர் தமிழமுதன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம், செயலாளர் துரை. சுந்தரராஜுலு

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.01.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 337-ஆவது கூட்டம், 19.01.2020
அன்று சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முத்தமிழ் ஆய்வுமன்றத் தலைவர்
புலவர் தமிழமுதன் அவர்கள் கலந்து கொண்டு “தமிழர் திருநாள் –
திருவள்ளுவர் திருநாள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் முற்காலத்தில் பொங்கல் இயற்கையை தொழுது
வாசலில் பொங்கலிட்டோம். ஆனால் இன்று அந்த வழக்கம் மறைந்து
போனது.
கனடா நாட்டு அதிபர் அந் நாட்டு தமிழர்களிடையே பொங்கல்
கொண்டாடினார். அவர் முடிக்கும்போது தமிழில் பொங்கல் வாழ்த்து
சொல்லி முடித்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.
தற்போது விளை நிலங்களை அழிக்கும் நோக்கில் ஹைட்ரோ கார்பன்
திட்டம் கொண்டு வருகிறது. இதனால் உழவுத் தொழிலே அழியும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர் பேசுகையில் கண்ணதாசன்,
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்.
1935-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள பல மூத்த அறிஞர் பெருமக்கள்
ஒன்றுகூடி வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் வள்ளுவர் பிறந்த நாள்
என முடிவு செய்தனர். பின்னர் 1971-ஆம் ஆண்டில் தை முதல் நாள்
திருவள்ளுவர் திருநாள் கொண்டாடலாம் என முடிவெடுத்தது. ஆனால்
1981-ஆம் ஆண்டில் MGR அரசு சித்திரை மாதம் என்று மாற்றப்பட்டது. சாமி
தியாகராஜன் என்னும் புலவர் அனுஷ நட்சத்திரம் ஏன் மாற்றப்பட்டது எனக்
கேள்வி எழுப்பினார்.
திருவள்ளுவருக்கு சமயச்சாயம் பூசப்படுகிறது என்று கூறிய அவர் அது

தடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவர்
வள்ளுவர் என்றும் குறிப்பிட்டார். தமிழனுக்குத் தமிழனே எதிரியாகிறான்
என்று வருத்தத்தோடு கூறினார். வள்ளுவர் கூறிய ஒழுக்கம் மிக மிக
முக்கியம் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
தலைமையேற்ற ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் திருக்குறளுக்கும்,
திருவள்ளுவருக்கும் பல பெயர்கள் உண்டு என்று கூறி, தலைவரை
அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறி, ஜனவரி மாதம் பிறந்த உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
முனைவர் திரு. சுந்தர் அவர்கள் “உலகத் தமிழ்க்களஞ்சியம்” நூல்
குறித்து உறுப்பினர்களிடையே எடுத்துரைத்து அனைவருடைய
இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் என்று கூறி, அனைவரும் வாங்கிப்
பயனடைய வேண்டினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

15-12-2019-அன்று நடைபெற்ற 336-வது கூட்டம்

15-12-2019-அன்று நடைபெற்ற 336-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.12.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
புலவர் த. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
உடன் தலைவர் த. இராமலிங்கம்

சிறப்பு விருந்தினர் டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
உடன் தலைவர் லவர் த. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம்

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
14.12.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 336-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 15.12.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள்
“முதுமையை முறியடிப்போம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில் கடந்த 40 ஆண்டுகளாக அண்ணாநகரில் வசித்து
வரும் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் முதியோர் நல
மருத்துவராக சிறப்புப் பயிற்சி பெற்று, அவர்களுக்காவே தனது வாழ்நாளை
அர்பணித்து வருகிறார். வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம் என்னும்
குறிக்கோளுடன் இவர் மருத்துவப் பணி ஆற்றி வருகிறார். ராஜீவ் காந்தி
அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் பிரிவைத் தொடங்க காரணமாக
இருந்தார். இவரது மருத்துவ சேவைக்காக மத்திய அரசு இவருக்கு
“பத்மஸ்ரீ” விருது வழங்கிப் பாராட்டியது.
சிறப்பு விருந்தினர் பேசுகையில் இந்த மன்றத்தில் பேச வாய்ப்பு
கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தார். இளமைப் பருவம், நடுநிலைப்
பருவம், முதுமைப்பருவம் என வாழ்க்கையை பிரிக்கலாம். முதுமையில்
இளமையுடன் இருப்போர் 35% சதவீதம் பேர் தான். முதுமையில் நோய்
வரக்காரணம், மரபணு முதல் காரணம். இவற்றை சுற்றுப்புறசூழல், நல்ல
பழக்கவழங்களின் மூலம் சரிப்படுத்தலாம். முதியோர் இல்லங்களே
தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளதாக கூறினார்.
பார்க்கின்சன் நோய், மறதி நோய், அடிக்கடி கீழே விழுவது
முக்கியமானது. சிறுநீரகத் தொற்று, பார்க்கின்சன் நடுக்கம் வருவது
இயற்கை. அலசீமர் என்னும் மறதிநோயை கண்டுபிடித்தவர் இந்த நோயின்
தாக்கத்தால் இறந்தார். மறதிநோய் வந்தால் இயற்கைக்கு மாறான

செயல்களைச் செய்வர். இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
நடைப்பயிற்சி பேரூதவி செய்யும். தேங்காய் எண்ணை, உலர் திராட்சை,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கிரீன் டீ போன்றவைகள் மறதி நோயை தடுக்க
உதவும்.
கீழே விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். விழாதே கீழே, தழுவாதே
மரணத்தை என்பதை வலியுறுத்தி உள்ளேன். சிறுநீர்க் கசிவு, புராஸ்டேட்
வீக்கட்ம வராமல் தடுக்க வேண்டும்.
முழு உடல் பரிசோதனை செய்து வருமுன் காக்க வேண்டும். புரோட்டீன்
உணவு அதிகமாக உண்ண வேண்டும். பருப்பு வகைகள், சிறுதானியங்கள்
செரிக்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அரிசி, உப்பு,
சர்க்கரை தவிர்க்க வேண்டும். பசித்தால் மட்டும் உண்ண வேண்டும்.
காலை நிறைந்த உணவு, மதியம் நடுத்தர உணவு, இரவு குறைந்த
உணவு என்ற அளவில் மென்று நிதானமாக உண்ண வேண்டும். உணவு
உண்ணடவுடன் படுக்கக்கூடாது. வயதானோர் நிமோனியா தடுப்பூசி
அவசியம் போட வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது மிகவும்
உதவிக்கரமானது. உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமாக பதில்
அளித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். டிசம்பர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பாராட்டப்பட்டனர்.
பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
துணைத்தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவடைந்தது.

திருமதி. மணிமேகலை கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
உடன் புலவர் பேரா. இரா. நாராயணன், புலவர் த. இராமலிங்கம், துரை, சுந்தர்ராஜன்

103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை பாராட்டி
எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன் அவையோருக்கு வாசித்த காட்சி.

17-11-2019-அன்று நடைபெற்ற 335-வது கூட்டம்

17-11-2019-அன்று நடைபெற்ற 335-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்களுக்கு நினைவு பரிசினை
புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தர்ராஜன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி

திருமதி. மணிமேகலை கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
உடன் புலவர் பேரா. இரா. நாராயணன், புலவர் த. இராமலிங்கம், துரை, சுந்தர்ராஜன்

103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை பாராட்டி
எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன் அவையோருக்கு வாசித்த காட்சி.

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.11.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 335-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 17.11.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக புலவர் பேரா. இரா. நாராயணன் அவர்கள்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “வாழ்வும் வாக்கும்”
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில் திரு. கி.ஆ.பெ. அவர்கள் 94 வயதான அவர்
சாமான்யராகப் பிறந்து சாதனையாளராக விளங்கினார் என்றும் பள்ளிக்குச்
செல்லாமலேயே பெரும் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்ப்பணி
ஆற்றி வந்தார் எனக் குறிப்பிட்டார். அவர்க ஒரு சுயமரியாதை சுடரொளி
என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரை பெரியார் ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு
அழைத்து வந்தார் என்றாலும், ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிட கழகமாக
மாற்றப்பட்டதால் அதிலிருந்து வெளியேறினார் என கூறினார்.
அண்ணாவை அழைத்து சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கில
சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்க்கச் செய்தார்.
முனைவர் நாராயணன் அவர்கள் பேசுகையில் கி.ஆ.பெ. அவர்கள் சித்த
மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு, அரசின் பரிந்துரையின் மேல் சித்த
மருத்துவ வாரியத் தலைவராக விளங்கினார்.
அவர் 1930-ஆம் ஆண்டு இலங்கை சென்று உரையாற்றினார் என்றும்,
இரண்டாவது உலகத் தமிழ்மாநாடு நடத்த பெரும் உதவியாக இருந்தார்
எனவும் குறிப்பிட்டார். தீண்டாமையை எதிர்த்தார். முத்தமிழ்க் காவலர்,
கலைமாமணி, மதுரைப் பல்கலைக்கழக டாக்டர் பட்டம் போன்றவைகள்
இவரது சிறப்பு.

கலைஞர் அவர்கள் இவரது பெயரால் திருச்சி மாவட்ட
மருத்துவமனைக்கு கி.ஆ.பெ. மருத்துவமனை என்று பெயர் சூட்டினார்.
12 குறட்பாட்களுக்கு இவர் நுட்பமான மாறுபட்ட உரை எழுதியுள்ளார்.
சித்த மருத்துத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதி 100 மருத்துவ
முறைகளுக்கு பரிகாரம் கொடுத்துள்ளார்.
கி.ஆ.பெ. அவர்களின் பெயர்த்தி வெற்றிச்செல்வி பேசுகையில் வ.சுப.
மாணிக்கம், எம்.ஜி.ஆர் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு
வைத்திருந்தார். தஞ்சையில் உலகத் தமிழ் மாநாட்டில் பேசுகையில் தமிழ்ப்
பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தபோது உடனே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எழுந்து அவரது
கோரிக்கையை ஏற்று இதே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைகழகம்
அமைக்கப்படும் என்று அறிவித்தார் என்றும் குறிப்பிட்டார். அவரது
குறிக்கோள் உணவு, உடை, நேரம் தவறாமை இவைகளை இறுதி வரை
கடைபிடித்தார்.
தமிழ்க்கொடியை உருவாக்கி அதில் வில், மீன், அம்பு, இலச்சினை
பொறித்தார். கோபத்தை தவிர்த்தல், பிறரிடம் உதவியை எதிர்பாராதே,
உழைத்து சம்பாதிக்க வேண்டும், போதுமென்ற மனம் இவைதான் அவர்
கடைபிடித்த கொள்கைகள். எழுபதாயிரம் தமிழ்த் திருமணத்தை நடத்தி
வைத்துள்ளார் என்று கூறினார்.
சங்க உறுப்பினர்கள் இரா. மோகனசுந்தரம், திருக்குறள் பாஸ்கரன்,
து.சீ. இராமலிங்கம் ஆகியோர் தங்களுக்கும் கி.ஆ.பெ. வுக்கும் உள்ள
தொடர்புகளை நினைவுபடுத்தினர்.
திரு. லட்சுமிகாந்தன் பாரதி, இ.ஆ.பெ. அவர்கள், அவரது தாத்த நாவலர்
சோமசுந்தர பாரதியின் நெருங்கிய நண்பர் என்றும் அவரது தமிழ்ப்பற்று,
சித்த மருத்துத்தில் ஈடுபாடு போன்றவைகளை, தனது 94 வயதிலும்

அவையில் தெளிவாகவும், ஆர்வத்துடனும் கூறினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். நவம்பர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பாராட்டப்பட்டனர்.
நன்றி உரை ஆற்றிய ச. கலியமூர்த்தி அவர்கள் தனது மகள் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,
வழக்கம்போல் இனிப்பு காரம் வழங்கினார். பின்னர், தனது தந்தையாரின்
103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை
பாராட்டி எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன்
அவையோருக்கு வாசித்தார்.
பின்னர் செயலாளர் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு
செய்தார்.

20-10-2019-அன்று நடைபெற்ற 334-வது கூட்டம்

20-10-2019-அன்று நடைபெற்ற 334-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.10.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 334-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 22.10.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா முனைவர் த.கு. திவாகரன்
அவர்கள் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் தலைப்பில் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றினை தெளிவாக எடுத்துரைத்தார். காங்கிரஸ்
பேரியக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, தமிழரசு கழகம் தோன்றிய வரலாறு
போன்ற செய்திகளைக் கூறினார். அவர் கலந்து கொண்ட பல்வேறு
போராட்டங்கள், குறிப்பாக ஆந்திராவுக்கு செல்லவிருந்த திருத்தணியை
தமிழ்நாட்டுடன் இணைத்தது. தேவிகுளம் பீர்மேடு
பகுதிகளை
கேரளாவுக்குச் செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு
போராட்டங்களில் கலந்து கொண்டதை பெருமயுடன் குறிப்பிட்டார்.
தலைவர் பேசுகையில் முனைவர் திவாகரன் குறித்து பெருமைபட
அறிமுகம் செய்தார். தமிழறிஞர் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின்
கொள்ளுப் பேரன் என்றும், சிறந்த தமிழறிஞர் எனவும் குறிப்பிட்டு,
திராவிட இயக்க முன்னோடிகள் என்ற தலைப்பில், டாக்டர் நடேசன்,
டி.எம். நாயர், பிட்டி தியாகராயர் போன்ற பெரும் தலைவர்களின் வாழ்க்கை
வரலாற்றினை தொடர் சொற்பொழிவாக நடத்தி வருவதையும் குறிப்பிட்டு
அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். அக்டோபர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள்
பாராட்டப்பட்டனர். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை
நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். பொருளார் ஞானப்பிரகாசம் நன்றி கூற
கூட்டம் நிறைவடைந்தது.

22-08-2019-அன்று நடைபெற்ற 332-வது கூட்டம்

22-08-2019-அன்று நடைபெற்ற 332-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.08.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 332-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 22.08.2019
அன்று நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு எழுதிய
“நினைவில் நின்றவை” நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக
நடைபெற்றது. இந்நூலை மாண்புமிகு நீதியரசரும், டவர்ஸ் கிளப்பின்
தலைவருமாகிய திருமிகு. சு. இராஜேஸ்வரன் அவர்கள் வெளியிட்டார்.
திண்டிவனம் தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவரும், சிறந்த
கல்வியாளருமான செவாலியர் டாக்டர் இராஜாபாதர் அவர்கள்
முதல்படியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து
முனைவர் மறைமலை இலக்குவனார், கலைமாமணி ஏர்வாடி
இராதாகிருஷ்ணன், அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா வி.ஜி.
நரேந்திரபாபு, தமிழ்ச்சங்கத்தின் புரவலர் அரிமா முனைவர் த.கு. திவாகரன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பாரதி கலைக்கழகத்தலைவர் கவிமாமணி குமரிச்செழியன்
அவர்கள் நூலைப்பற்றி சிறந்த ஆய்வுரை வழங்கினார். நூலாசிரியர் அரிமா
முனைவர் துரை. சுந்தரராஜுலு ஏற்புரை வழங்கினார்.
தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. ஞானப்பிரகாசம் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர்
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். கவிஞர் து.சீ.
இராமலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இரவு உணவிற்குப் பின் விழா நிறைவடைந்தது.