அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 04.08.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 331-ஆவது கூட்டம், தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 04.08.2019 அன்று நடைபெற்றது. சங்க உறுப்பினர் திரு. ந. ஜெயபால் அவர்கள் எழுதிய “இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள்” என்னும் சிறுகதை தொகுப்பு நூல், சாகித்திய அகடமி விருது பெற்ற திரு. வண்ணதாசன் அவர்கள் வெளியிட,இ திரு. ஜோதிபாண்டியன் பெற்றுக் கொண்டார். தலைவர் பேசுகையில் நூல் சிறப்பாக அமைந்து உள்ளது என்று பாராட்டினார். திருவாளர்கள் வண்ணதாசன், சிதம்பரம் குடியரசு, அருண், திருமதி இரா. ஆனந்தி, ஹேமா தனசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். முன்னதாக செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் ந. ஜெயபால் ஏற்புரை ஆற்றினார். பொருளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற நண்பகல் உணவுக்குப்பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.07.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 330-ஆவது கூட்டம், தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 21.07.2019 அன்று நடைபெற்றது. தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், முனைவர் இதயகீதம் இராமனுஜம் அவர்களுக்கும் மற்றும் தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்ற சங்க உறுப்பினர் அரிமா மு. சீனிவாசன் ஆகியோருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கவிதை உறவு ஆசிரியர் கலைமமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் விருதாளர்களைப் பாராட்டிப் பேசினார். முனைவர் அமுதா பாலகிருண்ணன் மற்றும் இதயகீதம் இராமனுஜம் ஆகியோங்ர தமிழ்ப்பணி குறித்தும் சிறப்பாக உரையாற்றினார். தலைவர் பேசுகையில் நமது சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் மற்றும் அரிமா மு. சீனிவாசன் அவர்களையும், முனைவர் இதயகீதம் இராமனுஜம் குறித்தும் வெகுபாகப் பாராட்டிப் பேசினார். பின்னர் விருதாளர்கள் ஏற்புரை வழங்கினார்கள். பின்னர் இயற்கைமுறை வைத்திய நிபுணர் S. அபிராமி அவர்கள் பல்வேறு நோய்களுக்கான காரணங்களையும் அவைகளை இயற்கைமுறை வைத்தியத்தில் எவ்வாறு சரிப்படுத்தலாம் என்றும் தெளிவாகக் கூறி, மின்னியல் காட்சி (Power Presentation) மூலம் தெளிவாக எடுத்துக் கூறினார். உறுப்பினர்கள் கேட்ட அனைத்து ஐயங்களுக்கும் தெளிவாக பதில் அளித்தார். அவையோரும் பயன் அடையும் வகையில் பலவேறு இயற்கை வைத்திய முறையை தெளிவாக விளக்கி, அவையோரைத் தன்வயப்படுத்தினார். பாரி நிலைய உரிமையாளர் செ. அமர்ஜோதி அவர்களும் பாராட்டப்பட்டார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் முருககூத்தன் அவர்களும் கலந்து கொண்டு உறுப்பினர்களுடன் கலைந்துரையாடினார. முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்ததராஜுலு, ஜூன் மாதம் பிறந்தநாள் கண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 23.06.2019 அன்று பேரூர் தமிழ் மன்றம் வழங்கிய “கவியரங்கம்” நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 329-ஆவது கூட்டம், தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 23.06.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை, பேரூர் தமிழ் மன்றம் வழங்கிய “கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத் தலைவராக பேரூர் தமிழ் மன்றத்தைச் சார்ந்த செந்தமிழ்ச் சுடர் கவிஞர் அருள்வேல் அவர்கள், மிகச் சிறப்பாக கவியரங்கத்தை நெறிப்படுத்தி வழங்கினார். கவியரங்கத்தில் கவிபாடிய கவிதாயினிகள் நந்தினி, கலைநிலா, ஜெயந்தி, ஞானவடிவு, உமாதேவி, இந்துராணி ஆகியோரும் கவிஞர்கள் அர்ஜூன், பாக்கியராஜ், ஜெய்சிவா, ஜீவானந்தம், நிருபன்குமார் ஆகியோரும் தங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பினையொட்டி சிறப்பாக கவிதைபாடி அவையோரை கவர்ந்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேரா. முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் கவிஞர்களை வெகுவாக பாராட்டினார். தற்காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அடுத்து, தமிழ்மொழியை வளர்ப்பதில் கவிஞர்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளதை சுட்டிக்காட்டினார். கோவையில் இருந்து வந்துள்ள இக் கவிஞர்கள் தனக்கு நெருங்கிய நண்பர்கள் எனக் கூறி மிகவும் சிறப்பானவர்கள் என்று புகழாரம் சூட்டினார். தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் பேசுகையில், பேரூர் தமிழ் மன்றத் தலைவர் தவத்திரு அ. இராமசாமி அடிகளார் அவர்களுக்கு நன்றி கூறினார். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விரும்பி அவர்களுக்கு நன்றி கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளை நமது சங்கம் தொடர்ந்து நடத்தும் எனவும் குறிப்பிட்டார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அரிமா துரை. சுந்ததராஜுலு, அண்மையில் மறைந்த நமது சங்கத் துணைத்தலைவர் இ. தர்மன், நமது சங்கப்புரவலர் திரு. டி.ஆர். இராசு அவர்களின் மகன் திருகுமார், சங்கத்தின்பால் பற்று கொண்ட மருத்துவர் வி.டி. பலராமன், மதுரைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் இரா. மோகன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ஜூன் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
பின்னர் பேரூர் தமிழ் மன்றத் தலைவர் அடிகளார் விருப்பப்படி, அதன் செயலாளர் கவிஞர் இரவி அவர்கள், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர். த. இராமலிங்கம் அவர்களுக்கும், செயலாளர் அவர்களுக்கும் அடிகளார் சார்பில் பொன்னாடையும், நூல்களையும் வழங்கினார். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரங்கத்தில் கலந்து கொண்ட விருந்தளித்த அனைவருக்கும் பொன்னடை, நினைவுப்பரிசு, நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டது. தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் து.சீ. இராமலிங்கம் நன்றி கூறினார். அனைவரும் குழுப்படம் எடுததுக் கொண்டனர். திருமதி பாரததேவி, திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் அளித்த நண்பகல் உணவிற்குப் பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 19.05.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 328-ஆவது கூட்டம் 19.05.2019 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரிமா முனைவர் நா. சந்திரபாபு அவர்கள் கலந்து கொண்டு “பாவேந்தரின் சமுதாயச் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். முதன்முறையாக பாரதியாரை சந்தித்தபோது அவரை ஒரு கவிதைப் பாடுமாறு கேட்டவுடன், உடனடியாக பாடல் எழுதி பாராட்டுப் பெற்றவர். நிரவி என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1919 முதல் 1921 வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டபோது நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். முதன் முதலாக குடும்பக் கட்டுப்பாடு குறித்து பாடலை எழுதினார். தாழ்த்தப்பட்டடோர் நலனுக்காகப் பாடுபட்டார். சமூகத்தில் பெண்கள் கடவுளாக சித்தரித்தார். பிராமணீயத்தை எதிர்த்தார். பொதுவுடமை கொள்கையை ஆதரித்தார். தமிழியக்கம் என்னும் நூலை ஒரே இரவில் எழுதினார். 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி முடிந்து ஓய்வுபெற்றார். 1946-ல் அரசியல் பிரவேசம். 1954-ல் புதுவை சட்டமன்ற உறுப்பினர். தேசிய உணர்வு, தொழிலாளர் நலன் போன்றவற்றில் ஈடுபாடு. இவர் எழுதிய பாண்டியன் பரிசு நூல் சாகித்ய அகடமி பரிசு பெற்றது. 1968-ஆம் ஆண்டு தமிழக அரசும், 1972-ஆம் ஆண்டு புதுவை அரசும் திரு உருவச்சிலை அமைத்தன. தமிழக அரசுஅவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துப் பெருமைப்படுத்தியது. இவ்வாறாக சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அடுத்த நிகழ்வாக 31.05.2019 அன்று, பணிநிறைவு பெறும் கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் முனைவர் அ. சினிவாசன் அவர்களுக்கு தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. செயலாளர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். புலவர். தங்க ஆறுமுகன், அவர்கள் பாராட்டு பேசினார். தலைவர் பேசுகையில் திருச்சி மாவட்டம் முசிறியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தனது கல்வியை முடித்து சிறப்பாக விளங்குகிறார் எனப் பாராட்டினார். ஏற்புரை ஆற்றிய முனைவர் சீனிவாசன், தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து, அவர் விரும்பியவாறு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து, பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கால்லூரி போன்றவைகளில் சிறப்பாகப் பணியாற்றியதை நெழிச்சியோடு குறிப்பிட்டு “அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். முனைவர் பு.பெ. இராமசாமி வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழகினார். செயலாளர் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.04.2019 அன்று இலக்கியச் சேலை திங்கள் இதழுடன் இணைந்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 327-ஆவது கூட்டம் 21.04.2019 அன்று இலக்கியச் சேலை திங்கள் இதழுடன் இணைந்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் க. ஞானப்பிரகாசம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .. விழாவில் “கொளுத்தும் வெய்யிலில் சில்லென ஒரு கவியரங்கம்” என்ற தலைப்பில், மரம், நீர்மோர், ஐஸ்கிரீம், கூழ், பூங்கா, குடை, வெள்ளரி, கைக்குட்டை, நுங்கு, குளு குளு அறை, இளநீர், கடற்கரை காற்று, தர்பூசணி, மழை என்னும் தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். “பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும்” என்ற தலைப்பில் பேச்சரங்கள் நடைபெற்றது. இலக்கியச் சோலை அண்ணாநகர் சிறப்பிதழை நீதியரசர் வெளியிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். திருவாளர்கள் புலவர் தங்க ஆறுமுகன், முனைவர் இ.ஜே. சுந்தர், கோ. ஞானப்பிரகாசம், சி. பாலுசாமி, வீ.சீ. கமலக்கண்ணன் ஆகியோருக்கு “தமிழ் மாமணி”, வழக்கறிஞர் ஜே. இரமேஷ் அவர்களுக்கு “வழக்கறிஞர் மாமணி”, முனைவர் அ. சீனிவாசன், அ.ப. மெய்கண்டார் ஆகியோருக்கு “கல்வி மாமணி”, திருவளார்கள் அரிமா துரை. சுந்தரராஜுலு, அரிமா த.கு. திவாகரன், எம். சரவணன், செல்வி ஷாரோன் ஆகியோருக்கு “சாதனை மாமணி”, மருத்துவர்கள் கு. இலக்குமணன், மு. சோமசுந்தரம், த. அருள்மொழி ஆகியோருக்கு “மருத்துவ மாமணி”, திருவாளர்கள் தி. ரங்கராஜன், ச. கலியமூரத்தி, திருமதி பாரததேவி, விஜய் ஆனந்த் ஆகியோருக்கு “ஊடக மாமணி”, திருவாளர்கள் பா. எழில் ரேஹன், பா. கிஷோர் ராஜ், இ. ராம்குமார், ஞா. கார்த்திகேயன், செ. கார்த்திகேயன், செல்வி பா. ஜனனி ஆகியோருக்கு “விளையாட்டு வித்தக மாமணி” விருதுகள் மாண்புமிகு நீதியரசர் அவர்களால் வழங்கப்பட்டன. அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். இலக்கியச் சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் கவிஞர் முனைவர் தமிழ்ச் செம்மல் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.03.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 326-ஆவது கூட்டம் 17.03.2019 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் கஸ்தூரி ராஜா அவர்கள் கலந்து கொண்டு “உலகத் தாய்மொழிநாள், உலக மகளிர் தின நாள்” ஆகியவை குறித்து சிறப்பாக உரை ஆற்றினார் உலகில் 6800 மொழிகள் இருப்பதாகவும், அதிகம் பேசப்படும் மொழி ஸ்பானிஷ் மொழி எனக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளில், அவரவர்கள் தாய்மொழியே ஆட்சி மொழியாகவும் பயன்படுத்தபடுகிறது என்று கூறினார். 162 நாடுகளில் தமிழ்மொழிப் பேசப்படுவதாக கூறினார். பெருஞ் சித்திரனர் மொழிப் பற்றிச் சொன்னது, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்நடை, மக்களின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனக் குறிப்பிட்டார். மார்ச் மாதம் 8-ஆம் நாள் கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் குறித்து பல்வேறு அறிஞர்கள் போராடினார்கள்.1857-ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய பெண்கள் 8 மணி நேர வேலைக்காக போராடியது. 1921 மார்ச் 8-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு சம உரிமை, கல்வி, சாதி, கலப்புத் திருமணம், கலித்தொகை, பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் பெண் விடுதலை, வரதட்சணை ஒழிப்பு போன்றவைகளுக்கு போராடியது போன்ற செய்திகளை கூறி, அவ்வையார் மணிமேகலை, காரைக்கால் அம்மையார், ஆண்டாள் மற்றும் சங்ககால இலக்கியங்களில் இருந்து பல்வேறு எடுத்துக் காட்டுகளை கூறினார். தலைவர் பேசுகையில், பெண்ணின் பெருமை குறித்து திரு.வி.க. கூறியதை தெளிவாகக் கூறினார். பெரியார், அண்ணா போன்றவர்கள் பெண் விடுதலைக்குப் பாடுபட்டதை சுட்டிக் காட்டினார். முன்னதாக செயலாளர் வரவேற்புரை ஆற்றி மார்ச் மாதம் பிறந்த நாள் கண்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். செயலாளர் நன்றி கூற, கூட்டம் நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.02.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 325-ஆவது கூட்டம் 17.02.2019 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் “தியாகச் செம்மல் சர்பிட்டி தியாகராயர் வாழ்க்கை வரலாறு” என்னும் தலைப்பில் சிறப்பாக உரை ஆற்றினார். வரவேற்புரை ஆற்றிய செயலாளர் சங்க உறுப்பினர் நெ.ரா. பத்ராசலம் அவர்கள் மறைவுக்கும், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மரண்மடைந்த 42 வீரர்கள் மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்தார். பிப்ரவரி மாதம் பிறந்த நாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தி அவரது தமிழ்ப் பற்று பொதுத் தொண்டு அரிமா இயக்கத்தில் அவரது சேவை போன்றவைகளை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். குறிப்பாக சென்னை மாநகராட்சி அலுவலராகப் பணிபுரிந்த போது அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்து பெருமையாக கூறினார். அரிமா முனைவர் திரு. திவாகரன் சர் பிட்டி தியாகராஜர் சென்னை கொருக்குப்பேட்டையில் பிறந்து நெசவுத் தொழில் செய்து வந்தார் எனக் குறிப்பிட்டு தொழில் விரிவடைந்த காரணத்தால் கொருக்குப்பேட்டையையும், அருகில் இருந்த தண்டையார்ப்பேட்டையையும் விலைக்கு வாங்கினார். மிகப்பெரிய செல்வந்தராகவும் விளங்கினார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் பல கைங்கரியங்களையும் செய்தார். பார்த்தசாரதி கோவில் குளம் தூர்வாரி சீரமைத்தது போன்ற காரியங்களைத் தன்னலம் கருதாது செய்து வந்தார். தண்டையார்பேட்டை சௌடேஸ்வரி கோவில் அம்மனுக்கு லண்டனில் இருந்து கண் வரவழைத்து பொருத்தினார். அவரது கைபட்டு கண் வைக்கப்பட்டதால் கோவில் ஒரு வாரம் மூடப்பட்டதை அறிந்து வேதனைப்பட்டார். எர்ராபாலு செட்டித்தெரு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க பெருமளவு பொருளுதவி செய்தும், கும்பாபிஷேகம் செய்ய வந்த ஜீயர், தியாகராயர் வந்தால் தீட்டுப்படும் என்று திரும்பச் சென்று விட்டார். பார்த்தசாரதி கோபில் கும்பாபிஷேகத்திலும் அவமானப்படுத்தப்பட்டார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.01.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 324-ஆவது கூட்டம் 20.01.2019 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக “தமிழவேள்” சிவாலயம் மோகன் அவர்கள் கலந்து கொண்டு “தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். முன்னதாக நமது சங்கத்தின் புரவலர் திரு. T.R. இராசு அவர்களின் துணைவியார் சஞ்சீவிபாய், மூத்த தமிழறிஞரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் க.பா. அறவாணன் ஆகியோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலளார் அரிமலா துரை. சந்ததராஜலு வரவேற்புரை ஆற்றினார். தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார். புதிததாக வந்திருந்த உறுப்பினர் திரு. கோபால் மாரிமுத்து அவர்கள் மாணவர்களின் தமிழ்ப்பற்றை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று திருக்குறள் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குவதாகத் தெரிவித்த அவர் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து அவையோர்களை தன்வயப்படுத்தினார். அடுத்து கோட்டக் மகேந்திரா நிறுவன துணைத் தலைவர் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களும், அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வி ஷாரோன் அவர்களும், மூத்த குடிமக்களின் நலனுக்காக தங்களது நிறுவனம் பல்வேறு திட்டங்கள் வைத்திருப்பதாகக் கூறி இது குறித்து விரிவாக விவாதிக்க வரும் 25.01.2019 அன்று அண்ணாநகர் சரவணபவன் உணவகத்தில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக கூறி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிரேத நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 16.12.2018 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 323-ஆவது கூட்டம் 16.12.2018 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மறைமலையடிகள் பெயரனும், மறைமலையடிகள் அறக்கட்டளை அறங்காவருமான மறை. திரு. தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “மறைமலையடிகளின் பன்முகப் பார்வை” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் பேசுகையில் மறைமலையடிகள் 21 வயதுக்குள் அனைத்துப் பாடங்களையும் படித்து முடித்தார். பாவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் ஆகியோர் பாராட்டுதல்களை பெற்றால். கல்லூரிக்கே போகாமல் கல்லூரி மாணவர்களுக்கு நூல் எழுதினார். தமிழ் மீதுள்ள பற்றால் வேதாசலம் என்னும் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ் பெயரையே வைத்தார் என்று குறிப்பிட்டார். திரு. தாயமானவன் பேசுகையில், அடிகள் 13 ஆண்டு கால்ம் கிறித்துவக் கல்லூரியில் பணி ஆற்றினார். ஆனால் அரசு ஆங்கிலமும், சமஸ்கிருதமும் ஆட்சிமொழி, தமிழ் விருப்பமொழி என்று ஆணை பிறப்பித்ததை எதிர்த்து பணியை ராஜினாமா செய்தார். கல்லூரி முதல்வர் மில்லர் அவர்கள் மாலைநேர வகுப்பாகத் தமிழை சொல்லிக் கொடுக்க கேட்டபோது 31/2 கோடி தமிழர்களுக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பல நூல்களை எழுதியுள்ளார். ஹிப்னாட்டிசம் மூலம் ஆஸ்துமா நோயை குணப்படுத்தி உள்ளார். மக்கள் நூறாண்டு வாழ, பொருந்தும் மனமும், பொருந்தா மனமும் என்ற நூலை எழுதினார். 60 நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு செய்திகளை அவையோருடன் பகிர்ந்து கொண்டார். முன்னதாக “உலகத் தமிழ்க் களஞ்சியம்” நூல் வெளியிடப்பட்டது. முனைவர் இ.ஜே. சுந்தர் அவர்கள் முன் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு தலைவர் மூலம் நூலை வழங்கினார். செயலாளர் வரவேற்புரை ஆற்றுகையில் நமது நங்க உறுப்பினரும், மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.ப. நாராயணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்து உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டினார். டிசம்பர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். செயலாளர் நன்றி கூறு கூட்டம் நிறைவடைந்தது.
18-11-2018-அன்று நடைபெற்ற 322ஆவது பொதுக்குழு கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18.11.2018 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 322-ஆவது கூட்டம் 18.11.2018 அன்று தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் “திருக்குறளில் அறம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அறம் என்ற சொல்லுக்கு பல்வேறு இலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டி, அறம் என்ற சொல்லுக்கு தகுதி அழுக்காறு, அவா, வெகுளி போன்று பொருள்களும் உண்டு என குறிப்பிட்டார். அரசன் எவ்வாறு அறம் போல் செயல்பட வேண்டும் என்று பொருட்பாலில் கூறியதையும், கடமைதான் அறம், என்று பாரதியார் கூறியதையும், அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதையும் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசிய தலைவர் அறம் என்ற பொருளில் வரும் பல குறள்களை தெளிவாகக் கூறினார். செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நவம்பர் மாதம் பிறந்த உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். மலேசியாவில் இருந்து வெளிவர இருக்கும் உலகத் தமிழ்க் களஞ்சியம் குறித்து, அதற்காக உழைத்த நமது உறுப்பினர் முனைவர் இ.ஜே. சுந்தர் அவர்களும், அவருக்கு உறுதுணையாக இருந்த புலவர் தங்க ஆறுமுகன் அவர்களும் இந்நூலைப் பற்றி அறிமுக உரையாற்றினார். சில உறுப்பினர்கள் முன்பதிவும் செய்தனர். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார். செயலாளர் நன்றி கூறு கூட்டம் நிறைவடைந்தது.