Author Archives: adminn

21-10-2018-அன்று நடைபெற்ற 321-வது கூட்டம்

21-10-2018-அன்று நடைபெற்ற 321-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.10.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 321-ஆவது கூட்டம் 21.10.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன் கலந்து கொண்டு
‘திருக்குறளில் “தலை” பற்றிய சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார்.
தலைவர் பேசுகையில், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
திருக்குறளில் பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தாலும் சிறப்பு விருந்தினர்
எடுத்துள்ள தலைப்பு சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டு, காமத்துப்பால் பேசியதை
வரவேற்றுப் பேசினார்.
திரு. சொ. பத்மநாபன் அவர்கள் பேசுகையில், திருக்குறளில் “தலை” என்ற
சொல் 38 இடங்களில் 41 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் திருவள்ளுவர் மனித உடலில் உள்ள அனைத்து
பாகங்களை குறித்தும் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார். தலை முதல் கால்
வரையிலான அனைத்து பாகங்களையும் அந்தந்த குறட்பாக்களை மேற்கோள்
காட்டிப் பேசினார். குறிப்பாக காமத்துப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பேசி
அவையோரைத் தன்வயப்படுத்தினார். “தலை” எனும் சொல் எந்த இடத்தில் எப்படி
பொருள் கொள்ளப்படும் என தக்க எடுத்துக் காட்டுகளுடன் கூறியது
அனைவரையும் வியக்க வைத்தது.
அண்மையில் மறைந்த திருவாளர்கள் கண்ணியம் குலோத்துங்கன், தமிழறிஞர்
கி.த. பச்சையப்பனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன் அவர்களின் துணைவியார்
தாமரைச்செல்வி ஆகியோருக்கு இரங்கல் தெவித்த பின், செயலாளர் வரவேற்புரை
ஆற்றினார். அக்டோபர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்
பொருளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூறுகையில், சங்க வளர்ச்சிக்கு ரூபாய்
ஐந்தாயிரம் நன்கொடை அறித்த உறுப்பினர் வடிவேலு அவர்களுக்கும் நன்றி
தெரிவித்தார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

19-08-2018-அன்று நடைபெற்ற 319-வது கூட்டம்

19-08-2018-அன்று நடைபெற்ற 319-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.08.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 319-ஆவது கூட்டம் 19.08.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, வில்லிவாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி
முதுகலைத் தமிழாசிரியாகப் பணியாற்றி வரும் கவிஞர் முனைவர்
கண்மணிபிரியா அவர்கள் “விடுதலை வேட்கையில் தமிழ்க் கவிஞர்களின்
பங்களிப்பு” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடக்கத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், முன்னாள் நாடாளுமன்ற
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அமுதா மெட்ரிக் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி வினோதினி சுதந்திர தின
சொற்பொழிவு ஆற்றினார். வில்லிவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி 11-ஆம்
வகுப்பு மாணவி எஸ். யோகபிரியா சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள 99
பூக்களின் பெயர்களை தனது நினைவாற்றல் மூலம் அவைக்கு எடுத்துரைத்தார்.
இந்த மாணவிகளுக்கு துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் நூல்கள்
பரிசளித்தார்.
தலைவர் பேசுகையில், பாரதியின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் நாட்டு
விடுதலைக்குப் போராடியதையும், தேசிய ஒற்றுமைக்குப் பாடுபட்டதையும்
தெளிவாகக் கூறினார். நாட்டு விடுதலைக்கு திரு.வி.க.வின் பங்களிப்பு
அளப்பரியது என்றார்.
சிறப்பு சொற்பொழிவாளர் முனைவர் கண்மணிபிரியா பேசுகையில்
பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி, அரவிந்தர்,வா.வே.சு. அய்யர், நாமக்கல்
கவிஞர் போன்றவர்கள் நாடு விடுதலை பெறவேண்டும் என எவ்வாறு
பாடுபட்டார்கள் என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் ஒரு மணி நேரம் பேசி
அவையோரைத் தன்வயப்படுத்தினார். இவர்களைத் தவிர திரைத் துறையைச்
சார்ந்தவர்களும் விடுதலைக்குப் பாடுபட்டதையும், குறிப்பாக மதுரை பாஸ்கரதாஸ் 29 முறை சிறை தண்டனை பெற்றதை நினைவில் கொணர்ந்தார்.
தோழர் ஜீவா, எஸ்.டி. சுந்தரம் போன்ற கலைஞர்கள் குறித்து விரிவாக
எடுத்துரைத்தார்.
முன்னதாக, செயலாளர் அரிமாதுரை. சுந்தரராசன், வரவேற்புரை ஆற்றினார்.
ஆகஸ்ட் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பெற்றனர். சுதந்திர
நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில், மாவட்ட
ஆட்சித் தலைவர் அவர்கள் நமது உறுப்பினர் திரு. மோகனசுந்தரம்
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். சங்க உறுப்பினர்களும்
பாராட்டினார்கள்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா-விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
செயலாளர்

அரிமா துரை. சுந்தரராசன் நன்றி கூற கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.

16-09-2018 அன்று நடைபெற்ற 21ஆவது பொதுக்குழு கூட்டம்

16-09-2018 அன்று நடைபெற்ற 21ஆவது பொதுக்குழு கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 21-ஆவது
பொதுக்குழு கூட்டம் 16.09.2018 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 21-ஆவது ஆண்டு
பேரவைக் கூட்டம் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கம் தலைமையில் 16.09.2018 அன்று
நடைபெற்றது.
2018 – 2019 ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் 31.03.2018
(முடிய) தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்குகள்
நிறைவேற்றப்பட்டன.
தணிக்கையாளராக திரு. D. சரத்குமார் அவர்களே தொடர்ந்து
நீடிப்பார். 2018-2020 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக
கீழ்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்னர்.
தலைவர் : புலவர் த.இராமலிங்கம்
துணைத் தலைவர்கள்:
அமுதா பாலகிருஷ்ணன், ஸ்ரீமதி செங்கடாசலம், இ. தர்மன்
செயலாளர் : துரை. சுந்தர்ராஜலு
பொருளாளர் : கோ. ஞானப்பிரகாசம்
இணைச் செயலாளர்கள் :
ச. கலியமூர்த்தி, திருமதி. பாரதிதேவி
செயற்குழு உறுப்பினர்கள் :
தி. ரங்கராஜன், து.சீ. இராமலிங்கம், வி. நாகசுந்தரம்,
வை. குமரேசன், இரா. பூபாலன், க. தனப்பால், இ.ஜே. சுந்தர்,
த. வடிவேலு, கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன்
சி. பாலுசாமி, சி. செயபால், இரா. மோகனசுந்தரம்,
மு. நாமதேவு, ம.ஆ. செல்வம், திருமதி ஜெயஸ்ரீ இராஜசேகர்

15-07-2018 – அன்று நடைபெற்ற 318-வது கூட்டம்

15-07-2018 – அன்று நடைபெற்ற 318-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.07.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 318-ஆவது கூட்டம் 15.07.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, தமிழ்ப்பணி ஆசிரியர், தமிழ்மாமணி வா.மு.சே.
திருவள்ளுவர் அவர்கள் “உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தமிழ்ப்பற்று”
என்னும் தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில், இன்று காமராசர் பிறந்தநாள் என்பதால் அவர் அவரது
கல்விப்பணி, கட்சிப்பணி, நிர்வாகத் திறமை ஆகியவை குறித்து சுருக்கமாக
பேசினார். அதே போல் மறைமலை அடிகள் பிறந்தநாள் குறித்தும் சில
கருத்துக்களைக் கூறினார். தனித்தமிழ் இயக்கம் கண்டவர் என்று கூறினார்.
தமிழ்மொழி மேல் உள்ள பற்றால் வேதாசலம் என்று பெற்றோர் இட்ட பெயரை,
மறைமலை என்று மாற்றிக்கொண்டார் எனக் கூறினார்.
தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் பேசுகையில், உலகின் பல
நாடுகளில் உள்ள தமிழர்களோடு தமக்குள்ள தொடர்பு குறித்து விரிவாகப்
பேசினார். மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கனடா போன்ற பல நாடுகளுக்குச்
சென்று, அங்குள்ள மக்களுடன் தனக்குள்ள நெருக்கத்தை எடுத்துக் கூறினார்.
மலேசியாவில் 523 பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக உள்ளதையும், அங்கு
சிறந்த தமிழ் இலக்கியத்துக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் டாலர்
பரிசளிக்கப்படுவதாகவும் கூறினார்.
மியான்மர் நாட்டில் கோவிந்தராஜப் பெருமாள் 5 கோடி ரூபாய் செலவில் ஒரு
தமிழர் கட்டியுள்ளார் என்றும், தட்டோண்ணப் பகுதியில் வள்ளுவர் கூட்டம்
உள்ளத்தையும் சுட்டிக் காட்டினார். கனடாவில் டொராண்டோ பகுதியில் அதிக
அளவில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருதாக கூறினார். குறிப்பாக உதயன்
பத்திரிகை இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறினார். தமிழ்க் கல்லூரியும்
உள்ளதாக கூறினார். தமிழ்மொழி ஆளுமை மொழியாக உள்ளதையும்
தெரிவித்தார். மொத்தத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் பல நாடுகளுக்கு
நேரில் அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய மரியாதை இல்லை என்று வருத்தத்தோடு
கூறினார்.
பாரிசில் உலக தமிழ் மாநாடு நடைபெற்றதை சுட்டிக்காட்டி, ஆண்டுதோறும்
கம்பர் விழா நடைபெறுவதை நினைவு கூர்ந்தார்.
முன்னதாக, காமராசர் பிறந்தநாளையொட்டி, அமுதா மெட்ரிக் பள்ளி 9-ஆம்
வகுப்பு மாணவி சுபஸ்ஸ்ரீ முருகன், 7-ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதி பிரபு
ஆகியோர் முறையே கவிதை மற்றும் சொற்பொழிவும் அளித்தனர்.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன், வரவேற்புரை ஆற்றினார். ஜூலை
மாதம் பிறந்த உறுப்பினர்கள் பாராட்டப்பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா-விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
நிறைவாக, நன்கொடை அளித்தவர்களுக்கும், இனிப்பு வகைகள் வழங்கிய
திரு. கலியமூர்த்தி அவர்களுக்கும் செயலாளர் நன்றி கூறினார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

20.05.2018 – அன்று நடைபெற்ற 316-வது கூட்டம்

Untitled-123456

 

20.05.2018 – அன்று நடைபெற்ற 316-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.05.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 316-ஆவது கூட்டம், தலைவர் புலவர்
த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 20.05.2018 அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ப. பானுமதி அவர்கள் “பாரதிதாசனின்
பெண்ணியம் போற்றுதல்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.
பாவேந்தர் படைத்த “சஞ்சீவி பருவத்தின் சாரல்” என்ற நூலில் வரும்
சிறப்புகளை அழகுத் தமிழில் எடுத்துரைத்தார்.
கணவனை
இழந்த பெண்ணை கைம்பெண் என்று பெயரிட்டு, இந்தச்
சமுதாயம் கொடுமைப்படுத்தியதை தனது பாடல்கள் மூலம் வன்மையாக
கண்டித்தார் எனக் கூறினார். கலப்புத் திருமணம், காதல் திருமணம், மறுமணம்
ஆகியவற்றை வரவேற்றதையும் தெரிவித்தார். சாதி, சமய வேறுபாடற்ற புதிய
சமுதாயம் காண விரும்பினார் என்றும் குறிப்பிட்டார்.
தலைவர் தனது உரையில், பாவேந்தர் அவர்கள், தன்னை சிறந்த கவிஞர்
என்று அறிமுகப்படுத்திய பாரதியாரைப் போற்றும் வகையில் தனது பெற்றோர்
இட்ட கனகசுப்புரத்தினம் என்னும் பெயரைத் தவிர்த்து, பாரதிதாசன் என்ற
பெயரை மாற்றி வைத்துக் கொண்டார் என்று குறிப்பிட்டார். தமிழை
துறைதோறும், துறைதோறும் வளர்க்க இளம் தமிழர்களே வீழ்ந்து விடாதீர்கள்,
எழுந்திருங்கள் என்று தனது பாடல்களின் வைரவரிகள் மூலம் அறிவுரைத்ததை
நினைவுபடுத்தினார்.
முன்னதாக துணைத் தலைவர், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். மே மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள்
பாராட்டப்பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தி வெற்றி
பெற்றவருக்கு பரிசு வழங்கினார்.
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

22.04.2018 – அன்று நடைபெற்ற 315-வது கூட்டம்

Apr18-1 Apr18-2 Apr18-3 Apr18-4 Apr18-5 Apr18-6 Apr18-7 Apr18-8 Apr18-9 Apr18-10 Apr18-11

22.04.2018 – அன்று நடைபெற்ற 315-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.04.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 315-ஆவது கூட்டம், வைணவச் செம்மல்
வழக்கறிஞர் நா. வேணுகோபால் நாயகர் அவர்களது நூற்றாண்டு விழா நிறைவு நாள்,
சங்கத்தின் இணைச் செயலர் து.சீ. இராமலிங்கம் இணையரின் திருமண நாள் பொன்விழா,
கவிஞர் அழகுக் கண்ணன் அவர்களது “கம்பனின் கவிதைச் சுவை” சிறப்புரை ஆகிய
முப்பெரும் விழாவாக தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
22.04.2018 அன்று நடைபெற்றது.
சிறப்புரை ஆற்றிய தலைவர் த. இராமலிங்கம், நா. வேணுகோபால் அவர்களது சிறப்பு
இயல்புகள் குறித்து தெளிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தார். அவரது கல்வித் தகுதி,
ஈடுபாடு கொண்ட இயக்கங்கள், அவர்தம் நீதிமன்ற பணிகள், அரசியல் ஈடுபாடு
போன்றவைகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். அவரது போராட்ட குணம், சுதந்திரம்
பெற அவரது போராட்டம் மற்றும் அவரது வெளிநாட்டு பயணங்கள், அவர் ஆற்றிய
ஆன்மீக பணிகள் இவை குறித்து விரிவாக உரையாற்றினார்.
சிறந்த வழக்கறிஞரும், வேணுகோபால் நாயகருடைய மகனுமான வே.
ராஜநாராயணன் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சிறப்பான ஒரு விழா எடுத்தது மிகவும்
மகிழ்ச்சி அடைவதாக தனது ஏற்புரையில் கூறி, வைணவம் குறித்து தொடர்
சொற்பொழிவுக்கு தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்தால் அதற்கான செலவினை ஏற்றுக்
கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
திருமண நாள் பொன்விழா காணும் து.சீ. இராமலிங்கம் அவர்கள் தமிழ்ச்சங்கத்திற்கு
ஆற்றிவரும் பணிகள், தொலை தொடர்பு துறையில் அவரது அயராத பணி போன்ற
சிறப்புகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். இந்த இணையர் மேலும் பல ஆண்டுகள்
நலமாக வாழ வாழ்த்து தெரிவித்தார்.
து.சீ. இராமலிங்கம் தனது ஏற்புரையில், நினைவில் வாழும் திரு. தஸ்தகீர் அவர்களது
வேண்டுகோளை ஏற்று தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இணைந்தது குறித்தும், பின்னர்
அவரது வழிகாட்டல் மூலம் தமிழ்ப்பணி ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய
சிறப்பான விழா எடுத்து தன்னையும் தனது துணைவியாரையும் பாராட்டியதற்கு
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
கம்பனின் கவிதைச் சுவை என்னும் தலைப்பில் கவிஞர் அழகுக் கண்ணன், கம்பனின்
எழுத்துக்கள் குறித்து உவமை நயத்தோடு உரையாற்றினார்.
முன்னதாக துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
ஏப்ரல் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
நண்பகல் உணவு அளித்த து.சீ. இராமலிங்கம், இனிப்பு வழங்கிய ச. கலியமூர்த்தி
ஆகியோர்க்கு பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி தெவிரித்தார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

18.03.2018 அன்று நடைபெற்ற 314-வது கூட்டம்

mar18-1 mar18-2 mar18-3 mar18-4 mar18-5 mar18-6 mar18-7

18.03.2018 அன்று நடைபெற்ற 314-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.03.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 314-ஆவது கூட்டம், 18.03.2018
அன்று சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன்
தலைமையில் நடைபெற்றது. உலகத் திருக்குறள் பேரவைப்
பொருளாளர் திரு. வெ. இராமமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார்.
தலைவர் முன்னுரையில், சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து
தலைமையுரை ஆற்றினார்.
“திருமழிசை ஆழ்வாரின் அன்பு நெறி” என்னும் தலைப்பில்
உரையாற்றிய திரு. வெ. இராமமூர்த்தி அவர்கள், ஆழ்வாரிகளின்
பெருமைகளை எடுத்து உரைத்து, தேவன் ஒருவனே, ஒன்றே குலம்
ஒருவனே தேவன், அவனை அன்பினால் மட்டுமே காண முடியும்.
அதற்காக நாம் பொறி புலன்களால் எழும் பற்றினைத் துறந்து, அரக்கு
இலச்சியினால் மூடி நல்வழிகளுக்குத் திறக்க வேண்டும். உன்னைத்
தவிர வேறு சரண் இல்லை என்று இறைவனிடம் அடைக்கலம் புகுவதே
சரணாகதி தத்துவத்தின் உயிர்க் கொள்கை. இவர் காட்டும் அன்பு நெறி,
அடைக்கலம், உள்ளத்தூய்மை, அடிமை செய்தல் ஆகியவற்றால்
உள்ளத்தைப் பெரும் கோயிலாக்கி வழிபடுதல் அனைவருக்கும்
வேண்டற்பாலன கற்போம், அறவழியில் நிற்போம் என்று விரிவாக
உரையாற்றினார்.
முன்னதாக, செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் பச்சையப்பன்
கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. சொ. பரமசிவம்
மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.மார்ச் மாரதம் பிறந்தநாள் கண்ட
உறுப்பினர்கள் பாராட்டப் பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தி
பரிசுகள் வழங்கினார். பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவடைந்தது.

17.11.2017 – 311- வது மாதாந்திரக் கூட்டம்

Photo with News - December 2017-3 Photo with News - December 2017-4Photo with News - December 2017-1Photo with News - December 2017-2

17.11.2017 – 311- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 311-ஆவது கூட்டம் 17.12.2017
அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கப்
பொதுச்செயலாளர் “இதயகீதம்” இராமனுஜம் அவர்கள் “திசை காட்டும்
பாரதி” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். மொழி,
இலக்கியம் ஒப்பீடு இல்லாமல் இருந்த காலத்தில் லண்டன், சீனாவுக்கு
இடையில் ஒப்பாய்வு நடந்ததை சுட்டிக்காட்டி, அந்த ஒப்பாய்வில்,
இத்தாலிய நாட்டின் மாக்கியவல்லி, சீன நாட்டின் கன்பூசியஸ்,
இந்தியாவின் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களுடன்
திருக்குறளும் ஆய்வு செய்யப்பட்டது.
நீண்ட விவாதத்திற்குப்பின், நேர்மை, நியாயம், சத்தியம் முதலிய
நல்ல அம்சங்கள் கொண்ட திருக்குறள் தாதன் சிறந்த இலக்கியமாக
தேர்வு செய்யப்பட்டது எனத் தெரிவித்தார். இதைத்தான் பாரதியின்
வரிகள் திசை காட்டுகிறது. மேலும் பாரதி சொன்ன கருத்துக்களை
விரிவான விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
தலைவர் பேசுகையில், சிறப்பு சொற்பாழிவாளரை அறிமுகப்படுத்தி,
பாரதியாரின் 116 பிறந்தநாள் விழா நடைபெறுகிறது எனக்கூறி
பாரதியாரின் பல்வேறு கவிதைகளை நயமாக எடுத்துரைத்தார். அன்று
பாரதி கூறிய பண்டமாற்றுதல், நதிகளை இணைத்தல் போன்ற
கருத்துக்கள் இன்றும் பேசப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு
மாணவி ஹேமாவதி அவர்கள் பாரதயைப் பற்றி உணர்ச்சிகரமான
உரையாற்றினார். அவரைப் பாராட்டி தமிழ்ச்சங்கம், அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் பொன்னாடை மற்றும் நூல் பரிசாக
வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் சிலரும் ரொக்கப் பரிசும்
வழங்கினார்கள்.
ஸ்ரீ லங்கா நாட்டின் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்
திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் தனது துணைவியார் சுமதி அவர்களுடன்
கலந்து கொண்டு சிறப்பித்தார்
அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்
போட்டியில் உலக அளவில் இரண்டாம் பரிசு பெற்ற முனைவர்
செங்கோட்டையன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக செயலாளர் அரிமா துரை சுந்தரராசன் வரவேற்புரை
ஆற்றி, டிசம்பர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
பொருளாளர் தி. ரங்கராஜன் அனைவருக்கும், குறிப்பாக நன்கொடை
வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கூட்டம் நிறைவடைந்தது.

19.11.2017 அன்று நடைபெற்ற 310-வது கூட்டம்

அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் 19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம் அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் 19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம் அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் 19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம் அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் 19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம் அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் 19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

19.11.2017 அன்று நடைபெற்ற 310-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 310-ஆவது கூட்டம் 19.11.2017
அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த புலவர் நன்னன் அவர்கள்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வரவேற்புரை ஆற்றிய து.சீ.
இராமலிங்கம், நவம்பர் மாதம் பிறந்த உறுப்பினர்கள் பெயர்களை
குறிப்பிடதலைவர் அவர்களுக்கு சிறப்பு செய்தார்.
தலைவர் பேசுகையில் தனிமனித முன்னேற்றத்திற்கும், சமுதாய
முன்னேற்றத்திற்கும் கல்வி அடித்தளமாக உள்ளது என்றார். வீடுதோறும்
கல்வி கூடங்கள் அமைக்க வேண்டும் என்ற பாரதியின் கருத்தினை
எடுத்துக் கூறினார்.
சிறப்புப் பேச்சாளர் குமணன் தனது உரையை கவிதை மூலமாக
இசையுடன் பாடி அவையோரை வியப்பில் ஆழ்த்தினார். வீடு வரை
உறவு என்ற பாடலுக்குப் புதிய விளக்கம் தந்தார். வீரபாண்டிய
கட்டபொம்மன் வீர உரையையும் பேசிக் காட்டினார். கவிதை
உள்ளத்தைத் தைக்கக் கூடியது. தமிழில் சிந்தனைகள்
தெளிந்திருக்கிறது என்று கூறினார்.
சங்கத்தின் புரவலர் திரு. வே.சு. வேணுகோபால் தமிழ்ச்சங்க
அறக்கட்டளைக்கு ரூபாய் 5001/- நன்கொடை அளித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி வினாவிடை நிகழ்ச்சி நடத்தி பரிசுகள்
வழங்கினார்.
பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.