21-04-2019-அன்று நடைபெற்ற 327-வது கூட்டம்

21-04-2019-அன்று நடைபெற்ற 327-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.04.2019 அன்று இலக்கியச் சேலை திங்கள் இதழுடன்
இணைந்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 327-ஆவது கூட்டம் 21.04.2019 அன்று இலக்கியச்
சேலை திங்கள் இதழுடன் இணைந்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் க. ஞானப்பிரகாசம் அவர்கள் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டார் ..
விழாவில் “கொளுத்தும் வெய்யிலில் சில்லென ஒரு கவியரங்கம்” என்ற தலைப்பில்,
மரம், நீர்மோர், ஐஸ்கிரீம், கூழ், பூங்கா, குடை, வெள்ளரி, கைக்குட்டை, நுங்கு, குளு குளு
அறை, இளநீர், கடற்கரை காற்று, தர்பூசணி, மழை என்னும் தலைப்புகளில் கவிஞர்கள்
கவிதை வாசித்தனர்.
“பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும்” என்ற தலைப்பில் பேச்சரங்கள் நடைபெற்றது.
இலக்கியச் சோலை அண்ணாநகர் சிறப்பிதழை நீதியரசர் வெளியிட்டு
சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திருவாளர்கள் புலவர் தங்க ஆறுமுகன், முனைவர் இ.ஜே. சுந்தர்,
கோ. ஞானப்பிரகாசம், சி. பாலுசாமி, வீ.சீ. கமலக்கண்ணன் ஆகியோருக்கு “தமிழ்
மாமணி”, வழக்கறிஞர் ஜே. இரமேஷ் அவர்களுக்கு “வழக்கறிஞர் மாமணி”, முனைவர்
அ. சீனிவாசன், அ.ப. மெய்கண்டார் ஆகியோருக்கு “கல்வி மாமணி”, திருவளார்கள்
அரிமா துரை. சுந்தரராஜுலு, அரிமா த.கு. திவாகரன், எம். சரவணன், செல்வி ஷாரோன்
ஆகியோருக்கு “சாதனை மாமணி”, மருத்துவர்கள் கு. இலக்குமணன், மு. சோமசுந்தரம்,
த. அருள்மொழி ஆகியோருக்கு “மருத்துவ மாமணி”, திருவாளர்கள் தி. ரங்கராஜன், ச.
கலியமூரத்தி, திருமதி பாரததேவி, விஜய் ஆனந்த் ஆகியோருக்கு “ஊடக மாமணி”,
திருவாளர்கள் பா. எழில் ரேஹன், பா. கிஷோர் ராஜ், இ. ராம்குமார், ஞா. கார்த்திகேயன், செ.
கார்த்திகேயன், செல்வி பா. ஜனனி ஆகியோருக்கு “விளையாட்டு வித்தக மாமணி”
விருதுகள் மாண்புமிகு நீதியரசர் அவர்களால் வழங்கப்பட்டன.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு
வரவேற்புரை ஆற்றினார். இலக்கியச் சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் கவிஞர் முனைவர் தமிழ்ச் செம்மல்
அமுதா பாலகிருஷ்ணன் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.