24-04-2022-அன்று நடைபெற்ற 376-வது கூட்டம்

24-04-2022-அன்று நடைபெற்ற 376-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.03.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 19.03.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பேரா. முனைவர் மணிமேகலை சித்தார்த்தன்
அவர்கள் உலக மகளிர் தினம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் உலக மகளிர் தினம் கொண்டாடுவது குறித்து பல்வேறு
தகவல்களை கூறினார். முக்கியமாக பிரான்ஸ் நாட்டில் வேலை செய்யும்
ஆடவர்களுக்கு அதிக சம்பளமும், அதே வேலையை செய்யும் மகளிருக்கு
குறைந்த சம்பளமும் கொடுத்து வந்ததாகவும், அதை எதிர்த்து மகளிர் சரி
சமமான சம்மளத்தை கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து
போராட்டம் நடத்தினார்கள். யுனெஸ்கோ மன்றம் வரையில் இது எடுத்து
செல்லப்பட்டு, யுனெஸ்கோ மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரே
மாதிரியான வேலையை செய்யும் ஆடர்வகளுக்கும், மகளிருக்கும் எந்த
வேறுபாடுமின்றி ஒரே சம்பளம் கொடுக்க வேண்டுமென்று அறிவித்த நாள்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பாடுபட்ட உலகத்தில் உள்ள சிறந்த
பெண்மணிகளை குறித்து விளக்கமாகவும், விரிவாகவும் கூறினார்.
தலைவர் பேசுகையில் பாரதியார், பாரதிதாசன் பாடிய பெண்ணுரிமை
பாடல்களையும், பெண் அடிமை தனத்தை எதிர்த்து புலவர்கள் பாடிய
பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.
முன்னதாக செயலாளர் வரவேற்றுப் பேசி அவையில் இருந்த மகளிரை
சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் கண்டு சொல், வென்று செல்
நிகழ்ச்சியை நடத்தி பரிசு வழங்கினார்.
துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.