21.02.2016 – உலகத் தாய்மொழி நாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.02.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
‘உலகத் தாய்மொழி நாள் விழா’ கொண்டாடப்பட்டது
சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் பேசுகையில் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசி, தமிழை வளர்ப்பதற்கு பாரதியார் கூறியதை நினைவு கூர்ந்தார்.
இறவாத புகழுடைய புதிய நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும், பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்த்து இயற்றல் வேண்டும். சென்றிடூவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து சேர்ப்பீர் எனக்கூறி தற்போது, 100 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழில்
பேச மாட்டார்கள் 40 நாடுகளில் தான் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் பல்வேறு கருத்துக்களைக் கூறினார். பங்களாதேசத்தில் 4 மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொன்ன காரணத்தினால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் அந்த நாள் தான் உலகத் தாய்மொழி நாளாக கொண்டாடுவதற்கு வித்திடப்பட்டது என்பதை நினைவூட்டினார். உலகத்தில் 6700 மொழிகள் இருந்ததாகவும் தற்பொழுது 3500 மொழிகள்தான்பேச்சு வழக்கில் உள்ளதாகத் தெரிவித்தார். உலக நாடுகள் அவை (யுனஸ்கோ) 07.11.1999 அன்று அவரவர் தாய்மொழியை ‘உலகத் தாய்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டது.
85 மொழிகளுக்கு தமிழ் ஊற்று மொழியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், வேற்று கிரகத்தில் என்ன மொழி பேசப்படும் என்பதை அறிய 7 மொழிகள் தேர்வு செய்யப்பட்டதில் அதில் தமிழ் மொழியும் ஒன்று என்ற
தகவலையும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் ஆங்கிலம் பேசுவதாக சொல்வது தவறு என்று சொல்லி 160 நாடுகளில் 6 சதவிகிதம் பேர்கள் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவதாக தெரிவிததார். அவர் இந்தியன் வங்கியில் பணியாற்றிய போது தமிழ் பயன் படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்ததர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார், இணைச் செயலாளர்
ஞானப்பிரகாசம் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

