19.03.2017 – திருநாவுக்கரசர் தேவாரத்தில் பிற சமயம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.03.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 302-ஆவது மாதாந்திரக் கூட்டம்
19.03.2017 அன்று சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
தலைமையில் நடைபெற்றது. முனைவர் இரா. நாராயணன்
அவர்கள் எழுதிய “திருநாவுக்கரசர் தேவாரத்தில் பிற சமயம்”
என்னும் நூல் செம்மொழி தமிழ் ஆய்வு மைய பதிவாளர் முனைவர்
முகிலை இராஜபாண்டியன் அவர்களால் வெளியிடப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழக வைணவத் துறை தலைவர் முனைவர்
கலியன் சம்பத்து அவர்கள் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
முனைவர் முகிலை இராஜபாண்டியன் பேசுகையில், முனைவர்
இரா. நாராயணன் அவர்கள் விடாமுயற்சி, கடினமான உழைப்பு
ஆகியவற்றை குறிப்பிட்டு, தன்னை விட வயதில் சிறியவர்
என்றாலும், தான் அவரது ஆசிரியராக இருந்து வழி நடத்தியதை
குறிப்பிட்டார். இந்த நூல் அனைத்து சமயங்களின் கொள்கைகளை
பிரதிபலிப்பதாக உள்ளது என குறிப்பிட்டார். தனது அலுவலக
பணியையும் ஒதுக்கி வைத்து தனது மாணவரின் நூல் வெளியீடு
விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார்.
அவரது உரை அனைத்து உறுப்பினர்களையும் கவர்ந்தது.
முனைவர் கலியன் சம்பத்து பேசுகையில் நூலைப் பற்றியும்,
அதன் ஆசிரியைப்பற்றியும் சிலாகித்துப் பேசினார். நூலின் பல்வேறு
அம்சங்கள் குறித்து பேசிய அவர் இது ஒரு சிறந்த ஆய்வு நூல் என்று
கூறினார்.
தலைவர் புலவர் த. இராமலிங்கம்
பேசுகையில் சைவம்,
வைணவம் ஆசிய சமயங்களின் கோட்பாடுகள் இரண்டையும்
ஒப்பாய்வு செய்த ஒரு ஆய்வு நூலாக விளங்குவதாக குறிப்பிட்டார்.
நூலை ஆய்வு செய்த வேலம்மாள் குழுமத்தைச் சேர்ந்த பேரா.
விஜயகுமார் நூலை முழுமையாக ஆய்வு செய்து, பல செய்திகளை
தனக்கே உரிய பாணியில் அவையோருக்கு விளக்கினார்.
முன்னதாக அரிமா துரை. சுந்தரராசன் வவேற்புரை ஆற்றினார்.
இம்மாதம் பிறந்தநாள் காணும் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
முதன் முறையாக சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட கம்பன்
கழக செயலாளர் திரு. இலக்கிய வீதி இனியவன் அவர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
இலக்கிய பீடம் நடத்திய விழாவில் சிறந்த சிறுகதைக்கான
சிறப்புப் பரிசு பெற்ற அண்ணாநகர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர்
கவிஞர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு
முனைவர் கலியன் சம்பத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி
நடத்தி பரிசுகள் வழங்கினார்.
நன்றி கூறிய பொருளாளர் திரு. ரங்கராஜன், பிறந்த
நாளையொட்டி சங்க வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கிய ஸ்ரீமதி
வெங்கடாசலம், திருமதி பாரததேவி அவர்களுக்கும், திருவாளர்கள்
வெ. செல்லப்பா, தி. ரங்கராஜன் ஆகியோருக்கும் நன்றி கூறினார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் முனைவர் நாராயணன்
அனைவருக்கும் குறிப்பாக தனது குடும்பத்தாருக்கும், குறிப்பாக
தனது மனைவி திருமதி நளினி அவர்களுக்கும் நன்றி கூறினார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.









