18-11-2018-அன்று நடைபெற்ற 322ஆவது பொதுக்குழு கூட்டம்

18-11-2018-அன்று நடைபெற்ற 322ஆவது பொதுக்குழு கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.11.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 322-ஆவது கூட்டம் 18.11.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் “திருக்குறளில்
அறம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அறம் என்ற சொல்லுக்கு பல்வேறு இலக்கியங்களில் இருந்து
மேற்கோள்காட்டி, அறம் என்ற சொல்லுக்கு தகுதி அழுக்காறு, அவா, வெகுளி
போன்று பொருள்களும் உண்டு என குறிப்பிட்டார். அரசன் எவ்வாறு அறம்
போல் செயல்பட வேண்டும் என்று பொருட்பாலில் கூறியதையும், கடமைதான்
அறம், என்று பாரதியார் கூறியதையும், அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம்
குறிப்பிடுவதையும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசிய தலைவர் அறம் என்ற
பொருளில் வரும் பல குறள்களை தெளிவாகக் கூறினார்.
செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நவம்பர் மாதம் பிறந்த உறுப்பினர்கள்
பாராட்டப்பட்டனர்.
மலேசியாவில் இருந்து வெளிவர இருக்கும் உலகத் தமிழ்க் களஞ்சியம்
குறித்து, அதற்காக உழைத்த நமது உறுப்பினர் முனைவர் இ.ஜே. சுந்தர்
அவர்களும், அவருக்கு உறுதுணையாக இருந்த புலவர் தங்க ஆறுமுகன்
அவர்களும் இந்நூலைப் பற்றி அறிமுக உரையாற்றினார்.
சில உறுப்பினர்கள் முன்பதிவும் செய்தனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
செயலாளர் நன்றி கூறு கூட்டம் நிறைவடைந்தது.