17-02-2019-அன்று நடைபெற்ற 325-வது கூட்டம்

17-02-2019-அன்று நடைபெற்ற 325-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.02.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 325-ஆவது கூட்டம் 17.02.2019 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் “தியாகச்
செம்மல் சர்பிட்டி தியாகராயர் வாழ்க்கை வரலாறு” என்னும் தலைப்பில் சிறப்பாக
உரை ஆற்றினார்.
வரவேற்புரை ஆற்றிய செயலாளர் சங்க உறுப்பினர் நெ.ரா. பத்ராசலம் அவர்கள்
மறைவுக்கும், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மரண்மடைந்த 42 வீரர்கள்
மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் பிறந்த நாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தி அவரது தமிழ்ப் பற்று பொதுத்
தொண்டு அரிமா இயக்கத்தில் அவரது சேவை போன்றவைகளை விரிவாகவும்,
விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். குறிப்பாக சென்னை மாநகராட்சி அலுவலராகப்
பணிபுரிந்த போது அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்து பெருமையாக கூறினார்.
அரிமா முனைவர் திரு. திவாகரன் சர் பிட்டி தியாகராஜர் சென்னை
கொருக்குப்பேட்டையில் பிறந்து நெசவுத் தொழில் செய்து வந்தார் எனக் குறிப்பிட்டு
தொழில் விரிவடைந்த காரணத்தால் கொருக்குப்பேட்டையையும், அருகில் இருந்த
தண்டையார்ப்பேட்டையையும் விலைக்கு வாங்கினார். மிகப்பெரிய
செல்வந்தராகவும் விளங்கினார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் பல
கைங்கரியங்களையும் செய்தார். பார்த்தசாரதி கோவில் குளம் தூர்வாரி சீரமைத்தது
போன்ற காரியங்களைத் தன்னலம் கருதாது செய்து வந்தார்.
தண்டையார்பேட்டை சௌடேஸ்வரி கோவில் அம்மனுக்கு லண்டனில் இருந்து
கண் வரவழைத்து பொருத்தினார். அவரது கைபட்டு கண் வைக்கப்பட்டதால்
கோவில் ஒரு வாரம் மூடப்பட்டதை அறிந்து வேதனைப்பட்டார்.
எர்ராபாலு செட்டித்தெரு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க பெருமளவு
பொருளுதவி செய்தும், கும்பாபிஷேகம் செய்ய வந்த ஜீயர், தியாகராயர் வந்தால்
தீட்டுப்படும் என்று திரும்பச் சென்று விட்டார். பார்த்தசாரதி கோபில்
கும்பாபிஷேகத்திலும் அவமானப்படுத்தப்பட்டார்.