


16-12-2018-அன்று நடைபெற்ற 323-வது கூட்டம்


அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.12.2018 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 323-ஆவது கூட்டம் 16.12.2018 அன்று தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது.
மறைமலையடிகள் பெயரனும், மறைமலையடிகள் அறக்கட்டளை அறங்காவருமான
மறை. திரு. தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “மறைமலையடிகளின்
பன்முகப் பார்வை” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில் மறைமலையடிகள் 21 வயதுக்குள் அனைத்துப் பாடங்களையும்
படித்து முடித்தார். பாவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் ஆகியோர் பாராட்டுதல்களை
பெற்றால். கல்லூரிக்கே போகாமல் கல்லூரி மாணவர்களுக்கு நூல் எழுதினார். தமிழ்
மீதுள்ள பற்றால் வேதாசலம் என்னும் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ் பெயரையே வைத்தார் என்று குறிப்பிட்டார்.
திரு. தாயமானவன் பேசுகையில், அடிகள் 13 ஆண்டு கால்ம் கிறித்துவக் கல்லூரியில்
பணி ஆற்றினார். ஆனால் அரசு ஆங்கிலமும், சமஸ்கிருதமும் ஆட்சிமொழி, தமிழ்
விருப்பமொழி என்று ஆணை பிறப்பித்ததை எதிர்த்து பணியை ராஜினாமா செய்தார்.
கல்லூரி முதல்வர் மில்லர் அவர்கள் மாலைநேர வகுப்பாகத் தமிழை சொல்லிக் கொடுக்க
கேட்டபோது 31/2 கோடி தமிழர்களுக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.
பல நூல்களை எழுதியுள்ளார். ஹிப்னாட்டிசம் மூலம் ஆஸ்துமா நோயை குணப்படுத்தி
உள்ளார். மக்கள் நூறாண்டு வாழ, பொருந்தும் மனமும், பொருந்தா மனமும் என்ற நூலை
எழுதினார். 60 நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு செய்திகளை அவையோருடன்
பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக “உலகத் தமிழ்க் களஞ்சியம்” நூல் வெளியிடப்பட்டது. முனைவர் இ.ஜே.
சுந்தர் அவர்கள் முன் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு தலைவர் மூலம் நூலை
வழங்கினார்.
செயலாளர் வரவேற்புரை ஆற்றுகையில் நமது நங்க உறுப்பினரும், மருத்துவப்
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.ப. நாராயணன் மறைவுக்கு
அஞ்சலி செலுத்து உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டினார்.
டிசம்பர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு வழங்கினார்.
செயலாளர் நன்றி கூறு கூட்டம் நிறைவடைந்தது.
