15-06-2021-அன்று நடைபெற்ற 352-வது கூட்டம்

15-06-2021-அன்று நடைபெற்ற 352-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.06.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 352-ஆவது காணொலிக் கூட்டம்
15.06.2021-ஆம் நாள் ஞாயிறு மாலை 06.30 மணிக்கு மணவை முஸ்தபா
அவர்களின் 86-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரிமா த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை ஆற்ற,
செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மருத்துவ மாமணி டாக்டர் மு. குமரேசன் மற்றும் கல்விச் செம்மல்
முனைவர் மு. பொன்னவைக்கோ சிறப்புச் சொற்பொழிவாளர்களாகப்
பங்கேற்றனர். பேரா. முனைவர் மறைமைலை இலக்குவனார் அவர்கள் சிறப்புச்
சொற்பொழிவாளர்களை அறிமுகம் செய்து உரை ஆற்றினார். சங்கத்தின் தலைவர்
புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். டாக்டர்
மு. குமரேசன் அவர்கள் முஸ்தபா அவர்களின் “மருத்துவக் கலைச்
சொல்லாக்கம்” என்னும் தலைப்பிலும் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள்
முஸ்தபா அவர்களின் “கணினியியல் கலைச் சொல்லாக்கம்’ என்னும்
தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியாக பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.