04-08-2019-அன்று நடைபெற்ற 331-வது கூட்டம்

04-08-2019-அன்று நடைபெற்ற 331-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
04.08.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 331-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 04.08.2019
அன்று நடைபெற்றது.
சங்க உறுப்பினர் திரு. ந. ஜெயபால் அவர்கள் எழுதிய “இவர்களும்
நமக்குள்ளே இருக்கிறார்கள்” என்னும் சிறுகதை தொகுப்பு நூல், சாகித்திய
அகடமி விருது பெற்ற திரு. வண்ணதாசன் அவர்கள் வெளியிட,இ திரு.
ஜோதிபாண்டியன் பெற்றுக் கொண்டார். தலைவர் பேசுகையில் நூல்
சிறப்பாக அமைந்து உள்ளது என்று பாராட்டினார்.
திருவாளர்கள் வண்ணதாசன், சிதம்பரம் குடியரசு, அருண், திருமதி இரா.
ஆனந்தி, ஹேமா தனசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு
விருந்தினர்களாக வந்திருந்த கலைமாமணி ஏர்வாடி எஸ்.
இராதாகிருஷ்ணன் மற்றும் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர்
பாராட்டப்பட்டனர்.
முன்னதாக செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
நூலாசிரியர் ந. ஜெயபால் ஏற்புரை ஆற்றினார். பொருளார் கோ.
ஞானப்பிரகாசம் நன்றி கூற நண்பகல் உணவுக்குப்பின் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.