1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா

1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்
முப்பெரும் விழா
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர்
திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா, தமிழ்ச் சங்கத்தின்
சார்பில் அண்ணாநகர் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய விழாக்கள்
31-01-2015 அன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம்
அவர்கள் தலைமை உரையில் சங்க செயற்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய புதுச்சேரி மாநில
குறைதீர்ப்பு ஆணையத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் கோ. வெங்கட்ராமன்
அவர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றி வருகிற பணிகள் குறித்தும், பேச்சுப் போட்டியில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், கலந்து கொண்ட
மாணவ/மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி அரியதொரு சிறப்புரை
ஆற்றினார்,
விவேகானந்தா கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு. ம. இளங்கோவன் அவர்கள்
தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழாச் சிறப்புரை ஆற்றினார், துணைத்
தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில்,
தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருது பெற்ற, முனைவர் கஸ்தூரி ராஜா,
திருவள்ளுவர் விருது பெற்ற திருக்குறள் பாஸ்கரன் ஆகியோர்
பாராட்டப்பட்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது
ஒரு கவிக்காலம்” என்ற தலைப்பில் உலகளாவிய அளவில் நடத்திய கவிதைப்
போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியைச் சேர்ந்த கவிஞர்
ஸ்ரீ விவேக் பாரதி (இவருக்கு வித்தக இள்ங்கவி என்றும் பட்டமளிக்கப்பட்டது),
புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னைச் சேர்ந்த
கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்கக் காசுகள்
பரிசளிக்கப்பட்டன.
இவைகளை சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் துபாய் தமிழர் சங்கமம் சார்பில்
வழங்கினர்.
தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற
வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் R. சுபிக்ஷா, தி.தி.
மீனலட்சுமி, ஜெயகோபால் கரோடியா மெட்டிரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி
பிரகீதா ஆகியோருக்கு T.R. இராசு அவர்கள் நன்கொடைமூலம் ரொக்கப் பரிசுகள்
வழங்கப்பட்டன. அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நா. ஜனனிக்கு
சிறப்புப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
பொருளாளர்தி. ரங்கராஜன் அவர்கள் நன்றி கூறினார்.
நண்பகல் உணவிற்குப் பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
